ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

விதியை மாற்ற முடியுமா?

விதியை மாற்ற முடியும். ஆனால் முயற்சிக்க வேண்டும். முயற்சி செய்ய முடியாது என்றால் விதி தன்போக்கில் தான் வேலை செய்யும். மிக மிக சிறந்த ஜோதிடனிடம் சென்று தன் பிறவியின் அம்சத்தை ஆராய்ந்து இந்த பிறவியின் நோக்கை ஆராய்ந்து கடக்க வேண்டிய பாதை எப்படிப்பட்டது எவ்வாறு இருக்கும் என்பதை ஆராய்ந்து தர்மத்தை சார்ந்த மாற்று வழியை கடைபிடித்து அவ்வாறே வாழ பழக வேண்டும். அவ்வாறு சிறந்த ஜோதிடர் கிடைக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்கள் விதி செயலை அறியலாம். அதாவது உங்கள முன்னோர் செய்த செயலை பொருத்தும் பெற்ற தெய்வ அருள், தர்மம், பாபம், சாபம் இவைகளை பொருத்தும் நம் வாழ்க்கையில் அனுபவிக்கவோ, தித்துபடி செய்யவோ கூடிய நிலைகளே அமைகிறது. அதன்படியே நம் விதி அமையும் என்பதை நீங்களே கணித்துக்கொள்ளலாம்.

பின்பு விதியில் பாதக நிலை இருக்கிறது என்று அறிந்தால் நேரம் காலம் வரும் வரை பொறுக்காமல் அன்றே மாற்று வழி அறிந்து கடைபிடிக்க துவங்க வேண்டும். விதியை அறிந்தவரும் அறியாதவரும் விதி நன்றாக நற்பணிபுரிய செய்ய வேண்டியதெல்லாம் இதுதான் நல்லொழுக்க வாழ்க்கை. தெய்வம் தொழுதல், உயிர்களை நேசித்தல், தர்மம் செய்தல், பாரபட்சமில்லா அன்பை அனைவரிடமும் கையாளுதல், புன்னகை தழுவிய மனம், கோபம் கொள்ளா குணம், வஞ்சகம் இல்லா எண்ணம், சலிப்படையா உழைப்பு இவைகளை கடைபிடித்தாலே போதும். தன்னால் விதி நற்பணி புரியும். இதைவிட சிறந்த வழியை வேதமும், மதமும், சாஸ்த்திரமும், புராணமும் கூறியிருந்தாலும் எல்லாமும் இதை சார்ந்தே இருக்கும். இந்த ஒழுக்க வழியெல்லாம் குழந்தை பருவத்தில் இருந்தே கடைபிடிப்பவருக்குத்தான் விதி தீமையை செய்யாமல் மாற்று வழி உபாயத்தை கையாளும் மதியை நமக்கு காட்டும். இடையில் கடைபிடிப்பவர்களானாலும் ஆரம்பத்தில் இருந்தே ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்களானாலும் முன்விதி பயன் என்னும் முன்னோர் செய்கையை சிறுபங்காவது அனுபவித்துதான் ஆக வேண்டும். சிறு துன்பமாவது அனுபவித்தால்தான் தெளிந்த அறிவு கிடைக்கும். ஒன்று துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அல்லது பார்த்து உணர வேண்டும் அல்லது அனுபவிக்கும் துன்பத்தில் இருந்து நாம் பதம் பெற வேண்டும். இந்த துன்பமே சிறிதுகூட என்னை அணுக கூடாதென்றால் நம்மை வழிநடத்தி வரும் பெற்றோர்கள் நம் பிறப்பிற்கு முன்பிருந்தே விதி கூறும் குற்றங்களை போக்கி மதி கூறும் தர்மவழியாம் இறைநெறியை கடைபிடித்திருந்தால் விதியை வெல்லலாம்.

வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு போன வாழ்க்கை போகட்டும் மீத வாழ்க்கையாவது நல்லவிதமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால் நம் மஹா கணநாதர் சொற்படி யாம் எழுதும் ஸ்ரீ கீதை என்னும் ஸ்ரீ சுப மங்கள சாஸ்த்திர நூலை வாங்கி படியுங்கள். அதன்படி பின்பற்றுங்கள். விதி நல்லவிதமாக பணிபுரியும். எழுதிய விதி எழுதியதுதான் அதை மாற்றி வாழ்க்கை வாழ முடியாது என்பதெல்லாம் தவறு. அவ்வாறு வழியே இல்லையென்றால் இறைவனும், சாஸ்த்திரமும் இன்றுவரை வாழ்ந்திருக்காது. சித்தனும், சிந்தையும் உதவியிருக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அறிந்தும் அறியாமலும் தவறு செய்வது உயிர்களின் இயல்பு. எந்த வினைக்கும் எதிர்வினை உண்டு. அந்த எதிர்வினை இயந்திரங்களுக்கும் பொருந்தும். உயிர்களுக்கு அதிகமாகவே பொருந்தும். சர் பட்டம் பெற்ற விஞ்ஞானியின் தந்தை என்று போற்றப்பட்ட ஐசக் நியூட்டனின் கருத்தும் இதுதான். அவர் விஞ்ஞானமாகச் சொன்னார். அதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்னமே இக்கருத்தை உலகிற்கு மெய்ஞானமாகசொன்னவர்கள் நம் சித்தர்கள் ஆவார்கள். ஒரு உண்மையான கருத்தை இங்கே சொல்ல வெட்கப்படுகிறேன். அதாவது நம் விதியை மாற்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அதை ஆசையாலும், இயலாமையாலும், சோம்பேறித்தனத்தாலும் மாற்ற முடியாமல் தவிக்கிறோம். எந்தஒரு தெய்வீக சக்தியை பெறவும் மேற்சொன்ன மூன்று விஷயங்கள் பெரும் தடைக் கற்களாகும்.

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .