ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

அருணோதய முகூர்த்தம்

அதிகாலை எவர் எழுந்து பூமி தொட்டு வணங்கி குளித்து  திலகம் இட்டு தெய்வத்தை வணங்குகிறார்களோ அவர்களை அன்னை லட்சுமி ஆசீர்வாதம் செய்வாள், பிரம்மமுகூர்த்த வேளையில் ஒவ்வொரு வீட்டிலும் அன்னை வருகைபுரிவாள் அவள் காணும் காட்சி என்னவோ அதற்குரிய ஆசீர்வாதம் செய்வாள், இந்த ஆசீர்வாதம் வழங்கும் நேரம் பிரம்ம முகூர்த்த முடிவு நேரத்தில் (அருணோதயம் வரும் முன்) வழங்குவாள், எனவே இந்த அருணோதயமுகூர்த்தம் ஒவ்வொரு நாளும் வரக்கூடியது, எனவே அதிகாலை எழுந்திருந்து தன்னையும் வீட்டையும் தூய்மைபடுத்தி மனதை புத்துணர்ச்சியாக ஆக்கிக்கொண்டால் அந்த புத்துணர்வு என்றும் நிலைக்கும்,

இவ்வேளையில் பூஜை செய்வது . கல்வி பயில்வது . யோகா செய்வது . போன்ற சுப செயல்களையும். யாத்திரை. பயணம் . பணிசெய்தல் போன்ற செயல்களையும் செய்யலாம் சிறந்த பலனையே தரும்.

இதற்க்கு மாறாக தூங்குவது. திட்டுவது . சாபமிடுவது . தாம்பத்யம் செய்வது . தலைவிரி கோலமாய் இருப்பது .  கால் நீட்டி அமர்வது . முடி. நகம் வெட்டுவது . மரம் செடி கொடிகளை தேவையில்லாமல் வெட்டுவது . வீண் கற்பனை செய்வது . போன்ற செயல்களில் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது , உயிர் வதையும் எப்பொழுதும் கூடாது , இவ்வாறு கடைபிடிக்க வேண்டியதை கடைபிடித்து நீக்க வேண்டியதை நீக்கினால் சுபிட்சம் சந்தோஷம் கடாட்சம் உண்டாகும், வீட்டில் எப்பொழுதும் சுப வார்த்தைகளை மட்டுமே பிரயோகம் செய்யுங்கள்,அருணோதயமுகூர்த்தம் அளவற்ற நன்மைகளைச்செய்யும் . ஆதவன் உதயத்திற்க்கு முன் உள்ள நேரமே அருனோதய முகூர்த்தமாகும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .