ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

உடல் பாவிக்கு பரிகாரம்

மனமது செம்மையானாலும் இந்தஉடல் பாவிகளுக்கு உரியதானால் உடல்பாவத்தை தீர்த்தேயாகவேண்டும் . பாவம் தீர்க்கும் உபாயம் :-

பலருக்கு ஆத்மா சுத்தமானதாக இயல்பாக படைக்கப்பட்டிருப்பார்கள். இதனால் இயல்பாகவே மோசமான குணம் கொண்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவர்கள் மட்டும் நற்குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் அதிகளவு அந்த குடும்பத்தில் நற்குணம் கொண்டவனே கஷ்டப்படுவான். அனைவரின் எதிர்பார்ப்பும் அந்த ஒருவன்மேல் திருஷ்டி இருப்பது மட்டும் காரணமில்லை. அவன் ஆத்மா முன் ஜென்மத்துடைய தொடர்புகொண்டு நற்பண்புகள் நிறைந்தவனாக இருந்தாலும் இந்த ஜென்மத்தில் அவன் ஆத்மாவை தாங்கிய உடல் பெற்றோர் கொடுத்தது. அந்த உடல் கொடுத்தவர் பாவியாக இருந்தாலோ அல்லது சாபம் கொடுத்துக்கொண்டே இருந்தாலோ அல்லது மேலும் மேலும் பாவம் செய்து கொண்டே இருந்தாலோ இவர் பாவ உடலை வைத்துள்ளதால் கஷ்டபட்டேயாக வேண்டும். இதற்கு பரிகாரம் ஒன்று பெற்றோர் தன் பாவத்தை தாங்களே ஏற்று கழிக்க வேண்டும். அல்லது அந்த உடலைக் கொடுத்த பெற்றோர் திருந்திய பின் இறக்க வேண்டும். அப்போதுதான் உடல் பாவம் தடைபடும். அல்லாதபோது ஆரம்ப கட்டத்திலேயே தீட்சை பெற்று தனக்கும் தன் உறவிற்கும் சம்மந்தம் இல்லை என்று சாமியாராகிவிட வேண்டும். அல்லது இறைவன்தான் உதவ வேண்டும். வேறு பரிகாரமாக இந்த உடலை வெருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உடல் பாவ கஷ்டம் தீரும். இதை கடந்துதான் யாவருக்கும் கிரகம் வேலை செய்கிறது.

மனம் என்பதை நாம் கொண்டுவந்தாலும் உடல் பெற்றோரின் மரபுக்கு சம்பந்தம் ஏற்படுவதால் உடலுக்கு பலருடைய பாவ புண்ணிய தொடர்பு கொண்டு தாக்கப்படுகிறது. இதனால் தெய்வ அருள்கூட கிடைக்க தடை ஏற்படுகிறது.
அதேபோல் பாவப்பட்ட ஆத்மாவை கொண்டவனுக்கு புண்ணியம் செய்தவர்களின் உடல் கிடைத்தால் பலன்கள் மாறுபடும். எது எப்படியோ முடிந்தவரை உடலை கொடுத்தவருக்கு வணக்கம் செய்தலும், கடமையைச் செய்து சந்தோஷம் கொடுத்தலையும் சரியாக செய்தால், உடலை கொடுத்தவரும் ஆசிர்வாதம் செய்துகொண்டு தர்மங்களை பெருக வைத்திருந்தால் பிள்ளைகள் வளமாக வாழ்வார்கள். ஆன்மிக தெய்வசக்தி பெருக்கத்திற்கு இதுவும் ஒரு தடையாகும். எனவே இதை சரிசெய்து சகல வரங்களையும் பெருங்கள்.

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .