ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

மயான பூஜை மண்டை ஓடு ரகசியம்

சுடுகாட்டு இடுகாட்டு பூஜை

சுடுகாட்டையும் இடுகாட்டையும் மயானம் என்று ஒரு சொல்லில் அழைக்கலாம். இந்த மயானத்தை மாந்திரீக செயல்கள் பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். வினைகளை உருவாக்கவும், வினைகளை அழிக்கவும் ஆத்மாக்களை வசியப்படுத்தவும், ஆத்மாவை சாந்தப்படுத்தவும், ஆத்மாவை ஏவிவிடவும், ஏவல்களை ஆத்மாக்களைக் கொண்டு செய்யவும், புதிய சக்தியை உருவாக்கவும், கூட்டு ஆத்மாக்களை ஒன்றிணைத்து தெய்வ சக்தியை கட்டுகட்டவும் எல்லை காவல் தெய்வங்களை வாய்கட்டி ஊரினுள் மாந்திரீகத்தால் கெடுதல மற்றும் நன்மைகள் செய்யவும் மயான பூஜையை பயன்படுத்தலாம்.

இன்னும் பல செயலுக்காக மயான பூஜையை செய்வார்கள். நரபலி வித்வேஷனம், மாரணம், பத்தினிபெண் வசியம் போன்ற தகாத செயல்களை செய்யவும் மயான பூஜையை பயன்படுத்துகிறார்கள். மேலும் ருத்ர பூஜை, பைரவ பூஜை, அகோர பூஜை, சவதியானம், உடல் தகன யாகம், கபால பூஜை போன்றவற்றையும் மயானத்தில் தான் செய்ய வேண்டும்.

( இந்த மயான பூஜை செய்ய அடிப்படையில் சில தகுதிகள் ஏற்படுத்திக்கொண்டபின்னரே செய்ய முற்பட வேண்டும்.)

ஒரு மண்டலமாவது குலதெய்வ பூஜை, உடற்கட்டு பூஜை செய்யவேண்டும். அப்போதுதான் உடலுக்கும் ஆத்மாவிற்கும் பாதுகாப்பு கவசம் உண்டாகும். நல் தெய்வங்களில் ஒரு ஆயுதம் ஏந்திய பெண் தெய்வத்தை தேர்ந்தெடுத்து அதற்கு அஷ்டமி திதியில் அல்லது பௌர்ணமி, அமாவாசை திதியில் எலுமிச்சை பழத்தை அறுத்து பலி கொடுத்து வழிபடும் முறையை தொடர்ந்து செய்து வரும் ஒருவரே மயான பூஜையை பாதுகாப்பாக செய்ய முடியும். இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் மயான பூஜைக்கு போவோரை ஆரம்பத்திலேயே சில தடைகளை ஊர் எல்லை தெய்வம் உருவாக்கும். அதை புரிந்து கொள்ளாமல் மீண்டும் முயன்றால் வருவது் எதுவானாலும் சந்தித்துதான் ஆகவேண்டும்.

பல அன்மிகவாதிகள் யாரோ சொன்னார்கள் என்று திடுதிப்பென்று மயானத்தில் நள்ளிரவில் சென்று பூஜை செய்கிறார்கள். கேட்டால் எனக்கு பயமேயில்லை என்பார்கள். ஒரு இரவு பூஜையை முடித்துவிட்டால் தேர்தலில் வெற்றிபெற்றவர் போல் நடந்துகொள்வார்கள். ஆனால் அதன் பின் அவரையும், அவர் குடும்பத்தையும் வறுமையும், தரித்திரமும் பிடித்து வாட்டும். வீண் சலனங்கள் உருவாகும். அது எதனால் என்று அவர் அறியமாட்டார்.

வெற்றிகரமான மயான பூஜை செய்வார்கள் என்றால் நிச்சயம் அவர்களிடம் ஒரு கருப்பு வண்ண நாய் வளர்த்து வருவர். அதை வைத்தே அவர் சரியான மயான பூஜை விஷயம் தெரிந்தவர் என்று அறிந்துகொள்ளலாம். கருப்பு வண்ண நாய்க்கும் மயான பூஜைக்கும் என்ன சம்மந்தம் என்று அறியுங்கள். பொதுவாக நாய்களுக்கு இரவிலும் பார்வை நன்றாக தெரியும். மேலும் அவைகளுக்கு உடல் நீத்த சூழ்ச்சும உருவில் ஆவியாக உள்ள ஆத்மாக்களையும் தெளிவாக காணும் சக்தி பெற்றவைகளாகும். இந்த ஆத்மா ஆவிகளில் வலிமை குன்றியது, வலிமையானது என நீத்தாரின் ஆத்ம பலத்தைப் பொறுத்து சக்திகள் நிறைந்திருக்கும். இதில் வலிமையான ஆத்மாக்களை பார்க்கவோ எதிர்க்கும் சக்தியோ மற்ற வண்ண நாய்களுக்கு அந்த சக்தி மிக குறைவாகும். ஆனால் கருப்பு வண்ண நாய்கள் இறைவனின் படைப்பில் கால ருத்ர பைரவரின் அம்சம் பெற்றவையாகும். எனவே எந்தவித ஆத்மாவையும் எதிர்க்கும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். தன் எஜமானனின் உடலை ஊடுருவ எந்த ஆத்மாவையும் அனுமதிக்காது. புண்ணிய ஆத்மாக்களை எந்தவிதத்திலும் நாய்கள் அவமதிக்காது. மேலும் கருப்பு வண்ண நாய்கள் நாம் இரவில் மயானம் அழைத்துச் சென்றால் அங்கு ஆத்மாக்கள் இருந்தால் சமிங்ஞை செய்யும். எவ்வாறெனில் தீய ஆத்மாக்களைக் கண்டு கடுமையாக குறைக்கும். பாவ ஆத்மாக்களைக் கண்டு ஊளையிடும். அதாவது அழுகை செய்யும். புண்ணிய ஆத்மாக்களைக் கண்டால் எந்த இடத்தில் அந்த ஆத்மா உள்ளதோ அதனருகில் வாலை ஆட்டியபடி சென்று மிக அருகில் அமர்ந்துகொள்ளும். இந்த குறிப்பறிந்து மாந்திரீகர் நாய் அருகில் புண்ணிய நீர் தெளித்து சத்திய கட்டுபோட்டு அங்குள்ள புண்ணிய ஆத்மாவை விலகாதபடி செய்து பின்பு படையல்கள் யாவும் வைத்து தென்னம்பாளை, பனங்குருத்து கிழங்கு, இளநீர் யாவும் வைத்து மது சுருட்டு வஸ்துகளையும் வைத்து தலைவாழை இலையில் பொறிகடலை வைத்து வழிபாடு செய்து அந்த ஆத்மாவின் கோரிக்கையை நிறைவேற்றித் தர சத்தியம் செய்து கொடுத்து வசியம் செய்துகொள்வார். பாதுகாப்பான மயான பூஜைக்கு கருப்பு நாய் மிக அவசியம் என்பதை இதன் மூலம் அறிக.

மயானத்திற்கு போனோம் ஏதோ ஒரு சமாதி முன் அமர்ந்து பூஜை பொருட்களை வைத்து பூஜித்துவிட்டால் அங்குள்ள எந்த ஆத்மாவும் வசியமாகாது. மாறாக அவைகளின் தாக்குதலுக்கு ஆட்படும் நிலையே உள்ளாகும். நாம் அமரும் சமாதியில் ஆத்மா குடிகொண்டுள்ளதா இல்லையா என்பதை அறியாமல் அந்த சமாதியின் முன் கட்டுகட்டி அமர்வதால் எந்தவித பலனும் ஏற்படாது. மயானத்தின் எல்லையினுள் நுழையும் முன் அரிச்சந்திரனுக்கு பூசை செய்துவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். இல்லையேல் புண்ணிய புனித ஆத்மாவே தங்களுக்கு வசியமானாலும் சிவதுரோகிக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை நிச்சயம் கிட்டும். அதேபோல் வசியமான ஆத்மா சுடுகாட்டு எல்லையை தாண்டுவதற்குள் வசியகட்டிலிருந்து தப்பித்துவிடும். மயான எல்லையில் ஸ்ரீ அரிச்சந்திரனிடம் சில சத்தியங்களை செய்து கொடுக்க வேண்டும். அந்த சத்தியத்தை கடைசிவரை காபந்து செய்ய வேண்டும். இன்னும் சில விதிமுறைகள் மயான பூஜைக்கு உண்டு. அதை அனைவரின் பார்வைக்கு கொண்டு செல்ல முடியாத ரகசியங்கள் உண்டு. எனவே மேற்கொண்டு விஷயங்கள் பயிற்சி பெறுவோருக்கு அளிக்கப்படும்.

மேலும் ஆத்மாக்களில் ஆண் பெண் இரு இனம் உண்டு. இதில் பெண் ஆத்மாவை வசியம் செய்யவோ விலக்கவோ முற்படுவோர் பௌர்ணமி திதி அன்று முயல வேண்டும். ஆண் ஆத்மாவை வசியம் செய்யவோ விலக்கவோ முற்படுவோர் அமாவாசை திதியில் முயல வேண்டும். துஷ்ட ஆத்மாக்களை ஏவிவிட அஷ்டமி திதியில் முயல வேண்டும். இந்த மயான பூஜைக்கு ஓரை, பட்சி, கௌரி பஞ்சாங்கம், முகூர்த்தம் யாவும் பார்த்து செயல்படுதல் கூடாது. நடுநிசி இரவாக இருத்தல் வேண்டும். பிரம்ம முகூர்த்த வேளையில் கண்டிப்பாக மயானத்தின் எல்லைக்குள் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் உங்களை தொடர்புகொள்ள மிக அருகில் உள்ள ஆத்மா அது நல்லதோ கெட்டதோ தெரியாது எதுவாக இருந்தாலும் தங்கள் பரம்பரையில் யாருக்காவது ஒருவருக்கு குழந்தையாக பிறப்பெடுக்கும் அதிகாரம் கிடைத்துவிடும். அவ்வாறு பிறப்பெடுக்கும் ஆத்மா பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் வைக்கும். அல்லது அற்ப ஆயுசாக வாழ்ந்து முடியும். எனவே பிரம்ம முகூர்த்த வேளையில் மயானத்தில் இருக்கக்கூடாது.

அடுத்ததாக ஒன்றை அறிக. தனக்கு குருவாக இருந்து இறந்தவரின் சமாதியில் இருந்து மண்டை ஓட்டை கொண்டுவந்து அந்த மண்டையின் தலை உச்சியில் ஒரு மண்அகலில் தீபம் ஏற்றி ஒரு மண்டலத்திற்கு குறையாமல் பூஜித்து வந்தால் அந்த குருவின் ஆத்மா வழிபட்டவருக்கு வசியமாகி வழிகாட்டும். ஆனால் இது பாவச்செயலாகும். மயானத்தில் இருந்து யார் மண்டை ஓட்டை கொண்டுவந்து பூஜித்தாலும் அந்த கபாலத்தின் ஆத்மா வசியமகும் என்றாலும் மிகுந்த பாதுகாப்பு கவசம் மிக அவசியமாகும். மேலும் குடும்பத்தினுள் வைத்து மண்டை ஓடு (கபாலம்) பூஜை செய்தல் கூடாது. தனி இடமே மிக அவசியமாகும். நாம் வைத்து வழிபடும் மண்டை ஓடு பிறரின் கண்ணுக்கு தெரியாதபடி வைத்து வழிபட வேண்டும். மேலும் நாம் மண்டை ஓடு கொண்டு வந்த திதியை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதே திதி மாதா மாதம் வரும் அன்று அந்த மண்டை ஓட்டை எடுத்த இடத்திற்கு கொண்டுசென்று இரவு முழுக்க மண்டைமேல் தீபமேற்றி படையல் கொடுக்க வேண்டும். மூன்று திதிகள் இவ்வாறு செய்ய வேண்டும். உதாரணமாக அமாவாசை திதியில் கபாலத்தை கொண்டு வந்தால் மூன்று அமாவாசை அவ்விடம் கொண்டு சென்று வழிபட வேண்டும். அத்தி பலகை மேல் கபாலத்தை வைத்து இலுப்பை எண்ணெய் விட்டு தீபம் ஏற்றினால் அஷ்டகர்மத்தில் ஒரு செயலை செய்ய சக்தி கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு வகை மர பலகைக்கும், ஒவ்வொரு வகை எண்ணெய்க்கும் ஒரு வகை கர்ம செயல் செய்ய வழி உண்டு.

மயானத்தில் இருந்து கொண்டுவந்த மண்டை ஓட்டைக்கொண்டு பூஜை செய்து வசியப்படுத்திக்கொண்டால் அந்த மண்டைஓடு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வரை வைத்து பாதுகாக்கிறோமோ அதுவரை அந்த மண்டை ஓட்டுக்குரிய ஆத்மாவிற்கு மறுபிறப்போ மோட்சமோ கிட்டாது. ஏறக்குறைய அது நம் பரம்பரைக்கு அடிமைப்போல் தான் இருக்கும். ஆனால் இது மகா பாவச்செயலாகும். இந்த பாவத்தின் விளைவாக நம் பரம்பரைக்கு சந்ததிகள் உருவாகாமல் பரம்பரையே முற்றுபெறும். மண்டை ஓட்டைக் கொண்டு பூஜிக்கிறவர்கள் தன் காரியம் சாதித்தவுடன் முறையாக தர்ம அர்பணத்தை கபாலத்திற்கு அளித்து மோட்சம் பெறச் செய்ய வேண்டும். இந்த கபால மோட்சம் முறையாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செயல்படுத்திய பின்னர் அந்த மண்டை ஓட்டை எரித்துவிட வேண்டும். அல்லது தூள்தூளாக நொறுக்கி தண்ணீரில் வீசிவிட வேண்டும். அந்த தண்ணீர் ஓடும் ஆறு நதியாகவோ அல்லது கடலாகவோ இருக்க வேண்டும். இன்னும் பல ரகசியங்கள் உண்டு. அது பொதுவானவர் பார்வைக்கு அவசியம் இல்லை என்பதால் மறைக்கப்படுகிறது. நன்றி .

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .