ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 


மனித சக்தி, வான சக்தி, உயிர்களின் சக்தி :-

சக்தியை அடிப்படை சக்தி, உயர்நிலை சக்தி என இருவகையாகப் பிரிக்கலாம். அடிப்படை சக்தியை மூன்று பாகமாக பிரிக்கலாம். அவை மனித சக்தி, வான சக்தி, இவ்விருசக்திகளையும் பிரதிபலிக்கும் இதர உயிர்களின் சக்தி. இவ்வாறாக மூன்று வகையாக பிரித்து சக்திகளின் உள்ளடக்கத்தை காணலாம்.

1. மனித சக்தி :- மனிதனின் சக்தி அவன் மனதில் மட்டுமே குவிந்துள்ளது. அதாவது ஆத்மாவின் கட்டுப்பாடுகள் ஆசை, நிராசை போன்ற செயல்களால் குழம்பியுள்ளது. இதை அவன் கட்டுப்படுத்தினால் மகா சக்தியாக உருவாகலாம். இந்த சக்தி மகாசக்தியாக உருவாகுவதால் முன்ஜென்ம நினைவுகள் மற்றும் அடுத்தவர் மனதோடு தொடர்புகொண்டு மற்றவர் மனதில் உள்ளதை அறியும் ஆற்றல்கள் உண்டாகின்றன. இந்த மனசக்தியால் வெகுதொலைவில் உள்ளதையும் மிக அருகில் வைத்து காட்சியாக காணலாம். வெளியில் இருக்கும் பல ஆத்மாக்களோடு தொடர்புகொள்ளலாம். மனித அறிவுக்கு கேள்விப்படாத, தெரியாத விஷயங்களையும் மனசக்தியை பெருக்குவதால் அறியலாம்.

நாம் எப்போதாவது நினைப்பது அப்படியே நடக்கும். எப்போதாவது எதாவது ஒருவருக்கு சொன்னால் (சாபமோ அல்லது ஆசியோ எதாவது ஒன்று) அப்படியே பலிக்கும் அல்லவா அதை மனசக்தி பெருக்குவதன் மூலம் தொடர்ச்சியாக இந்நிகழ்வுகளை கையாளலாம். ஆக மனசக்தியின் ஆற்றல் சர்வ வல்லமை கொண்டது. இந்த மனசக்தியை திடப்படுத்தி ஒருநிலைப்பட்ட பயிற்சியால் வலிமையாக உருவாக்கினால் நாம் வெளியில் உள்ள ஆத்மாவை தன் இஷ்டத்திற்கு ஆட்டிவைக்கலாம், வான சக்தியை நிலையாக தக்கவைக்கலாம் அல்லது தடுத்து காத்துக்கொள்ளலாம்.
இதுவே மனம் சாதாரணமாக உள்ளபோது அதாவது சராசரி மனித மனமாக உள்ளபோதும், துயர மனமாக உள்ளபோதும், மிக துயரமனமாக உள்ளபோதும் வெளியில் உள்ள வேறொரு சக்தி நம்மை ஆளும். அதாவது நம் மனதை அதன் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்யும்.

நம் மனசக்தி எச்சூழலிலும் சிறிதாவது சக்தியை பெற்று வெளிசக்தியை எதிர்க்கும். ஆனால் இதில் பலமானது பலவீனமானது என்ற அடிப்படையில் பார்த்தோமேயானால் பலவான் வெற்றி பெறுகிறான். மனசக்தியை தாண்டிய வெளிசக்திகள் அதாவது வானசக்தி, பிரதிபலிக்கும் சக்திகள் எப்பொழுதும் தன் சக்தியை குறைத்துக்கொள்வதில்லை. ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால் சிறு ஏற்ற இறக்கம் அவைகளுக்கும் உண்டு. எனினும் அவைகள் தேவைகள் என்ற ஆசையோ எதிர்பார்ப்போ இல்லாததால் அவைகள் நிலையான சக்தியாகவே பெரும்பாலும் இருக்கின்றன. ஆனால் மனித மனம் ஆசை எதிர்பார்ப்பு இவைகளில் சிக்கியுள்ளதால் அடிக்கடி மனம் பலகீனம் அடையும். இதனால் வெளிசக்தி எளிதாக ஆள்கிறது.

மனித மனசக்தி பலத்தை சில காரணிகளால் பலப்படுத்திக்கொள்ளலாம். தியானத்தாலும், தவத்தாலும், வைராக்கியத்தாலும், தேவை பூர்த்தியாவதாலும், வெற்றி பெறுவதாலும், முன்னோர் ஆத்மா உதவியாலும், கிரக சக்திகளாலும், பிரதி பலிக்கும் வெளி சக்திகளினாலும், பலம் பெற்ற வேறொரு ஆத்ம சக்தியாளராலும் பலம் பெறலாம் என்றாலும் தன் சக்தியை தானே பலப்படுத்த முயற்சிப்பதே சிறந்தது. ஏனெனில் வெளியில் இருந்து கிடைக்கும் சக்தி நிலையாக கிடைத்துக்கொண்டே இருப்பதில்லை. அவ்வப்போது சில காரணங்களால் அவைகள் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. எனவே தன் மனசக்தியை பலப்படுத்த முயற்சிப்பதே சிறந்த வழி. அடுத்து

2. வானசக்தி :- அதாவது கிரகம் மற்றும் பிரபஞ்ச சக்தியை குறிப்பதாகும். வான சக்தியின் உதவியால்தான் உயிர்கள் உருவாகின்றன. வளர்ச்சி பெறுகின்றன. எனவே அண்டத்தில் உள்ள அனைத்தும் (மனித) பிண்டத்திலும் உள்ளன. எனவே கிரக வானசக்திகள் தன் உடமையின் மேல் ஆதிக்கம் செலுத்திய வண்ணமே உள்ளன. கொடுப்பதை மீண்டும் எடுக்கும் எடுத்ததை மீண்டும் கொடுக்கும் இந்த சூத்திரத்தை பயன்படுத்துவது வான சக்தியாகும்.

உதாரணமாக சொல்ல வேண்டுமானால் மழையை கொடுக்கும் பின்பு ஆவியாக்கி எடுக்கும். பிறகு மீண்டும் மழையாக கொடுக்கும் என்பதை அறிவீர்கள். அதேபோல்தான் உயிர்களிடமும் தன் பணியை செய்கின்றன. பிறப்பை கொடுப்பதுபோல் இறப்பையும் கொடுக்கிறது. இதை உங்களால் நம்ப முடியாவிட்டாலும் உண்மை இதுதான். பூமியில் உள்ள தண்ணீரை ஆவியாக்கி வானமேகத்தில் தேக்கி வைத்து மீண்டும் இருமேக மோதலில் அதாவது + மற்றும் - மேகங்கள் மோதலில் மீண்டும் நீர்ஆவிகள் தணிந்து மழையாக பொழிகின்றன. அதேபோல் தான் மனித உயிர் உருவாகும் விதமும் இருஆத்ம உடல் மோதலால் ஒரு உயிர் உருவாகி அதன் பயணத்தை தொடர்கிறது . பிறகு முடிக்கிறது . மீண்டும் தொடர்கிறது. ஒரு சங்கிலி தொடர்போல் பூமிக்கும் ஆகாயத்திற்கும் ஆத்ம வளையம் சுற்றிக்கொண்டே இருக்கிறது . ஒரு ஆத்மா எந்த ஆத்மாவோடு பற்று பாசம் வைக்கிறதோ அந்த ஆத்மா மீண்டும் மீண்டும் பூமிக்கு வந்து செல்லும். இதனால் அந்த ஆத்மா பிறவா வரமாக கிரகத்தில் பதியாது .

அதேபோல் எந்த ஆத்மா பூமியில் தன் பிறப்பை விட்டு செல்கிறதோ அந்த பிறப்பு தன்னை நினைவுகூர்ந்தால் அதனோடு தொடர்புகொள்ளும் (இதைத்தான் முன்னோரிடம் உதவி பெறுதல் என்பர். இந்த நினைவுகூர்தல் முறையே இன்றுவரை கடைபிடிக்கின்றனர் தெவசம் என்ற பெயரில்.) நாம் எத்தனை ஆத்மாவை பூமியில் சந்தோஷப்படுத்துகிறோமோ, எவ்வளவு சந்தோஷமான மனதோடு வாழ்கிறோமோ அந்த பதிவு நம் பிறப்பு வம்ச ஆத்மாவோடு பதிந்து கிரக பதிவில் பதிய வழிசெய்யும். அவ்வாறு கிரக பதிவில் பதிவது மிக மிக முக்கியம். ஏனெனில் அந்த ஆத்மாவே புண்ணியமடைந்தது என்று அர்த்தம். அந்த ஆத்மாவே எப்பொழுதும் உதவி செய்யும்.

இல்லாதபோது கிரக சுற்று வட்டப்பாதையில் சுழலும் ஆத்மாக்கள் மீண்டும் எப்பொழுது வருகிறதோ அப்போதுதான் அதன் உதவி கிட்டும். அதேபோல் நாம் பல ஆத்மாக்களை வேதனைபட வைத்துக்கொண்டிருந்தும், நாமும் வேதனையை முக்கியத்துவம் கொடுத்து வரவேற்று வாழ்ந்தாலம் நம் பிறப்பு முன்னோடி ஆத்மா நம்மோடு தொடர்புகொள்ள முடியாதபடி வலுவிழக்கும்.
அது சரி இந்த முன்னோடி ஆத்மாக்களால் நமக்கு என்ன நன்மை என்று கேட்கத் தோன்றும் அல்லவா? அறிக. நம் முன்னோடி ஆத்மாக்கள் கிரக பதிவில் பதிந்தால்தான் ஜாதகத்தில் நம் உறவு நிலைகளை சரியாக சொல்ல முடிகிறது. கிரக பதிவில்பதியாத ஆத்மாக்களை ஜாதகத்தில் பாதகமாக உள்ளதையும் காண உதவுகிறது. ஒவ்வொரு உறவு ஆத்மாவும் ஒவ்வொரு கிரக மண்டலத்தில் பதிகிறது என்பதை ஜோதிட கிரகங்களை வைத்து உறவின் சாதக பாதக பலனை காணமுடிகிறது.

இதுஒருபுறம் இருக்க, தன் ஆத்ம பதிவை பூமியில் விட்டு வந்துள்ளது அல்லவா அதை காண மிக ஆவல் கொண்டதாக முன்னோடி ஆத்மா உள்ளது. அந்த ஆவல் நம் மனதிலும் இருந்தால் நம்மோடு தொடர்பு கொள்ளும். இதை முறையாக பயன்படுத்தினால் இவர்களால் வேண்டியதை பெறலாம். மேலும் கிரகத்தில் நிலையாக பதிந்துவிட்ட ஆத்மா புண்ணிய ஆத்மா என்றாகும். அந்த ஆத்மா நம் குடும்பத்தில் அருள் வழங்கி நம்மை தன் நிலையில் இருந்து வெகுவாக உயர்த்திவிடும்.

இதுவே கிரக சுழற்சி வளையத்தில் இரந்து கிரக பதிவில் நிலைக்காத ஆத்மாக்கள் மறுபிறவி கொண்டு நம் இல்லத்திலேயே பிறவி எடுக்கும். ஆனால் அந்த பிறவி கண்ட ஆத்மா பாவமா புண்ணியமா என்தை பொருத்தும் தன் குண கலப்படம் கொண்டும் ஜீவிக்கும். அதன்படியே வாழ்க்கையும் அமையும். ஆக இந்த மறுபிறப்பில் நன்மையும் இருக்கலாம், தீமையும் இருக்கலாம்.

பலரின் வாழ்க்கை சந்தர்ப்பத்தின் தவறுகளால் ஒருவரின் ஆன்மாவை பலமாக காயப்படுத்தி இதனால் ஆத்ம உறவே இல்லாமல் போகும் அளவிற்கு சாபம் கொடுத்துவிட்டுச் செல்லும். முன்னோடி ஆத்மா தன் உறவை துண்டித்துக்கொள்ள முயல்கிறது . தன் பலத்தை வேறொரு ஆத்மாவிற்கு விரும்பினால் கொடுக்கும். ஆனால் தான் சபித்துவிட்டு வந்த தன் இனஆத்மாவிற்கு தராது . இந்தநிலையில் கிரக சுற்றில் அதற்கு முன்னால் பதிந்த ஆத்மாக்கள் தன் சுழற்சி வளையத்தில் வாழும் ஆத்மாவை சந்திக்கும்போது கிரகங்கள் மூலம் பலனை கொடுக்கிறது . அதேபோல் தன் சுய வலிமையால் கிரக பதிவில் அமர்ந்த ஆத்மாக்கள் தன் ஆத்ம பதிவுகளாக வாழக்கூடியவர்களின் தவறைக் கண்டு கோபம் கொண்டால் இதே கிரகங்கள் மூலம் தண்டனையையும் வழங்கும். அதேபோல் வாழும் ஆத்மாக்கள் மேல் பாசம் கொண்டு உடலை நீத்த ஆத்மாக்கள் தன் வாழும் காலத்தில் சுயவலிமையை சேர்த்துக்கொள்ளாமல் இருந்து ஆத்ம கிரக சுற்று வளையத்தில் சுற்றிவரும்போதும் கிரகத்தின் மூலமாகத்தான் பலனை கொடுக்கும்.

ஆனால் இவைகளின் பலன் பலமற்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வலிமை இல்லா ஆத்மாக்கள் கிரக மண்டலத்தில் நீச்சமாகவே பதிகின்றன. இங்கொரு விஷயத்தை அறிக. அதிக பலம், பலம், சுமார், பலகீனம், மிகவும் பலகீனம் என்ற முறையில் எதாவது ஒரு விதத்தில்தான் நம் முன்னோடி ஆத்மாக்கள் பதிகின்றன. அவை வாழ்ந்தகாலத்தில் எப்படி வாழ்ந்தனவோ அதாவது புண்ணியம் செய்து பலத்தை பெற்றோ அல்லது பாவம் செய்து பலத்தை இழந்தோ அல்லது எதையும் செய்யாமல் வெகுளியாக இருந்தோ அல்லது பாவம் புண்ணியம் இரண்டையும் செய்தோ என எப்படி வாழ்ந்தனரோ அதற்குரிய பலனை கிரக மண்டலத்தில் ஆட்சி, உச்சம், நீச்சம் என பதவியை பெறுகின்றனர்.

இந்த பதவிகளோடில்லாமல் அவை எப்பதவியில் பதிந்தாலும் அவைகளின் சக்திக்கு ஏற்ப ஒளி பொருந்தியதாகவும் அமையும். (இதுவே மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய இடமாகும்.) ஒளி மங்கியதாகவும் அமையும். அந்த ஒளி நம் உடலிலும் உண்டு. நம் உடலில் உள்ள ஒளிச்சுடரும் கிரகம் மற்றும் ஆத்மாவின் ஒளிச்சுடரும் ஒரு தொடர்பில் இருந்துகொண்டே இருக்கும். இதில் நம் உடலை தந்த முன்னோடி ஆத்மா நம் மன பேதகத்தால் தன் ஒளிச்சுடரை நம்மில் செலுத்தாமல் போகலாம். இதனால் பேரிழப்பு நமக்குத்தான். அவ்வாறு முன்னோடி ஆத்மாவின் ஒளிச்சுடர் தொடர்பு இல்லாதபோது கிரக ஒளிச்சுடர் உதவும். இந்த கிரக ஒளிச்சுடரை வைத்துதான் ஜாதகத்தில் இந்த கிரகம் இப்பொழுது வரும்போது யோகமாக இருக்கும் பாதகமாக இருக்கும் என்றெல்லாம் கூறுவார்கள். கிரகங்களும், ஆத்மாக்களும் ஏன் மனிதனுக்கு பாதகங்களை கொடுக்கின்றன என்றால் அதற்கு மனிதனே காரணம் ஆவான். ஆம் அவன் மன சிந்தனையின் ஏற்றத்தாழ்வு, உணர்ச்சியின் ஏற்றத்தாழ்வு, சுவாசத்தின் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றால் உண்டாகும் நேர்மறை எதிர்மறை ஒளிச்சுடர் முரண்பாடாக கிரகத்துடன் தொடர்பு கொள்ளும். இதனால் பலன்களை நிர்ணயிப்பது மனிதனாகவே இருக்கிறான்.

சீராக உள்ள சுவாசம், உணர்ச்சி, சிந்தனை மனம் எப்பொழுதும் நேர்மறை ஒளியோடு கிரகத்தோடும் ஆத்மாவோடும் தொடர்புகொண்டு நல்ல பலனையே பெறும். இதுவே எதிர்மறையாக மாறும்போது தான் அந்த எதிர்மறை பதிவுகளை ஏற்று தீய பலன்களை தருகிறது. இதனால்தான் கிரகங்களால் நிலையான பலனை தர முடிவதில்லை . கிரகங்கள் நம்முடைய நேர்மறை எதிர்மறை பதிவுகளை மட்டும் வைத்து பலன் வழங்குவதில்லை. நம் முன்னோரில் ஆறு தலைமுறைகளின் பதிவுகளையும் எடுத்து கையாள்கிறது. நமக்கும் நமக்கு பின்னால் வரும் ஆறு தலைமுறைக்கும் தொடரும் வரை அந்த பதிவுகள் இருக்கும். அடுத்தடுத்த பிறவிகள் தொடர தொடர தலைமுறையை கிரகங்கள் தொடர்வதை விடாது. இவ்வாறாக கிரகங்கள் நம்மை ஆட்சி செய்தாலும், நம் முன்னோர்கள் இதை ஞானத்தால் கண்டுணர்ந்து ஜாதகமாக முன்னமே அறிய உதவினார்கள்.

மேலும் நமக்கு சாதக கிரக ஒளிச்சுடர் எது எப்போது அது நம்மை தொடர வருகிறது எப்போது முடிவடைகிறது என்பதையெல்லாம் குறிப்புகளாக கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். அதில் மிக முக்கியமாக ஒன்றை ஆய்வு கண்டு நம் முன்னோர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். அதுதான் மன சக்தி, வான சக்தி. இவ்விரு சக்திகளின் ஒளிச்சுடரை பிரதிபலிக்கும் இதர உயிர் சக்திகள் ஆகும்.

நம் முன்னோர்கள் முதல் இன்றுவரை தொடரும் பிரச்சனை என்னவெனில் மனிதன் ஆசை, உணர்ச்சி, பாசம் இவைகளுக்கு அடிமையானவன். எனவே இவன் ஒளிச்சுடர் சக்தி நேர்மறை எதிர்மறை கலந்தே இருக்கும். இதனால் கிரக சக்திகளிடம் இருந்து தொடர்ந்து நல்ல பலனை பெற முடியாது. அதேநேரத்தில் தீய பலனையும் அனுபவிக்கக்கூடாது. மனிதனுக்கு மனிதன் எதிரியாக உள்ளதையும் தவிர்க்க முடியாது.

எனவே தற்காத்துக்கொள்ள என்ன வழி என்று ஞானஆய்வு செய்தபோது கண்ட விஷயம்தான் மூலிகைகள், நவகற்கள், மந்திர ஒலிகள், மனஆற்றல், மூலிகை கூட்டுமுறைகள், உலோகங்கள், மரங்கள், உப்பு, தண்ணீர், பாஷானங்கள், நெருப்பு என பலதும் கண்டனர். இவைகளில் மூலிகைகள், நவகற்கள், உலோகங்களில் நவகிரகத்தில் உள்ள அத்தனை சக்திகளின் பிரதிபலிப்பை கண்டனர். இதிலும் மூலிகைகளில் ஆத்மா, கிரகம், பிரபஞ்சம், தெய்வம், தேவதைகள், உயிர்களின் சக்திகள் யாவும் ஒவ்வொன்றிலும் அடங்கியிருப்பதைக் கண்டனர். இவைகளைத்தான் இன்றும் மாந்திரீகம் மற்றும் வைத்தியத்தில் கையாண்டுக்கொண்டிருக்கிறோம்.

அடிப்படை சக்திக்கு மூலிகைகள் மற்றும் மேற்சொன்ன சக்தி பொருட்கள் தேவைக்கேற்ப பயன்படுகிறது. உயர்நிலை சக்தி பெற்றவருக்கு மூலிகையோ மற்ற பொருட்களோ அவசியம் இல்லை.

ஆக அடிப்படை சக்தியில் மனித சக்தியும் வானசக்தியும் ஆத்மா சக்தியும் அதன் செயலும் அதன் அவசியத்தையும் அறிந்து கொண்டீர்கள். இனி இவைகளை அடிப்படை பயிற்சியைக் கொண்டு உங்களை வலுப்படுத்திக்கொண்டால் உயர்நிலை பயிற்சிஇன்றி தன்னால் தெரியவரும்.

மேற்கண்ட கட்டுரையை சாதாரணமாக படித்தால் குழப்பும். மிக ஆழமாக மனதை வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து படித்தால் பல ரகசியங்கள், மனித பிரபஞ்ச தொடர்புகள், ஆத்மாவின் முக்கியத்துவங்கள் யாவும் புரியும். இக்கட்டுரை விஷயங்களை புரிந்துகொள்ளாமல் யாருமே ஆன்மிக பயிற்சி செய்தும் தெளிவுபெற முடியாது. எனவே இதை நன்கு உள்வாங்கி பின் பயிற்சியில் ஈடுபட்டால் புரிந்து பயம் பதட்டம் குழப்பம் இன்றி தெளிவான இலக்கை நோக்கி பயன் அடையலாம்.

நம் மனஈடுபாட்டின் அவசியமும், பித்ரு பூஜையின் அவசியமும், நவக்கிரக முக்கியத்துவமும் இதில் அடங்கியிருப்பதை அறிந்திருப்பீர். அதேபோல் இறுதியாக ஒரு விஷயத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆத்மாவையும், மனதையும் வசப்படுத்த முடியாதவர்களால் மூலிகையையும் கிரகத்தையும் வசப்படுத்த முடியாது. நம் மனம் நமக்கு வசமாகாதபோது மந்திரமும் வசமாகாது என்பதை அறிக. இதுபோல் பல அறிய தகவல்கள் நம் பயிற்ச்சியில் உண்டு .

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .