ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

மின்காந்த சக்தியை அதிகமாக உடலுக்குள் பரவ வேண்டும்.


மின்காந்த சக்தியை அதிகமாக உடலுக்குள் பரவ வேண்டும் அதுவே நாம் மந்திரங்களால் உண்டாக்கும் காந்த சக்தியோடு தொடர்புகொண்டு நம் நரம்புகளில் மாற்றம் செய்து நம் ஞான கதவு திறக்க வழிசெய்கிறது. எனவே நம் முயற்சிகள் எளிதில் வெற்றி அடைய மின்காந்த சக்தி அதிகம் கிடைக்கும் இடங்களையும் பொருட்களையும் சூழ்நிலையையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு மின்காந்த சக்தி அதிகம் கிடைக்கும் திசை கிழக்கு, வடக்கு திசைகளாகும். இவ்விரு திசையும் இணைந்த வடகிழக்கு மூலையும் மின்காந்த சக்திக்கு உகந்த திசையாகும். நற்செயல் செய்ய மின்காந்த சக்தி மிக அவசியம் தீய செயல் செய்ய மின்காந்த சக்திக்கு எதிரான தடை திசைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். மேற்கும், தெற்கும் இவ்விரு திசை சந்திக்கும் மூலை திக்கான தென்மேற்கு திசையும் மின்காந்த சக்தி தடை திசைகளாகும்.

இதேபோல்தான் ஆடையும், சூழ்நிலையும், மூலிகையும், கற்கலையும் பலன் அறிந்து பிரித்து பயன்கொள்ள வேண்டும். சில உதாரணங்கள் அறிக. சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆடை மின்காந்த சக்தியை ஈர்க்கும். கருமை, நீலம், பச்சை போன்ற அடர்த்தியான வண்ணம் மின்காந்த சக்தியை தடுக்கும். (மாரணம், தம்மணம் போன்ற செயல்களுக்கு இந்த வண்ணத்தையே பயன்படுத்துவர்.) காவி நிறம் நற்செயல் தீயசெயல் இவ்விரண்டிற்கும் பொதுவானதாகும்.

அடுத்து நீர்நிலை சார்ந்த எந்த இடமும் (கடல், ஆறு, ஏரி, ஓடை, குளம், கிணறு.) மின்காந்த சக்தி அதிகம் கிடைக்கும் இடங்களாகும். மலைமுகடுகளும் மின்சக்தி அதிகம் கிடைக்கும் இடங்களாகும். முள்செடி அதிகம் உள்ள வனங்கள், நீர் இல்லா பாலைவனம், சுடுகாடு இடுகாடு போன்ற இடங்கள் மின்சக்தியை தடுக்கும் இடங்களாகும். இங்கு தீயசெயல் செய்ய ஏற்ற இடங்களாகும்.

அடுத்து வெளிச்சம் உள்ள இடங்கள் மின்காந்த சக்தியை ஈர்க்கும். வெளிச்சமற்ற இடங்கள் மின்காந்த சக்தியை தடுக்கும். அமாவாசை மின்காந்த சக்தியை குறைக்கும் நாள் எனவே தீயசெயல் செய்ய உகந்தது பௌர்ணமி மின்காந்த சக்தி பெருமளவு கிடைக்கும் நாள் எனவே சுபதொடக்கம் நன்று.

அடுத்து விடியற்காலையும், சூரிய மறைவிற்கும் சந்திர உதயத்திற்கும் இடைப்பட்ட காலமும் மின்காந்த சக்தி உடலில் பாய ஏற்ற நேரங்களாகும். இரவு மற்றும் பகல் உச்சிவேளை மின்காந்த சக்தியை மையம்கொண்டு இருக்கும் தீயசெயல் செய்வதால் ஏற்படும் தாக்கம் செயலை செய்பவரை தாக்காமல் தப்பிக்க வைக்கும்.

அடுத்து கழுத்தில் அணியும் மாலையிலும் மின்சக்தி பெருக்கமும் அதை தடுக்கும் ஆற்றலும் உள்ளன. ருத்ராட்சம், துளசி, தாமரை கொட்டை, ஏலக்காய் மாலைகள் மின்காந்த சக்தியை அதிகமாக உடலில் ஊடுருவ வைக்கும். மிளகு, சங்கு, மண்டைஓடு மாலைகள் மின்சக்தியை தடுத்து தீய செயலுக்கு ஒத்துழைக்கும்.

அடுத்து மூலிகைகள் பொறுத்தவரை இருசெயல்களுக்கும் பொதுவானவையே என்றாலும் சில காரியங்களை பொறுத்து அதன் சக்தி உள்ள மூலிகைகளை பயன்படுத்த வேண்டும். மின்காந்த சக்தி மிக அதிக அளவு உள்ள மூலிகைகள் வெற்றிலை, வேம்பு, துளசி, வில்வம், அருகம்புல், தர்பை இவைகளே முதல் தரமாகும். இந்த மூலிகையை வைத்தே எல்லா செயல்களையும் சக்தி பெற்ற ஒருவன் சாதிக்க முடியும். சக்தியற்றவர் பிற மூலிகைகளின் கூட்டு சக்தியை பயன்படுத்தி மின்காந்த சக்தியை கூட்டவோ தடுக்கவோ செய்து காரியம் சாதிக்க வேண்டும்.

அடுத்து மரங்களில் அவரவர் நட்சத்திர மரமே அதிக மின்காந்த சக்தியை உடலில் பெற உதவும் என்றாலும் அரசு,ஆலம், வேம்பு, வில்வம், இலந்தை, நெல்லி, மகிழம், மாமரம், நாவல், முள்மரங்கள் ஆகிய மரங்கள் சக்தியை பெருக்க தடுக்க உதவும் மரங்களாகும். முள்மரங்கள், இலந்தை, நாவல், வேம்பு மரங்களின் தன்மை தீயசக்திகள் செய்வினைகள் செய்ய ஒத்துழைக்கும. இதில் வேம்பை நல்ல, தீய இரு காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். மின்காந்த சக்தியை தடுக்கும் ஏற்கும் ஆற்றல் உள்ள மரங்களாகும். மற்ற அரசு, ஆலம், வில்வம், மகிழம், வேம்பு, நெல்லி ஆகிய மரங்கள் மின்காந்த சக்தியை அதிகம் உமிழக்கூடிய மரங்களாகும். இவை பெரிதும் நற்செயலுக்கே பயன்தரும். புதிய சக்தி பெருமானத்திற்கும் பெரிதும் உதவும். இவைகளில் அதீத சக்தி அரச மரத்திற்கே உண்டு. இதன் மின்காந்த சக்தியும், பிராண வாயுவும் மனிதனை உடனே வந்தடையும். வெகு சீக்கிரத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். கண்டிப்பாக தீயதை செய்யாது. ஆனால் நடுநிசி, பகல்நிசி வேளையில் அரசமரம் செயலற்று இருக்கும். அப்போது எச்செயலை செய்கிறோமோ அச்செயல் செய்பவரின் சக்தியை பொருத்து பலன்கள் அமையும்.

அரசமரம் அமாவாசையில் தீய சக்திக்கும், பித்ரு சக்திக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கும். பௌர்ணமி அன்று அரசமரம் சுபசக்தியை அதிகளவு ஈர்த்து கொடுக்க உதவும். (சித்தர், தெய்வம்) ஆகிய வழிபாடு தவங்கள் பௌர்ணமி நடுநிசியில் செய்ய வெற்றி கொடுக்கும். ஆக அரசமரம் பல அதிசயமும் மர்மமும் நிறைந்த மரமாகும். ஆக செயல்களை பொறுத்து இடத்தையும், பொருட்களையும் பயன்படுத்த வேண்டும்.

சில இசைகள் ஓசைகளும் மின்காந்த சக்தியை மனித உடலில் இருந்து தூண்டி ஆக்ஞா சக்கரத்தை சுற்றச் செய்யும். அப்போது ஏற்படும் மாற்றம் இசையை பொருத்தது ஆகும். தேவைக்கேற்பவே இசையை செயல்படுத்த வேண்டும். உதாரணமாக மருள்வர பம்பை உடுக்கை, தாரை தப்பட்டங்கள் உதவி செய்யும். மனஅமைதிக்கு நாதஸ்வரம், கெட்டிமேள கருவியான மிருதங்கள் உதவி செய்யும். அதேபோல் தான் மந்திர உச்சரிப்பும் இருவகை செயல்களை உள்ளடக்கியதாகும். ஒரு சில மந்திரங்கள் சொல்ல சொல்ல ஆவேசம் வேகம் அதிகமாகும். ஒரு சில மந்திர உச்சரிப்பு மன சாந்தத்தோடு ஆழ்நிலைக்கு அழைத்துச் செல்லும். ஒரு சில மந்திரங்கள் புத்தியையும், உணர்வுகளையும் கெடுக்கும். இதை அவரவர் செயல்களை தேர்ந்தெடுத்து ஒலிகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பது அவசியம். உதாரணமாக அம்மா என்று கூறி கொஞ்சவும் பயன்படுத்தலாம் அம்மா என்று அதிர்ச்சியிலும் கூறலாம். சொல் ஒன்றுதான் பொருள் ஒன்றுதான். ஆனால் இடத்திற்கு ஏற்றாற்போல் மாறுபட்ட கருத்து பலன் உண்டு. அதைபோலத்தான் மந்திர ஒலிகளை செயல்படுத்துவதில் மர்மம் மறைந்துள்ளது. இவைகளெல்லாம் அடிப்படையில் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களாகும்.

மேலும் அறிக. ஆடி மாதம் அசுரர் கால தொடக்கம். எனவே உயிர்பலி செய்து அசைவஉணவு சமைத்து வைத்து மாமிசத்துடன் மதுவகையும் வைத்து குலதெய்வத்தை வணங்கி ஆடி மாதத்தை கடத்துவர். அசுரர்களுக்கு பிடித்தமான வழிபாடு முறைகளும், மனித உயர்விற்கான பூஜை முறைகளும் செய்து தன்னிடம் உள்ளதை காபந்து செய்துகொள்வர். தை மாதம் முதல் தேவர் காலம் என்பதால் முன்வரும் மார்கழி மாதம் முதலே நற்பழக்கங்களை கடைபிடித்து தேவர்களின் அருளைப்பெற முயற்சிப்பர். இதையேன் இங்கு தெரிவிக்கிறோம் என்றால் நல்ல செயல்களை தொடங்கும்போதும் நல்ல கலைகளை கற்கும்போதும் தை முதல் ஆனி மாதத்திற்குள் தொடங்கினால் நல்ல சூரிய எனர்ஜியோடு மின்காந்த சக்தி பெருக்கத்தோடு கூடிய நம் உடலும் ஒத்துழைத்து செயலில் வெற்றி காணவைக்கும். இம்மாத இடைவெளியில் தீயசெயல்கள் செய்தால் உடனே நம் சக்தி முழுவதும் ஸ்தம்பிக்கும். அசுரகாலமெனும் ஆடி முதல் மார்கழி வரையில் அசுப கலைகள் மற்றும் தீயசெயல்கள் செய்யும் பட்சத்தில் மின்காந்த சக்தி இக்காலத்தில் குறைந்துகாணுமாதலால் தீயசெயலின் தாக்கம் மனிதனை தாக்குவதில்லை.

அசுரருக்கு பிடித்த படையலை கொடுத்து கோரிக்கையை பூர்த்தி செய்துகொள்ள முயல்பவர்கள் இக்காலத்தில் முயல்வதால் வெற்றி உண்டாகும். (ஒருவேளை உங்களுக்கு யாராவது தீயதை செய்து அது உங்களை தாக்காமல் இருக்க வேண்டுமானால் உங்கள் உடலில் அதிகளவு மின்காந்த சக்தி இருந்தால் எக்காலத்திலும் எவராலும் சாபமோ, பாவமோ, தீய பலனோ உங்களை அண்டாது. ஒருவேளை உங்களிடம் மின்காந்த சக்தி குறைபாடு இருந்தால் அதை நிவர்த்தி செய்ய துளசி மூலிகையை சாப்பிடுங்கள். உடலில் மின்காந்த சக்தி பெருகி தீயதை அண்டவிடாமல் காக்கும். இஃது பனிபொழிவு, மழை நிறைந்த காலங்களில் மட்டுமே பலன் கொடுக்கும். நன்கு வெயில் காயும் காலங்களில் எதிர்மறையான பலனை கொடுக்கும். உடலில் அதிக உஷ்ணத்தை உண்டாக்கி உடல் சக்தியை குறைத்துவிடும் கவனம். புரட்டாசியில் மழையும், மார்கழியில் பனியும் பொழிவது இயற்கை. இதனால்தான் விஷ்ணு காலமான தட்சணாயன காலத்தில் விஷ்ணுவின் மூலிகையான துளசியை அனைவரும் சாப்பிட ஏதுவாக இவ்விரு மாதங்களில் விஷ்ணு வழிபாட்டை ஊக்குவித்தார்கள். ஆக நல்லவர்களை கெட்டவர்களின் செய்வினை துன்பத்தில் இருந்து காக்கவும் துளசி உண்ணுவதை வழிபாடு மூலம் செய்தார்கள்.

அடுத்து அறிக. உத்ராயணம் என்னும் தேவர்களின் காலமான தை முதல் ஆனி வரை அதிக அளவு மின்காந்த சக்தி பூமியில் பெருகி இருக்கும். (சூரியனும் பூமிக்கு மிக அருகில் இருப்பார்.) அக்காலத்தில் சுப செயல்கள் யாவும் செய்யலாம். இக்காலத்தில் தீய செயல் தாக்கம் பெரிதும் மக்களை பாதிப்பதில்லை. எனினும் சக்தி பெற்ற மனிதனின் செய்வினை சக்தியற்ற இக்காலத்தில் கெடு செயலில் ஈடுபடக்கூடியவர்கள் இச்செயலில் ஈடுபட்டால் பெருமளவு பாதிப்படைவர். ஈடுபட்டவரோடு இல்லாமல் அவரை சார்ந்தவரையும் தாக்கும். (தீய செயலை செய்பவன் உத்ராயண காலத்தில் நெருப்புக்கு சமமாவான். எனவே அந்நெருப்பு அவனை சுற்றி திறப்பு இருக்காது. (இது நல்ல வெயில் காலத்திற்கே பொருந்தும். மழை, பனி காலத்திற்கு பொருந்தாது.) அதேபோல் தீய செயலின் தாக்குதலில் இருந்து மற்றவரும் தப்பிக்க வேண்டுமானால் வில்வம் சாப்பிட்டால் உண்டவரை தாக்காது. இந்த அசுர காலம் தேவர் காலம் இரண்டிற்கும் சேர்த்து பொதுவாக செய்யக்கூடிய பாதுகாத்துக்கொள்ள வேண்டிய ஒரு வழியுண்டு. அது விநாயகருக்கு உரிய அருகம்புல் ஒன்று சாப்பிட்டு அரசமரத்தை தினசரி சுற்றி வருபவரை ஒருபோதும் எந்த சாபமோ, பாவமோ, செய்வினையோ தாக்காது. இன்னும் சொல்லப்போனால் பெற்ற தாயின் சாபமாக இருந்தாலும் தாக்காது. உடலில் விஷம்போல் நாகசாபம் தோஷம் இருந்தாலும் விலகிவிடும். எக்காலத்திற்கும் ஏற்ற வழிமுறை இது என்பதால் ஆதிகால முதலே பிள்ளையார் வழிபாட்டை அரசடியில் தொடங்கி வைத்தனர்.

ஒரு செயலில் கலையில் ஈடுபடக்கூடியவர்களும் அவர்கள் உடலில் மின்காந்த சக்தி குறைந்து காணப்பட்டாலோ, வம்சா வழி பாப சாபம் இருந்தாலோ காலையில் தீய பலனோடு, தோல்வியோடு தான் விலகுவர். இது நேராமல் இருக்க மின்காந்த சக்தி உடலில் பெருக பிராணாயாம பயிற்சி செய்து மின்காந்த சக்தி பெற அரசடி விநாயகரை குருவின் குருவாக பாவித்து முதல் பூஜை அவருக்கு கொடுக்கும் வழக்கத்தை தினசரி செய்ய வேண்டும். மேலே கூறியவை எல்லாம் சூழ்ச்சுமங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சுருக்கமாக கூறியுள்ளேன். எல்லா நாளும், எல்லா காலமும் எல்லா முறையும், எல்லா முறைகளும் ஒன்றென போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. எல்லாமே காரணம் அறிந்து காரியம் அறிந்து செயலை ஏற்ற காலத்தில் ஏற்ற அவையங்களோடு செய்ய துவங்கினால் எதிலும் வெற்றிதான். தோல்வி என்பதில்லை. இன்னும் பல விரிவான விளக்கமான ரகசியங்களை நம் பயிற்சி புத்தகத்தில் காண்போம்.

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .