ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

ருத்ராட்சம் யாருக்கு நன்மைதீமை தரும் :-

ருத்ராட்சம் யாவரும் அணியும் பொதுவான விதை அல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே அபூர்வமாக நன்மைகள் செய்துவிடும் தெய்வீகதன்மை கொண்டது. ஆனால் எல்லோருக்கும் அவரவர் சக்தியை பெருக்கிக் கொடுக்கும். அவரவர் சக்தி என்பது உடல் வலிமை அல்ல. தவ வலிமை, கோபம், பாவம், அகங்காரம், வைராக்கியம், புண்ணியம் என அவரவர் செயலே அவர்களின் சக்தியாகும். மனதளவில் எச்செயலை செய்கிறார்களோ அச்செயலை மேலும் பெருக்கி பன்மடங்காக திருப்தி தந்துவிடும் ஆற்றல் பெற்றது ருத்ராட்ச மணியாகும்.

ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும். தவம் இயற்றுபவர்கள் ருத்ராட்ச மணியை உடலெங்கும் அணிய காரணத்தை ஆராய்ந்தால் ஒரு தகவல் கிடைக்கும். அது யாதெனில் தவத்தை பன்மடங்காக பெருக்கி நமக்கு கொடுக்கும் வல்லமை ருத்ராட்ச மணிக்கு உண்டு என்பதாகும். அதேபோல் பாவமற்றவனோ அல்லது பாவத்தை போக்கிய புண்ணியனோ ருத்ராட்சம் அணிந்து ஒரு தர்மம் செய்தாலும் பன்மடங்காக அதன் பலம் திரும்ப கிடைக்க ருத்ராட்சம் உதவும். இவ்வாறு இருக்க பாவிகள் அணிந்தால் பாவம் பெருகி பன்மடங்காக திரும்ப கிடைக்கும் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.

பலரும் அனுபவத்தில் ஒரு தகவலை கேட்டிருக்கலாம். ருத்திராட்ச மணி அணிந்ததிலிருந்தே எனக்கு தரித்திரம் பிடித்தாற்போல் இருக்கிறது. கஷ்டத்தின்மேல் கஷ்டம் பெருகிக்கொண்டே போகிறது என்று பலர் கூற கேட்டிருக்கலாம். இது உண்மைதான். அணிந்தவன் பாவியானால் பாவத்தை பெருக்கி அணிந்தவருக்கே திரும்ப கொடுப்பதுதானே ருத்ராட்சத்தின் பணி. எனவே பாவியானால் இந்த நிலை உண்டாகத்தான் செய்யும். ருத்ராட்ச மணியின் சக்தி என்னவோ காவி உடையின் பலனும் அதேதான். சிறிதும் மாற்றமற்ற தன்மைகள் கொண்டது. தர்பை புல்லும் இதே சக்தி பெற்றதுதான். ஞானிகள் இம்மூன்றையும் பயன்படுத்திய நோக்கம் எதனால் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஞானிகள் அணிவதால் நாங்களும் அணிகிறோம் என்று அவர்களை பார்த்து பின்தொடர்பவர்கள் இனியாவது புரிந்துகொண்டு முதலில் பாவத்தை முழுமையாக தொலைத்து குணங்களை நல்லவிதமாக மாற்றி பிறகு இம்மூன்றையும் பயன்படுத்துங்கள்.

இறுதியாக ஒரு தகவல் அறியவும். நாங்கள் பாவம் செய்தவர்கள்தான் என்பதை நாங்கள் வைத்தள்ள பற்று பாசம் மூலமே அறிந்துள்ளோம். ஆனாலும் சிவபெருமானின் மீது அளவுகடந்த அன்பு வைத்தமையால் நாங்கள் சிவ அம்சமான ருத்ராட்சத்தை அணிய விரும்புகிறோம். இதற்கு வேறு மார்க்கமே இல்லையா என உங்களுக்கு கேட்கத் தோன்றும். இதிற்கு பதில் மிக எளிது அறிக :- சிவபெருமானுக்கு ஏற்புடையது என்னவெனில் தூய வெள்ளை ஆடை, சுத்த திருநீறு, சைவ உணவு, சைவ குணம், சைவ செயல் ஆகும். இதைக் கடைபிடித்தாலே போதும். ருத்ராட்ச மணியை அடையாள சின்னம்போல் பாவித்து அணிந்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
ருத்ராட்ச மணி மாலை அணிந்து காவிஆடையோ, வெள்ளை ஆடையோ அணிந்த பாவமுள்ள மனிதனுக்கும் ஒரு நன்மையும் உண்டு அது என்னவெனில் நாம் இப்பிறவி முழுக்க அனுபவிக்க வேண்டிய துன்பத்தை ஒரு நாளிலோ ஒரு வருடத்திலோ அல்லது சில வருடங்களிலோ மொத்தமாக அனுபவித்து பாவத்தை கழிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க. வாழ்நாள் முழுக்க சிறுக சிறுக அனுபவிக்க இறைவன் நமக்கு உதவி செய்து துன்ப பாவத்தை போக்க உதவியும் செய்கிறார். அப்படி இருந்தும் நம்மால் அதையே தாங்க முடியவில்லை. அப்படியிருக்க சில வருடங்களிலேயே துன்பத்தை அனுபவிப்பதனால் அத்துன்பம் எப்படி இருக்கும் என எண்ணிப் பாருங்கள். எனவே துன்பத்தை சில நாளிலேயே சேர்த்து அனுபவிக்க உங்களுக்கு பக்குவமும் வைராக்கியமும் உங்களுக்குள் வளர்த்துக்கொண்டு பின்பு ருத்ரம் அணிய ஆசைப்படுங்கள். இது பலபல அன்பர்களின் அனுபவமாகும். மோட்சத்தை விரும்பும் ஞானியர் அணிவதில் ஒரு நியாயம் இருக்கிறது ஆனால் சங்கடத்தை விரும்பாத சம்சாரி அதிஷ்டத்திற்க்காக ருத்ரமணி அனிவது அறியாமையாகும் .

(இது பாவம் செய்து சேமித்து வைத்துள்ள மனிதர்களுக்கே பொருந்தும். புண்ணியர்களுக்கு இதன் பலன் அற்புதமாக அமையும்.)

அறிக :- ருத்ராட்சம் ஒரு நெருப்பு விதையாகும். அதை அணிய தகுதி சில ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். முதலில் பித்ரு பூஜை, குலதெய்வம் போற்றுதல், சூரிய வழிபாடு செய்தல், கங்கையை மதித்தல், ஜீவகாருண்யம் கடைபிடித்தல், தவமியற்றுதலும் அல்லது தர்மதானம் செய்தலும் மிகமிக அவசியமாகும். ரத்தின கற்களை விட பலமடங்கு சக்தி பெற்றது ருத்ராட்ச மணி என்பதை அறிக.
பலர் ஸ்டைலுக்காக ருத்ராட்சமணி அணிந்து அதன் விளைவால் குடும்ப பிரிவு எதனால் ஆனது என்றே தெரியாமல் கோயில் கோயிலாக குறைநீங்க அலைவதை கண்டிருக்கிறேன். இவர்களாகவே இறுதியில் உணர்ந்தது ருத்ராட்ச மணி அணிந்த பின்புதான் தரித்திரமே எனக்கு பிடித்தது என்று புலம்புவார்கள் . இதற்கு காரணம் முன்பு கூறியதுதான் ருத்ராட்சமணி ரத்தத்தை சுத்தப்படுத்தும். அடுத்து பாவத்தை அனுபவிக்க வைத்து பாவத்தை விரட்டும்.

ருத்ரமணி ஒன்றை புதிதாக உருவாக்காது. ஆனால் நம்மிடம் இருப்பதை பெருக வைக்கும். எனவே முறையாக பாவத்தை நிவர்த்தி செய்து பின்பு ஜீவகாருண்ய தொடர்போடு ருத்ரமணி அணியுங்கள். குறையேதும் ஏற்படாது. ஜபம் தவத்தில் ஈடுபடுபவர்கள் மட்டும் அணிவது சிறப்பு என்பது எம் கருத்தாகும். ருத்ராட்ச மணியும் சனிஷ்வரரும் ஒரே குணம் கொண்டவர்கள். ஆத்மாவில் இருப்பதை பெருக வைப்பார்கள். ஆயுளை கொடுப்பதும் இவர்கள்தான். பாவத்தை அனுபவிக்க வைத்து மோட்சத்தை அளிப்பதும் இவர்கள்தான். மனிதனை மனிதனாக உணர்ந்து வாழவைப்பதும் இவர்கள்தான் என்பதை அறிக.

ருத்ராட்சமணியில் ஒருகோடு முதல் பல கோடுகள் வரை உள்ளன அவற்றிற்க்கு ஒவ்வொரு மாதிரியான பலனை எழுதிச்சென்றுள்ளார்கள் அது தவறில்லை ஆனால் அது யாருக்கு பலனை கொடுக்கும் என்று தெளிவாக மறைக்கப்பட்டதும் , ருத்ராட்சத்தின் எதிர்சக்தியை வெளிப்படுத்தாததே இன்றைக்கு பல குழப்பத்திற்க்கு காரணமாகும் . பல ஆண்டுகளுக்கு முன்வரை ருத்ராட்சத்தை பயன்படுத்தியவர்கள் யார்யார் என்பதையும் பரவலாக பொதுமக்கள் ஏன் பயன்படுத்த பயன்தனர் என்பதையும் சற்றே ஆராய்ந்தால் உண்மை உங்களுக்கே விரிவாக கிடைக்கும் . சிவனை பூசிப்போர் அக்னி எனும் ருத்ரத்தை மதிக்கத்தெறிந்தவராக இருப்பது மிக அவசியம் இல்லையேல் அந்த அக்னி நம்மை எரித்துவிடும் . எனவே கவனமாக கையாளுங்கள் நன்மை பல பெருங்கள் .
உலகில் படைக்கப்பட்டது அனைத்துமே தெய்வ அம்சம் பொருந்தியதுதான் இதில் நமக்கு உடன்பட்டதை மட்டுமே கையாளவேண்டும் . நெறுப்பு தெய்வாம்சம் என்பதால் நாம் தொட்டால் சுடாமல் இருக்காது கவனமாகத்தான் அதை கையாள வேண்டும் .

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .