ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

சுயசோதனை அவசியம் தேவை இதற்க்கான பயிற்சிகள்

நீங்கள் ஆன்மிகத்தில் புக முயல்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. மானிடராய் பிறப்பெடுத்த புண்ணிய பலன் தங்களிடம் நிறைந்துள்ள காரணத்தினால் தான் இந்த முயற்சியை நீங்கள் செய்கிறீர்கள். நீங்கள் இந்த ஈடுபாட்டில் திருப்தியுடன் மனம் நிறைவடைய விரும்பினால் முதலில் உங்கள் மனதில் தெளிவு பிறக்க வேண்டும்.மனத்தெளிவு இல்லாவிடினும் ஆன்மிக சக்தியை பெற முயலலாம். ஆனால் இதில் வெற்றி காண்பதென்பது அரிதான செயலாகும். எனவே மனதெளிவு வெற்றிக்கு மிக அவசியமாகிறது.

நாம் தெளிவுபெற நல்ல குரு துணை மிக மிக அவசியம் என்பார்கள். இது உண்மைதான். யாரும் மறுக்க முடியாது என்றாலும் காலத்திற்கேற்ப நாம் தான் சில வரையறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அக்காலத்தில் பல வருடம் சீடனுடன் பழகி பின்பு அவன் குணபேதகம் அறிந்து அதற்கு தக்கவாறு பாடங்களை குரு போதிப்பார். இன்றைக்கு அந்த பல வருட குருகுல வாசத்திற்கான பொறுமையும் காலமும் யாருக்கும் அவகாசம் ஒதுக்க முடியாத சூழலில் நாம் உள்ளதால் நாம் அதை சுருக்கி விரைவாக புரிந்து செயலாற்ற முயல வேண்டும்.

இன்றைய பலகீனம் மனிதர்களின் சூழ்ச்சியால் உண்டானதாகும். மனிதர்கள் ஒவ்வொரு நாளும் வேகவேகமாக ஓய்வின்றி உழைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டோம். இந்த நிலையில் குரு குலவாசம் பொருந்தாது . ஒருநாள் பயிற்சி வகுப்பு வைத்து சீடருக்கு அனைத்தையும் தெளிவுபடுத்தவும் யாராலும் முடியாது . குருவாகப்பட்டவர் ஒவ்வொரு சீடரையும் அறிந்து செயலாற்றவும் அவகாசம் இன்றைக்கு இல்லை. இந்த அவசர யுகத்தை லாபகரமாக பயன்படுத்திக்கொள்ள சில குருமார்கள் முயல்கிறார்கள். வகுப்பு பாடத்தில் தனித்தனி பிரிவுகள் உள்ளதுபோல ஆன்மிக பாடத்தையும் தனித்தனி கூறுகளாக்கி கருத்து சிதறல் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எவ்வளவு ஆன்மிக பாடங்கள் நடத்தினாலும் அந்தந்த குருவிடம் உள்ள கலையைத்தான் பிறருக்கு போதிக்கிறார்களே தவிர கற்க வரும் சீடனின் மனத்தெளிவையும் அவன் பிறப்பு கூறுகளையும் மாணவனின் இயல்புகளையும் அவனுக்கு அறிந்து சுட்டிக்காட்டுவதோ போதிப்பதோ இல்லை . வாங்கிய பணத்திற்கு வேலை செய்வது போல ஆன்மிக கலையும் ஆகிவிட்டது .நான் கொடுத்த தலைப்பிற்க்கேற்ற பாடத்தை நடத்துகிறேன் இதுவே என்கடமை என்பது போல நடந்துகொள்கிறார்கள் இதுபெரும் தவறாகும் . இது ஆன்மிகத்தின் பொறுப்பற்ற தன்மையாகும்.

இன்றைக்கு உள்ள குருமார்கள் பலரும் தன்னை பிரமிப்பாக வெளிப்படுத்தவே அலங்காரம் மற்றும் விளம்பரம் மூலம் முயல்கிறார்கள். ஆனால் நாம் கொடுக்கப்போகும் பாடம் மாணவனின் மனதை சார்ந்த தெளிவு மூலமே வெற்றியடையும் என்பதை அறிந்திருக்கவில்லை. அறிந்தவர்கள் இதை கடைபிடிக்க முயல்வதும் இல்லை. யார் எப்படி போனால் எனக்கென்ன என்ற உலகபோக்கு ஆன்மிகத்திலும் பாதிப்பை என்றைக்கோ ஏற்படுத்திவிட்டது .

இவ்வாறு பல தடைகள் இருக்கையில் ஆன்மிகத்தில் வெற்றி பெற மனத்தெளிவு எப்படி யாரிடம் பெறுவது யாரை நாடுவது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது . எங்கள் குடும்ப சுமையை குறைக்க கட்டாயம் பணிசெய்யவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம் எங்களுக்கோ கிடைக்கும் நேரம் மிகக்குறைவு அதே நேரத்தில் ஆன்மிகத்தில் சித்தி பெறவும் ஆவல் கொள்கிறோம் குருகுலவாசமோ அல்லது மேடை கச்சேரி போன்ற ஒருநாள் பயற்சி வகுப்புகளோ எங்களுக்கு வேண்டாம். இதையெல்லாம் கடந்து மனத்தெளிவு உள்உணர்வு பெற வழி எதாவது உண்டா என்று பலரும் கேள்வி கேட்டிருந்தார்கள் இதற்கான தீர்வை இன்று நம் சாஸ்த்திர வித்யா பீடத்தில் வழங்கி வருகிறோம்.

உங்கள் ஆன்மிக தகுதி எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்தால்தான் உங்களின் தகுதிக்கேற்ற பயிற்சிகளை தேர்ந்தெடுத்து கையாளமுடியும் . பொதுவாக குரு மந்திரங்களை சொல்லிகொடுத்துவிட்டார் என்பதாலோ அல்லது ஒருபுத்தகத்தை பார்த்து படித்தறிந்து அதை ஏற்று பயிற்சி செய்வதாலோ பலன் உடனே கிட்டிவிடும் என நம்பி ஏமாந்துவிடாதீர்கள் . உங்களிடம் உள்ள இருப்பை சரிபார்க்காத வரை எதுவுமே கிட்டாது என்பதே உண்மை .உங்களை நீங்களே சரிசெய்து கொள்ளத்தான் இந்த சுய சோதனை பயிற்சியையும் அளிக்கிறோம் .ஆன்மிகத்தில் நுழைவோரின் தோல்விக்கு காரணங்கள் என்னென்ன என்பதை நன்கு என்சொந்த அனுபவத்தில் அறிந்ததினால் தான் மற்றவரின் வெற்றிக்கு அவசியம் அறியவேண்டிய கருவை முதலிலேயே கொடுத்து வழிகாட்டுகிறேன் . உங்கள் இருப்பு நிலையை அறிந்து செயல்படுங்கள் பிறகு பாருங்கள் ஆன்மிகத்தில் நீங்கள் எதைதொட்டாலும் அது வெற்றியாகவே தொடரும் .

நாங்கள் நேற்முக பயிற்சி இன்றி இந்த சுயசோதனைக்கான கேள்வி பதில்கள் கொடுக்க காரணம் உண்டு சுதந்திரமாக உங்களை நீங்களே செப்பனிடவேண்டும் . அதில்தான் உண்மை வெளிப்படும் .ஒரு குருவுடைய மெய்மறக்கச்செய்யும் ஜாலபேச்சு உங்கள் மனதை குளிர்விக்கலாம் அவ்வளவே அதை கடந்து வேறெதுவும் நீங்கள் அனுபவித்துவிட முடியாது . நீங்களாக இயங்காத வரை குரு நமக்காக எதையும் சாதித்து கொடுத்துவிடுவார் என நம்பாதீர்கள் . சரியாக பாதையை மட்டும் குரு காட்டினால் போதும் மற்ற முயற்சிகளை நாங்கள் பார்த்துக்கோள்கிறோம் என்று எவர் நினைக்கிறீர்களோ அவர்களுக்கே ஆன்மிக கலை வளரும் அவ்வாறு உண்மையை விரும்புபவர்கள் மட்டும் எம்மிடம் வாருங்கள் . யாம் கூறும் முறைகளை மட்டும் கையாளுங்கள் போதும் வெற்றி தன்னால் கிடைக்கும் .

இவ்வாறு மனம்தளராத வெற்றியைபெறவே இந்த சுய சோதனைக்கான பயிற்சிமுறைகளும் கூடுதலாக அளிக்கின்றோம் . இங்கு நீங்கள் அடிப்படையாக சில விஷயங்களை புரிந்துகொள்ள முயல வேண்டும் . என்றைக்கோ சினிமாவில் பார்த்ததையோ புத்தகத்தில் படித்ததையோ கற்பனை செய்துகொண்டு குரு என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் இருப்பர் என்பதையெல்லாம் எண்ணிக்கொண்டிருக்கக்கூடாது . குரு என்பவர் அவர் தோற்றம் அவர் குணம் அவர் நிலை எப்படியோ அப்படித்தான் இருப்பார்கள். அவரவருக்கு எந்த முறை சரி என்று பட்டதோ அதைத்தான் கடைபிடிப்பார்கள். எனவே நாம் கண்டது கேட்டது போன்ற தோற்றத்தில் குரு இல்லையே என்றெல்லாம் நினைக்கக்கூடாது. வெரும் கோமணத்துடன் மரத்தடியில் பரதேசியாய் இருப்பவரிடம் இருந்து நம் கேள்விக்கு விடை கிடைத்தால் அவரும் குரு தான். ஒரு சிறுபிள்ளையின் செய்கையின் மூலம் நம் கேள்விக்கு அர்த்தம் புரிந்தால் அக்குழந்தையும் குருதான். இயற்கை நமக்கு சில புரிதலை உண்டாக்கும். ஆக இயற்கையும் குருதான். நாம் எங்கெங்கெல்லாம் விடைகாண்கிறோமோ அங்கெல்லாம் நமக்குகொரு குரு இருக்கிறார் என்ற பரந்த மனப்பான்மை வேண்டும். ஏனெனில் இந்த உலகில் ஒருவரிடம் இருந்து மட்டுமே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது. வாழ்வில் பெற்றோர் மற்றும் உறவு முதல் ஆசிரியர் மற்றும் மாணவ நண்பர்கள் வரையும், பார்வை காட்சி முதல் செவி செய்தி வரையும் வாழ்நாள் முழுக்க பலப்பல விஷயங்களை கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி பார்க்குபோது கற்பிப்பவர் யாவரும் குரு ஸ்தானம் தான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு சிறந்த நபரை நமக்கு பிடித்துப்போனால் அவர்தான் என் மானசீக குரு என்று நாம் சொல்வதுண்டு. இதற்கு காரணம் நம் மனதிற்கு பிடித்தவருக்கு கூடுதல் மரியாதை கொடுத்து ஒரு ஸ்தானத்தை நாம் ஒதுக்குவதே காரணமாகும். ஒவ்வொரு துறையிலும் நம்மை வழிகாட்டி அழைத்துச் செல்பவரை குரு என்றுதான் கூறுகிறோம். ஆன்மிகத்திலும் அதைப்போலத்தான் ஏற்றுக்கொள்கிறோம். இது எல்லாம் சரியே. ஆனால் தங்களுக்கு புரிய வைக்க வந்த விஷயம் யாதெனில் இந்த உலகில் காண்கின்ற அனைத்துமே இறைவனின் படைப்புத்தான் உன்னிலும் என்னிலும் எங்கெங்கு காண்கினும் இறைவன் அனைத்திலும் வாழ்ந்துகொண்டு ஒவ்வொருவர் புரிதலுக்கும் வழிகாட்டி அனைவருமே குருநிலையாகத்தான் வைத்திருக்கிறார். பரந்த மனப்பான்மையோடு இதை ஆராய்ந்தால் உங்களுக்கே இந்த உண்மை புரியும். இதையெல்லாம் கடந்து ஒன்றை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் மனமேயாகும். இந்த மனம் விரும்பினால் தான் இறைவனையாகட்டும், குருவையாகட்டும், உறைவயாகட்டும், காதலையாகட்டும், உணவையாகட்டும் வேறு எதையாகட்டும் மனம் ஏற்கும். விரும்பவில்லை எனில் எதையும் நிராகரித்துவிடும். எனவே நம் முடிவு நம் வாழ்வு, நம் ஏற்பு, நம் லட்சியம், நம்பிக்கை ஆர்வம் யாவும் மனம்தான் முடிவு செய்கிறது.

இந்த மனம் எதையும் மறைக்காது. உங்களுக்கு உண்மையான நண்பன் மனம்தான். உங்களுக்கு ஏற்றாற்போல் செயல்படுவதும் மனம்தான். உங்களுக்கு வெற்றிகளை தருவதும் மனம்தான். எவ்வளவு பெரிய மகான் உங்களுக்கு குருவாக அமைந்தாலும் அவர் கூறுவதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் மனம்தான் முடிவு செய்யும். எனவே ஆன்மிக வெற்றிக்கு நீங்கள் தேடும் குரு வெளியே இல்லை. உங்கள் மனம்தான் உங்களுக்கு மறைக்காமல் உண்மையைக் கூறும் குருவாகும்.

சரி நாங்கள் எங்கள் மனதையே குருவாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மனம் ஏற்கவும் ஏற்காமல் போகவும் அதற்கொரு கேள்வியை கொடுக்க வேண்டுமே அப்போதுதானே மனம் சிந்திக்கும் செயல்படும் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அதுவும் உண்மையே. எதற்கும் ஒரு தூண்டுதல் அவசியம் தேவை அதை பிறர்தான் தூண்டுதல் செய்ய வேண்டும். அல்லது நாமே தூண்டுதலைத் தேடிச் செல்ல வேண்டும். இது பொதுவான விதியாகும்.

நிற்க :- ஆன்மிக பயிற்ச்சி பெருவோர் கவனத்திற்க்கு - நாம் இப்பொழுது ஆன்மிகத்தில் தெய்வ சக்தியை கைவரப் பெற்று பலரின் துன்பத்திற்கு தீர்வுகள் கூறி அவர்களுக்கு சந்தோஷங்கள் அளித்து நாமும் தர்ம பலத்துடன் சந்தோஷமாக இருக்க முயலப்போகிறோம் தெய்வத்தின் மிக அருகில் இருந்து ஞான கர்ம ரகசியங்களை கேட்டறிந்து பிராப்த கர்மா மனிதருக்கு உதவ போகிறோம். இதற்கு அடிப்படையில் சில உண்மைகளை அறிந்துகொள்ள நீங்கள் முயலவேண்டும். அநத் உண்மை வெளியில் இருந்து அறிந்துகொள்ளக்கூடியது இல்லை. உங்களிடம் இருந்து வரக்கூடிய உண்மைகள் அவையாகும். இந்த உண்மையும் தெளிவும் பெற நாங்கள் கொடுக்கும் கேள்விக்கு உங்கள் மனம் மறைக்காமல் உண்மையை சொல்ல வேண்டும். அது உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும். பதிலை மற்றவருக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கும் தெறிவிக்கவேண்டியதில்லை . ஆனால் அந்த கேள்விகளுக்கு பதில் நிச்சயமாக உங்களுக்கு மட்டுமே தெரியும். உங்கள் பெற்றோருக்கோ, உற்றவருக்கோ, குருவிற்கோ யாருக்குமே தெரியாது.

மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனால் படைத்தவனால் கூட மனித மனதை நிலையாக இதுதான் என்று கூற சிரமப்படுவார் என்பார்கள். அப்படியாகப்பட்ட மனது நம்மிடம் உள்ளது. அதன் ஞான தெளிவிற்கு நிச்சயம் உங்களிடம் சில பக்குவம் தேவை. உங்களிடம் புதைந்துள்ள பதில்கள் வெளிப்பட வேண்டும். அந்த பதிலே உங்களுக்கு பல உண்மைகளை உணர்த்தும். உணர்த்துதலை ஒரு குரு பல கால பயிற்சிக்கு பின்புதான் அதை செய்ய முடியும். ஆனால் ஒரே மணி நேரத்தில் நீங்கள் யார் என்பதை சில கேள்விகள் மூலம் நீங்களே உணரலாம். பல கேள்விகள் மூலம் அனைத்தையும் தன்னால் புரிந்து சரிசெய்து கொள்ளலாம். அந்த கேள்விகளையும் நம் பயிற்சியில் ஒரு அங்கமாக அளிக்கிறோம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்னவென்றால் உங்கள் மனம் மறைக்காமல் உண்மையை கூற வேண்டும். அதற்கு நீங்கள் மட்டுமே முயல முடியும்.

ஏன் எங்களை நேரில் அழைத்து கேள்விகேட்டால் நாங்கள் பதில்கூற மாட்டோமா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? இவ்வாறு நேருக்கு நேராக கேள்வி கேட்டு பதில் கூறுவது உடனுக்குடன் முடியும் வேலைதான். நேரமும் மிஞ்சும் இது மிக வசதியானதுதான். ஆனால் இந்த நேர மிச்சம் வசதியாவும் எங்களுக்குத்தான் தங்களுக்கு இல்லை. ஏனெனில் கேள்விக்கான பதில்கள் உங்களுக்கு நன்கு தெரிந்ததுதான் ஆனால் உங்கள் ஆழ்மனதில் இருந்து பதில்கள் வரவேண்டும். அது உடனே வரும் என்று சொல்ல முடியாது. சில கேள்விகளுக்கு உடனே பதில் தெரியும். பல கேள்விகளுக்கு ஆழ்ந்து தனிமையில் யோசித்தால் தான் பதில் தெளிவாக உங்களால் கூறமுடியும். எனவே அவகாசம் உங்களுக்கு மிக அவசியமாகிறது. தனிமையிடத்தில் இருந்து யோசித்து உண்மையை முடிவு செய்ய நிச்சயம் பொறுமையும், நிதானமும் தேவைப்படுவதால் கேள்வியை உங்களிடமே எழுதி ஒப்படைக்கப்படுகிறது. மேலும் பதில் தாங்கள் கூறி மற்றவர் தீர்மானம் சொல்லவோ இது சரி இது தவறு என்று கூறவோ அவசியமில்லை. பதிலை கண்டவுடன் எது சரியானது என்பதை உங்கள் மனமே ஒப்புக்கொள்ளும். மேலும் உங்கள் மனதில் திருத்தங்கள், பிழைகள், குழப்பங்கள், கவலைகள் இருந்தால் நம் பயிற்சி புத்தகத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் விளக்கங்கள் மிக மிக தெளிவான பாதைகள் நம் குருஜி அவர்கள் காட்டியுள்ளார்.

அடுத்தாற்போல் நேரில் பதில்களை கேட்கும்போது இன்னொரு முக்கிய சிரமும் ஏற்படுகிறது. அதாவது நேரில் கேள்வி கேட்கப்படும்போது ஒருவித பதட்டம் உண்டாகும். அப்போது ஆழ்மனம் வேலை செய்யாது. எனவே உங்கள் மனம் சரியான பதிலை சொல்ல சிரமப்படும். அவசரத்தில் பொய்யும் சொல்லலாம். கூச்சப்படலாம், பதில் தெரிவிக்க திணரலாம். மேலும் பதிலை தெரிந்து நாங்கள் எந்த விமர்சனமும் கூறக்கூடாது அது உங்கள் மனப்போக்கை மாற்றலாம். எனவே கேள்விகள் யாவும் உங்களை பக்குவநிலைக்கும் தெளிவிற்கும் அழைத்துச் செல்லவே குருஜி அவர்கள் உருவாக்கியுள்ளார். பதில்களை சரிசெய்யவும் அதில் வழிகாட்டியுள்ளார். எனினும் நீங்களே சரிபார்த்து தவறை திருத்தி உண்மையை முறைப்படுத்தி மனதை பதப்படுத்துங்கள். பின்பு நாங்கள் அளிக்கும் பயிற்சியை நன்கு படித்து மனதில் பதியவைத்து பின்பு பிடித்ததும் தங்களுக்கு ஏற்றதுமான ஒரு தெய்வீக கலையை தேர்ந்தெடுத்து அதை மிக எளிமையாக கடைபிடித்து சித்தி பெறுங்கள்.

மீண்டும் கூறுகிறோம் அடியேன் கொடுக்கும் கேள்விக்கு பதிலுரைக்கப்போவது உங்கள் ஆத்மாவாகும். எனவே பதிலையும் ஒரு குருவிடம் பெறவேண்டும் என முயலாதீர்கள். நீங்களே தரக்கூடிய பதிலாகத்தான் எல்லாமே இருக்கும். உதாரணமாக உங்கள் பெயர் என்ன என்று கேட்டால் அதை வேறொருவரிடமா கேட்டுச் சொல்வீர்கள் நீங்கள் தானே பதிலைக் கூறுவீர்கள். அதைப்போலத்தான் யாம் கேட்கும் கேள்விக்கான பதிலை உள்உணர்வை வெளியே கொண்டுவரும் பதிலை உங்களால் மட்டுமே தரமுடியும். தரப்பட வேண்டும். அப்போதுதான் அந்த பதில் மிக சரியான தீர்வை உங்களுக்கு அளிக்கும். நீங்கள் அளிக்கும் பதில் உங்களுக்குள் உண்மையை உணர்த்தும், தெளிவுபடுத்தும், அறிவை விழிப்புணர்வு பெறச்செய்யும். உங்களின் பதிலே உங்களுக்கு ஞானம் பிறப்பதை உணர்த்தும். ஒருவகையில் இது சுயசோதனை பயிற்சியாகும். இது உங்களை உங்களுக்கு உணர்த்தும் பயிற்சியாகும். உண்மையை தேடி வெளியில் அலைபவர்கள் முதலில் தன் உண்மை நிலையை மதிப்பீடு செய்து திருத்தங்களுடன் ஆன்மிகத்தில் ஈடுபட்டு வெற்றி காணுங்கள். நீங்கள் தவறான பதிலை தரமுயன்றாலும் அது முடியாது. பதில் தர உங்கள் மனம் ஒருவேளை குழப்பம் அடைந்தால் இறுதியில் பதிலை பயிற்சி புத்தகத்தோடு அளிக்கப்பட்டிருக்கும். அதை படித்து சரிசெய்து கொள்ளுங்கள். கேள்விகள் பயிற்சி புத்தகத்துடன் தனியாக ஒரு புத்தகம் கொடுக்கப்படும். நன்றி.

தியானம் தவம் இயற்சி மனதெளிவு பெறுவதே அக்காலம் முதல் இருந்துவரும் வழக்கமாகும். ஆனால் ஒரு சிறு கேள்விமூலம் ஞானம் பெற்றவரே பல ஞானிகள் இருந்துள்ளனர். ஒரு சொல் அவரவர் மனதில் பல்வேறு புரிதலை கொடுக்கும். அது அவரவர் மனதில் ஈடுபாட்டைப் பொருத்து பதில்கள் மாறுபட்டதாக இருக்கும். ஆனால் உண்மையிலேயே ஆன்மிகத்தில் வெற்றியடைய விரும்புபவராக தாங்கள் இருந்தால் நிச்சயம் அனைவரும் அளிக்கும் பதிலும் தாங்கள் அளிக்கும் பதிலும் ஒன்றாகத்தான் இருக்கும். எந்தளவு உண்மையை அறிந்து திருத்தம் செய்கிறீர்களோ அந்த அளவு வெற்றியும் கிடைக்கும். இது உறுதி. வெற்றி என்பது ஒரு குருவை மட்டுமே சார்ந்ததில்லை. அது அவரவரின் முயற்சியில் தான் உள்ளது. எல்லோரும் சொல்வது போல வெற்றி குருவிடம்தான் இருக்கிறது என்று நான் சொல்லமாட்டேன். சீடரின் ஆர்வம், விருப்பம், முயற்சி, ஈடுபாடு, கொள்கை, நம்பிக்கை, விடாப்பிடி, பக்தி, பாசம் இவற்றில்தான் வெற்றி உள்ளது. தவறான வழிகாட்டுதலை குரு தந்தாலும் ஒரு விசுவாசமான சீடனால் அதை அறிய முடியாவிட்டாலும் நம்பிக்கையே அங்கு தெய்வ சக்தியாக நின்று வெற்றி பெற்றுத்தரும். இந்த செய்தியை புராணங்கள் பல இடத்தில் குறிப்பிட்டுள்ளது.

மனமே குரு என்று ஏற்று அது செல்லுமிடமெல்லாம் நம்பிச் சென்று வெற்றிபெற்ற சித்தியாளர்கள் பலர் உண்டு. எனவே மெய்யன்பர்களே எல்லாமே குருவிடம் தான் உள்ளது என்பது குருவின் மேல் வைக்கும் பக்தியாக மட்டும் இருக்கட்டும். எல்லாம் அறிந்த குரு நம் அருகிலேயே இருக்கிறார் என்பதற்காக உங்களுக்கு சித்தி கிடைத்துவிடாது. சிறந்த குருவே உங்களுக்கு அமைந்தாலும் சீடனின் ஈடுபாடில்லாமல் குருவின் திறமை எடுபடாது என்பதை உணருங்கள்.

எனவே மெய்யன்பர்களே தெய்வகாரியங்களை குருவாகப்பட்டவர் வழிமுறையை காட்டிக் கொடுக்க முடியும் அவ்வளவே குருவிடம் தெய்வ சக்தி இருக்கிறது என்பதற்காக தெய்வ சக்தியை சீடனுக்கு கையில் எடுத்து கொடுக்கவோ, ஊட்டவோ எந்த குருவிற்கும் உரிமையில்லை என்பதை அறியுங்கள். அது இறைவனுக்கு மட்டுமே உண்டு என்பதை உணர முயற்சியுங்கள். தீட்சை என்பதைக் கூட சீடர்களுக்கு உணர்வை ஊட்டத்தான் பெரிதும் பயன்படுத்தினார்களே தவிர தன் சக்தியை பங்கிட்டு கொடுக்க அல்ல என்பதை நம்புங்கள்.

சினிமா கற்பனை கதைகளை மனதில் இருந்து தூக்கி எறியுங்கள். உண்மை உலகிற்கு வாருங்கள். உங்கள் மனதை தெளிவுப்படுத்தி ஞான விதை நட முயலுங்கள். மனத்தெளிவிற்கும் மனதூண்டுதலுக்கும் நாங்கள் கேட்கும் கேள்விக்கு மனம் திறந்து பதிலை கூறுங்கள். பிறகு பாருங்கள் குரு இல்லாமலேயே உங்களை நீங்களே செப்பனிட்டுக் கொள்வீர்கள். மனம் செம்மைப்படும் வினாக்களை மாந்திரீக பிரம்ம பயிற்சியில் உடன் அளிக்கிறோம். பயனடையுங்கள்.

பயிற்சி நூல் மற்றும் உபகரணங்கள் பெறுவோருக்கு ஆத்ம தெளிவு தரும் கேள்விகள் தனிபிரதியாக அளிக்கப்படுகிறது. சில கேள்விகளுக்கு பதிலும் வழங்கப்படுகிறது. கேள்விக்கான பதில்களில் சரி தவறு எது என தங்களுக்கே தெரியவரும். சரி செய்யுங்கள். (முக்கிய குறிப்பு உங்கள் பதிலை ஆலோசனை செய்தால் இது தெய்வத்திற்கு பிடித்தமானது, நியாயமானது அல்லது நம் எண்ணத்தில் முடிவில் மாற்றம் செய்ய வேண்டியது என்ன என்பதெல்லாம் உங்களுக்கே நன்கு தெரியவரும். அதை நீங்கள் தான் சரிசெய்ய வேண்டும். உங்கள் எண்ணத்தில் தவறு இருந்தாலும் இருப்பதை உள்ளபடியே ஒத்துக்கொண்டு அதை இறைவனிடம் கூறி சரிசெய்துகொள்ள வேண்டும். இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது உங்கள் எதிரில் இறைவன் அமர்ந்திருப்பதாக பாவித்து மனசாட்சியின் பதிலை ஆலோசனை செய்யுங்கள். இதில் யாருடைய கலந்துரையாடலும் இருக்கக்கூடாது. பதில் சுதந்திரமானதாக இருந்தால்தான் தவறை திருததிக்கொள்ள முடியும். குற்றங்குறைகளை மற்றவர் சுட்டிக்காட்டினால் நமக்கு அவமதிப்புபோல இருக்கலாம். எனவே உங்களை நீங்களே சரிசெய்துகொள்வது சிறந்தது. மேலும் நம் மனசாட்சி நமக்கு கட்டுப்படும். பிறருக்கு எளிதில் கட்டுப்படாது. இதற்காகவேண்டியும் நம் குறைகளை மனசாட்சி சுட்டிக்காட்டினால் அதை சரிசெய்துகொள்ள வேண்டும்.

எப்படி நடக்க வேண்டும். எப்படி நடக்கக்கூடாது. முறைகள் விதிமுறைகள் கடமைகள் என அத்தனையும் நம் பயிற்சியில் கொடுக்கப்பட்டிருந்தாலும் இங்கு கேள்விகள் கொடுக்க காரணம் உண்டு. உங்கள் மனம் எப்படிபட்டதென்று யாருக்கும் தெரியாது. உங்கள் மனம் ஒரு சரியான பாதைக்கு வராமல் எங்கள் பயிற்சி காலதாமதமாக வெற்றி கிட்டலாம். எனவே எண்ணங்களின் பிழைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்துகொள்ள பயிற்சியாகத்தான் இந்த கேள்விகள் கொடுக்கப்படுகிறது. இதன் பயனாக சரியான புரிதல் ஏற்பட்டு பயிற்சியில் விரைவாக எளிதில் வெற்றி கிட்டுவது உறுதி. 16 ஆண்டுகள் குருகுல வாசம் இருந்து சரிசெய்யப்படக்கூடியதை சில கேள்விகள் மூலம் தங்களை மிக எளிதாக புரிதல் ஏற்பட்டு மன மாற்றங்களை கொடுத்து புதுப்பிக்கிறோம். குருஜியின் முழுமையான அனுபவ முறையால் இதை செய்கிறார். யாருக்கும் கால விரையம், பண விரையம் ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த சேவையையும் செய்கிறார். இது குரு கடமையும் ஆகும். பலன் பெறுக . தன்நிலை தான் அறிதல் அவசியமாகும் தன்னிலை அறிதலே பக்திக்கும் முக்திக்கும் முதற்ப்படியாகும் . நன்றி .

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .