ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

தெய்வ சோதனைகள் அறிக

 

நாம் வழிபடவும் தேவதையே நம்மை சோதிக்கும் இது அனைத்து தெய்வத்திற்கும் இக்குணம் உண்டு . வரம் கொடுப்பது அவர்கள் அதை பெறுவதற்கான தகுதி இருக்கிறதா என நம்மை சோதனை செய்வார்கள், சோதனையில் வெற்றி பெற நம்மூல தேவதை உதவி செய்யமாட்டார்கள், ஏனெனில் சோதிப்பதே அவர்கள்தான், நம் மன திடகாத்திரத்தினால் தான் வெற்றி கொள்ள வேண்டும் . புராணங்களிலும். சினிமா கதைகளிலும் சிலகாட்சிகளை கண்டிருப்பீர்கள், ஒரு முனிவர் கடும் தவம் புரிவார் அவர் வரம் பெற்றால் யாருக்கு பாதிப்போ அவர்கள் அவர் தவத்தை கலைக்க முயற்சி செய்வார்கள், மழையாக. காற்றாக. இடி மின்னலாக பெண்களை கொண்டு மயக்கும் நடனங்கள் என இன்னும் பல வகைகளிலும் தடைகளை கொடுப்பார்கள், இதையெல்லாம் சமாளித்து வெற்றி கண்டால் இறுதியில் குறிப்பிட்ட தெய்வத்திடம் வரம் பெறுவதை பார்த்திருப்பீர்கள், இதில் உண்மை உண்டு .நீங்கள் வரம் பெறுவதிலும் சிலர் தடையாக வந்து எச்சரிக்கை செய்வார்கள், மூல தேவதையும் சோதிக்கும், நம் முன்னோர்கள் மற்றும் குல தெய்வமும் சேர்ந்து நம்மை தடுப்பார்கள், சில நேரத்தில் பெற்றோர்களும் தடுப்பார்கள், உன் சந்தோஷத்தை தியாகம் செய்து விரதம் இருந்து எதற்காக இந்த வேலையெல்லாம் வேறு ஏதாவது வேலையை பார்க்க கூடாதா என தடுப்பார்கள், கனவில் வந்து தடுப்பார்கள், இவர்களிடம் உங்கள் மன உறுதியோடு தயவு செய்து தடுக்காமல் என் ஆசையை பூர்த்தி செய்து தாருங்கள் என வேகப்படாமல் பொறுமையோடு கேட்கவும், உங்கள் குலத்திலோ நீங்களோ செய்த பாவம் இருந்தால் அது கனவிலும். நிஜத்திலும். பாம்பு ரூபத்தில் வந்து மிரட்டுவார்கள், வேண்டாம் உன்னால் முடியாது என மிரட்டுவார்கள், இவ்வாறு கனவு கண்டால் மறுநாளே இயலாதவருக்கு அன்னதானம் முடிந்தவரை செய்தால் அதையும் தொடர்ந்து செய்தால் பாவங்கள் விலகி தடை ஏற்படாது . அடுத்து நாம் வழிபடும் மூல தேவதையே நம்மை சோதிக்கும், போதிய அனுபவமும் பக்குவமும் இருக்கிறதா என்பதை ஒரு கட்டத்திலும். அடுத்து காமத்தில் உல்லாசத்தின்மேல் நாட்டம் கொடுத்து தவத்தை கலைக்க பார்க்கும் இதை ஒரு கட்டத்தில் சோதிக்கும், அடுத்து வெளிநபர்களாலோ. குடும்ப நபர்களாலோ நமக்கு வீண்தொல்லைகள். வீண் பழிகள் கொடுத்து ஆத்திரமும். கோபமும். வருத்தமும் பட வைக்க முயற்சிக்கும். பொருளாதாரத்தில் முடை உண்டாக்க பார்க்கும், நோய் மூலம் தடை ஏற்படுத்த பார்க்கும், அடிக்கடி தூக்கத்தை கொடுக்க பார்க்கும் . முன்பே வரங்களை கொடுத்துவிட்டதாக கனவில் வந்து ஏமாற்றி 48 திங்களுக்குள்ளாக பூஜை நிறைவு செய்யலாமா என்ற எண்ணத்தை கொடுக்க பார்க்கும், நாம் எந்த தடைவந்தாலும் தாயே எல்லா சோதனையும் நீங்கள் அளிக்கும் சோதனையாகவே நான் நினைப்பேன், எனவே வேறு யார் சோதித்தாலும் தடை செய்தாலும் நீங்களே என்னை காத்தருள வேண்டும், தாயே என வேண்டிக் கொள்ளவும், இந்த தடைகளை எல்லோருக்கும் கட்டாயம் கொடுப்பார்கள் என சொல்ல முடியாது, அது தேவதையின் விருப்பத்திற்குட்பட்டது , மூல தேவதை சோதிப்பதை வேறு தேவதைகள் தடுக்க மாட்டார்கள், ஆனால் நமக்கு வழிமுறை சொல்லி காப்பார்கள், இப்பணியை வினைகள் தீர்க்கும் ஸ்ரீ விநாயக பெருமானே செய்வார், இதனால்தான் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ விநாயக பெருமானுக்கு முதல் பூஜையை மறக்காமல் கொடுக்க வேண்டும், சோதனைகளை எல்லாம் கடந்து இறுதியில் மன மகிழ்ந்து மூல தேவதையே வரமளிப்பார்கள் .

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .