ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

தந்திரயோகம் சுருக்கமாக அறிக :-

 

மனிதனின் உழைப்பு, உணவு, உறக்கம், இன்பம், பாசம், பந்தம் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஆசைகள் பல உள்ளன. அதில் ஆன்மிகத்தை நாடுவோர் முக்தி நிலை பெற வேண்டும் என்ற தனியாத ஆசையும் ஒன்றாகும். இந்த முக்தியை மரணமில்லா பெருவாழ்வு, தன்னை அறியும் ஞானநிலை, தன்னுள் உறைந்து இருக்கும் இறைவனை உணர்ந்த ஆனந்தநிலை, இப்பிறவியை விலக்கிய நிலை என வேறு பெயர்களாலும் உணரப்பட்டது. ஆக முக்தி பெற வேண்டி முயற்சி தேவை என்பதை உணர்ந்த மனிதன் அதைப்பெற என்னென்ன வழி என கண்டுணர்ந்தனர்.

அவையில் வழிகள் யாதெனில் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், யோக மார்க்கம், தந்திர யோக மார்க்கம் என ஐந்து பிரிவுகளில் எதையாவது ஒன்றை பற்றி முயற்சித்தால் முக்தியை அடையலாம் என கண்டுபிடித்தனர்.

பக்திமார்க்கம்:- பக்திமார்க்கம் என்னும் வழியாகப்பட்டது அனைத்தும் அவன் செயல் . என் தலைவன் இறைவனே அவனே கதி என்று நீங்கா பக்தியோடு இறைவனின் பாத கமலமே கதி என்று இருந்து இறையருளை பெற்று முக்தி நிலை அடையும் மார்க்கம் பக்தி மார்க்கமாகும்.

அடுத்து ஞானமார்க்கம் :- அறிவு, புத்தி, சித்தி ஆகியவற்றின் துணைகொண்டு முக்திநிலையை அடைய முயல்வதே ஞானமார்க்கமாகும்.

அடுத்து கர்ம மார்க்கம் :- கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதையில் பகவான் அர்ஜøனனுக்கு அறிவுரை கூறியிருப்பார். இது சாதாரண மனிதர்களுக்காக கூறப்பட்டதாகும். கர்ம மார்க்கத்திற்கு விசேஷ பயிற்சி எதுவும் தேவையில்லை. தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளையும், பொறுப்புகளையும் முழுமையாகச் செய்துவிடும் மனிதனின் ஆத்மா படிப்படியாக பண்பட்டு உயர்நிலையை அடையும் முக்தி பெற கடைபிடிக்கப்படும் கர்ம மார்க்கமாகும்.

அடுத்து யோக மார்க்கம் அறிக :- அஷ்டாங்க யோகத்தில் தீவிரமாக ஈடுபடக்கூடிய ஒருவரால் சில பிறவிகளிலேயே முக்திநிலையை அடைந்துவிட முடியும். ஆனால் இதற்கு கடுமையான பயிற்சிகள் அவசியமாகும். இந்த பயிற்சிகளால் உச்சநிலை பெறும்போது முக்திநிலையை அடைய முடியும்.

அடுத்து தந்திர மார்க்கம் சுருக்கமாக அறிக :- தந்திரம் என்பது கடினமான ஒரு செயலை மதி நுட்பத்தால் எளிமையாக விரைவாக செய்து முடிப்பதைத் தான் தந்திரம் எனப் பொருள்படும். முன்பு பார்த்த முக்தி அடைய பயன்படுத்தும் மார்க்கங்களில் முக்தி அடைய சில பிறவிகள் தேவைப்படலாம். ஆனால் தந்திர மார்க்கத்தை அணுகுவதால் இதே பிறவியிலேயே முக்தி அடைய முடியும். புறத்தேடலில் உழன்றுகொண்டிருக்கும் மனிதனை அகத்தேடலுக்கு திருப்பிவிடும் மார்க்கமே தந்திர மார்க்கமாகும்.

மிக எளிய தந்திர வழிகளை கையாள்வதன் மூலம் குறுகிய காலத்திலேயே முக்திநிலையை பெற முடியும். மேற்கண்ட எதாவது ஒரு மார்க்கத்தில்தான் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ கடைபிடித்து வாழ்கிறான். இதில் எந்த மார்க்கம் சிறந்தது என்றால் தந்திர மார்க்கமேயாகும்.

ஒரு குளத்தை புதிதாக வெட்ட 500 பேர் ஒன்றுகூடி குளம் வெட்டி ஒரு வருடத்தில் முடிக்கும் பணியை ஒரு பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு ஒரு மாதத்திலேயே முடிக்கலாம். இது தந்திரத்தின் பயனால் கிடைத்த சுமூக வெற்றியாகும். அதேபோல்தான் மனித பிறவியின் முக்தியின் வெற்றி ரகசியத்தையும் தந்திரயோகத்தை கையாள்வதன் மூலம் விரைந்து அடையலாம். ஒவ்வொரு யுகங்களை மனிதன் கடந்து வரும்போது அவன் அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சியடைந்து கண்டுணரப்பட்டதே இந்த மார்க்கங்களாகும். இதில் மனிதன் இறுதியாக கையாண்டு கொண்டிருப்பது தந்திரயோக மார்க்கமேயாகும்.

மனிதனின் ஆயுள் நிர்ணயமில்லாதது . இருக்கும்போதே வெற்றியை நெருங்க வேண்டுமானால் தந்திர மார்க்கமே அதற்கு உதவுகிறது. தந்திரயோகம் என்பது மற்ற மார்க்கங்களின் கூட்டு கலவையும் இருக்கும் . மற்ற மார்க்கங்களின் வெற்றி முறைகளின் எளிதை எடுத்து பயன்கொள்ள வேண்டும். இன்னும் கூடுதலாக தந்திர மார்க்கத்தில் சில யோகங்களை கடைபிடித்தனர். அவை மந்திரயோகம், ஹட யோகம், ராஜயோகம், லய யோகம், குண்டலினி யோகம் ஆகும். இந்த ஐந்து யோக வழிமுறைகளில் சில சக்தி வாய்ந்த வழிமுறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை மேலும் எளிமையாக்கி அவற்றிற்கு மேலும் வலுவூட்டி உருவாக்கப்பட்ட ஒருநிறைவான மார்க்கமே தந்திர யோக மார்க்கமாகும்.

இதில் பெரும்பங்கு குண்டலினி யோக வித்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது . இதனுடன் பிற்காலத்தில சேர்க்கப்பட்டதே சக்கர யோகமாகும். இதனுடன் மந்திர யோகத்தையும் இணைந்து பயன்படுத்தினர். எனினும் ஒவ்வொரு நிலையிலும் தந்திரத்தை கையாளும் போதுதான் வெற்றியை உறுதிசெய்ய முடிகிறது.. யோகம் என்றால் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருங்கிணைத்தல் என்பதாகும்.

உதாரணமாக ஒன்றை அறியுங்கள். மனிதன் என்பவன் பல கூறுகளால் ஒருங்கிணைக்கப்பட்டவன் எனவே மனிதனும் யோகம்தான். ஆன்மா, உயிர்சக்தி, புலன்கள், பிராணன், புத்தி, சித்தம், மனம், பருஉடல் இவை அனைத்தும் சேர்ந்த கலவையே மனிதன். இவை உதாரணத்திற்கு சொல்லப்பட்டது. ஒவ்வொரு கலையிலும் பல நுணுக்கங்கள் உள்ளன. அவைகளை மதி நுட்பத்தால் கண்டு வகை பிரித்து பயன்கொள்ள வேண்டும். இதற்கும் யோகம் என்றுதான் சுருங்க சொல்ல வேண்டும். ஒரு வழிபாடு முறையால் வெற்றி காண சில தடங்களை முறையாக நுட்பமாக கையாள வேண்டும். வழிமுறை, செயல்பாடு, குவிந்த கவனம், தியானம், ஆற்றல், துறவு, சமாதி, பலன், நன்மை என பிரித்து பார்த்தால் ஒவ்வொன்றிற்கும் பல அர்த்தங்கள் வகைகள், தன்மைகள் யாவும் உண்டு என்றாலும் இவைகளை ஒருங்கிணைத்து வழிபாடுயோகம் என்று சுருங்கக் கூறலாம். இந்த நுணுக்கங்களை அறிந்து கையாண்ட விதத்திற்கு தந்திர மார்க்கம் என்று சுருங்க பெயர் வைத்தனர். பின்னால் வந்தவர்கள் அவரவர் அனுபவத்தில் கண்ட சக்திகளை கொண்டு பிரிவுடன் தெய்வ மார்க்கத்தை கையாண்டனர். ஆனால் அடிப்படையில் தந்திரத்தை கையாண்ட வெற்றிபெறும் விதம் மட்டும் பொதுவாக இருந்தது . அனைத்து பிரிவிலும் கையாண்டவிதம் தந்திர மார்க்கம் தான். குறிப்பாக சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், இஸ்லாமியம் என மதக்கோட்பாடுகள் பிரிந்தன என்றாலும் இவைகளிலும் காலப்போக்கில் பல பிரிவுகளை பின்னால் வந்தவர்கள் உருவாக்கிவிட்டாலும் எல்லாவற்றிலுமே தந்திர கையாடலே தலைசிறந்த முறையாக அவரவர் மதிநுட்பப்படி கடைபிடித்தனர்.

இவைகள் காலப்போக்கில் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக குரு பரம்பரை உருவானது. இந்த குருமார்களின் வழிமுறையை ஏற்ற சீடர்களின் வட்டம் விரிவடைந்து பல மார்க்கங்களை குழுகுழுவாக உருவாக்கி அதில் பல பிரிவுகள் பேதங்கள் குழப்பங்கள் உண்டாகிவிட்டன. இதனால் சரியான நுட்ப முறைகள் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறி போயின. குழம்பி கலந்தும் போய்விட்டன. இதன்பின்னால் வந்தவர்கள் பிரிவை கட்டாயமாக்க வேண்டிய சூழலில் வாழ்ந்தனர். ஒருவர் சைவம் இன்னொருவர் அசைவ முறை பின்பற்றும்போது பிரிவு கட்டாயமானது . இதன்பின்பு அவரவர் வெற்றி முறைகளுக்கு ஒரு பெயரை சூட்டி, பெயரை மட்டும் வெளியிட்டு மூலத்தை ரகசியமென குரு சிஷ்ய பரம்பரைக்கு மட்டும் தெரியும் வண்ணம் உருவாக்கி கலைகள் பின்னப்பட்டுவிட்டன. இதன்பின்னர்தான் மனிதனை வகைப்படுத்தினர். அடுத்தார் போல் சாதி பேதம் உருவாக அதுவே வழி செய்தது . பின்பு ஒரு சாரருக்கு மட்டுமே இந்த கலை வரும் என தவறான செய்தியை பரப்பி தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டனர். இதனால் பலமுறைகள் மாறின.

தட்சிணமுறை, வாமாசார முறை, வேதாந்தம் சித்தாந்தம், சடங்குககள், ஆகமங்கள், நியமங்கள் அதிலும் பல பரிவுகள் என அந்தந்த பிரிவினரின் ஏட்டிக்குப்போட்டியான கண்டுபிடிப்புகள் சிலதும், சில உண்மையான வழிமுறைகளும் சேர்த்து இன்று குழப்பமான ஆன்மீகம் உலாவ காரணமாகிவிட்டது . மெய்யன்பர்களே மனித வளர்ச்சி எப்படி பரிணாம வளர்ச்சி கண்டதோ படிப்படியாக அதைப்போல ஆன்மீகமும் வளர்ந்ததுதான் என்பதை அறிக.

ஒரு காலத்தில் நல்லவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். இன்றைக்கு நல்லவர்கள் சிலபேர்தான் இருக்கிறார்கள். அதைப்போல கலைகளுள் நல்லதும் சரியானதும் என சில கலைகள் தான் உள்ளது .எல்லாவற்றிற்கும் மனமும் ஒழுக்கமும் தர்மமும் கடமையும் ஆதார சக்திகளாலும் ஆன்மீக உலகம் எவ்வளவு குழம்பிப்போய் இருந்தாலும் மேற்சொன்னதை சரியாக பயன்படுத்தினால் வெற்றி எளிது, அதுவே தந்திரமாகும்.

தந்திர யோக மார்க்கத்தை கடைபிடிக்க பல வழிமுறைகள் உண்டு. அதை தந்திர யோக குறியீடுகள் என்று கூறுவர். யந்திரம், மந்திரம், தர்மநெறி, ஒழுக்கம், விரதம், தீர்த்த தலங்கள், புனிதம், கடவுள், வர்ணபேதம், சூத்திரங்கள், வளர்ச்சி, சடங்குகள், படைப்பு, தியானம், வழிபாடு, கர்மங்கள், சாதனை, புனஸ்கரணம், அழிவு, ஆக்கல், ஞானதெளிவு, தர்மநெறி கடைபிடித்தல் என்று பல்வேறு வகையான வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் முக்தி நிலை அல்லது இப்பிறவியின் வெற்றி நிலையை பெறலாம். இதை வகைப்படுத்தி நுட்பமான முறைகளை இதில் பின்னமில்லாமல் கையாண்டு வெற்றி காண்பதே தந்திர யோகமாகும். எம் மந்திர சுபமங்கள நூலில் பல விஷயங்கள் கொடுத்திருக்கிறேன். யாவும் தந்திர யோகத்தின் நுட்ப வழிமுறைகளேயாகும்.

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .