ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

தெய்வ விதிமுறைகள் சில :-

உபாசகர்கள் தன் தெய்வசக்தியில் வெற்றி பெறும்வரை தெய்வத்தின்மீது மட்டுமே பாசமும் பக்தியும் வைக்க வேண்டும், உறவின்மீதோ, பொருளின்மீதோ, உணர்ச்சியின் மீதோ கவனம் வைத்தல் கூடாது. உறவின்மீது பாசம் வைத்தால் தெய்வம் வாராது . இது ஒரு சாபமான விஷயம்தான் எனினும் உண்மை இதுதான். உறவுக்கும் நமக்கும் சம்மந்தம் முறிக்க வேண்டும். அதற்காகவே தீட்சை முறைகள் உண்டு.

ஆனால் மெய்அன்பர்களே பயந்துவிடாதீர்கள் இது சித்துக்கள் பெற விரும்புவோருக்கான விதிமுறையாகும். அருள்வாக்கு பயிற்சிபெற உறவை முறிக்க வேண்டிய அவசியம் இல்லை. உறவு பந்தத்தை மேலும் மேலும் வளர்க்க அதே தெய்வத்தின் உதவியைத்தான் நாம் நாடுகிறோம். நமக்கும் தெய்வம் அருள்புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் சித்துக்கள் பெறுவதென்பது அவ்வாறில்லை. இறைவனின் வேலையை நான் எடுத்ததுச் செய்வது ஆகும். எனவே பொதுமனிதனாக இருந்து தெய்வ பயிற்சி செய்ய வேண்டும். எனவே பந்தம் என்பது அவர்களுக்கு உலகமாக இருக்க வேண்டும். தன் உறவை மட்டுமே குடும்பமாக சித்து பயிற்சியாளர்கள் பாவிக்கக் கூடாது .

இதையெல்லாம் மீறி உறவை விலக்கும் தீட்சையை உறவிடம் பெறாமல் சித்துபெறும் மந்திரம் கூற யத்தனித்தால் நமக்கு பித்துபிடிக்க வைக்கும் அளவிற்க்கு கஷ்டம் வந்துவிடும் கவனம்.
அருள்வாக்கு கூற முயலுங்கள் சில நியாயமான கோரிக்கையை இயற்கையை தர்மத்தை மீறாமல் உங்கள் சக்தியால் பிராத்தனை செய்து முடித்துக்கொடுங்கள் அதுபோதும்.

சித்துக்கள் செய்து சித்தர்கள ஆக விரும்புவோரை இறைவனே தேர்ந்தெடுப்பார். எனவே அந்த அசை உங்களுக்கு வராமலிருப்பது நல்லது. இதை கூறுவதால் தவறாக நினைக்க வேண்டாம். சித்துக்கள் பெற தவநெறி மிக கடுமையானது. இந்த பிறவி அதற்கு போதுமானதாக இருக்காது என்பது எம் ஆய்வாகும்.


அக்காலம் வேறு இக்கால சூழல் வேறு என்பதை அறிக. காசியில் பல தவயோகிகளை சந்தித்து அவர்கள அனுபவத்தை கேட்டபின்னரே இந்த கருத்தை எழுதியுள்ளேன். சாதாரண பயிற்சி செய்யும்போதே இறைவன் விரும்பினால் நம்மை சித்தனாக்க உயர்த்த உதவலாம். அந்த முடிவு இறைவனோடது . நம்மிடம் இல்லை . ஒருவருடைய பக்தியை அளவிட்டு சொல்கிறவன் கடவுளாக மட்டுமே இருக்க முடியும். நாமே நம் பக்தியை சொல்லிக்கொள்ளக்கூடாது.

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .