ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

 

சிதம்பர யந்திர ரகசியம் + எச்சரிக்கை :-

சிதம்பர சக்கரம், சிவ பஞ்சாட்சர சக்கரம் என எவருக்கும் சிவ அம்ச சக்கரங்களை எழுதி கொடுக்காதீர்கள். ஆலய பிரதிஷ்டைக்கு வேண்டுமானால் எழுதி கொடுக்கலாம். தனி மனிதனுக்கு எழுதிகொடுக்க வேண்டாம். சிவனை தொழ நிறைய நியதி உண்டு. நியம நிஷ்டைகள் உண்டு. அத்தூய்மையை கடைபிடிக்காதவருக்கு சக்கரம் எழுதி கொடுத்தால் எழுதி கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் தண்டனை உண்டு.

சிவ யந்திரத்தை கையாள்பவருக்கு உடல் சுத்தத்தைவிட உள்ள சுத்தமும், பிறவி சுத்தமும் மிக முக்கியம். எனவே காரணம் காரியமின்றி சிவயந்திரமாக யாருக்கும் எழுதிக்கொடுக்க வேண்டாம். மேலும் சிதம்பர பஞ்சாட்சர சக்கரமும் மக்கள் பயன்படும் சக்கரம்தான். எனினும் எல்லா மக்களுக்கான சக்கரம் இல்லை . அது ஒரு சூத்திரம்,

அஷ்ட கலைகளின் செயல் சுருக்கமே அந்த யந்திரமாகும். அது ஒரு பாட புத்தகம் போன்றது. ஒவ்வொரு கட்டத்தில் அடைக்கும் அட்சரமும் ஒரு கோணத்தோடும், ஒரு லக்கத்தோடும், ஒரு பட்சியோடும், ஒரு ருத்ர பைரவனோடும் இணைந்து செயல்படும் வியூக ஆயுதமாகும். கைதேர்ந்தவன் கையாளும் சக்கரங்கள் இவை.

நாம் காணும் எந்த யந்திரமும் வியூக தேவதைகளின் புடைசூழ பிரம்மத்தில் மூல தேவதை வீற்றிருப்பதையே ஸ்தாபிதம் செய்து எழுதுவோம். அவைகள் தனித்தனி செயல்களை மட்டும் குறிப்பிடுவதாகவே அமையும். பணியும் செய்யும். ஆனால் சிதம்பர சக்கரம் அவ்வாறில்லை. பல கலைகளையும் பல செயல்களையும் ஒன்றிணைத்து உருவகப்படுத்தியதாகும். இச்சக்கரங்களை கண்டிப்பாக வீட்டிலிருந்து எழுதக்கூடாது .

முறையாக பூஜை செய்யும் பரிகாரம் செய்யாத சிவாலயத்தில் இருந்து எழுதலாம். கங்கை மற்றும் புனிதமான நதிக்கரையில் அமர்ந்து எழுதலாம். காசி மயானத்தில் அமர்ந்து எழுதலாம். எழுதுபவன் மிக உத்தமனாக இருக்க வேண்டும். யந்திரம் எழுதும் முன் குறைந்தது 100 பேருக்காவது அன்ன தர்மம் செய்யவேண்டும். ஒரு சுத்த பிராம்மனருக்கு வஸ்திர தானம் செய்யவேண்டும். பசுவிற்கு ஆகாரம் அளிக்க வேண்டும். அரச மரத்தை 108 தடவை வலம் வரவேண்டும். சுத்த வயிறுடன், சுத்த மனதுடன், சுத்த உடலுடன் தரையை தொடாமல் ஆசனத்தில் அமர்ந்து சுழிமுனை ஓடும் நேரத்தில் எழுதவேண்டும். இதற்கு முன்பு முகூர்த்த நாள் நேரம் கணித்து அதில் எழுத துவங்க வேண்டும். மற்ற எந்திரம் எழுதுவதானாலும் இம்முறையை அனுசரித்தால் கைமேல் பலன் தரும்.

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .