ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

                தோஷகிரக வசிய ரகசியம்

 நவ கிரஹத்தில் செவ்வாய் பகவானை  தன் ஜாதகத்தில் தோஷம் இருந்தால்   மட்டுமே  இன்றைக்கு வழிபாடு செய்கிறார்கள் . இஃது மக்களின் அறியாமையே ஆகும். மக்களுக்கு நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் உடனடி பலன் தரக்கூடியவர்கள்  நவகிரஹங்களில் நால்வர் மட்டுமே முதன்மையானவர்கள்.செவ்வாய்  சனி ராகு கேது ஆவார்கள் . இவர்களை ஒருமுறையாவது தர்மங்கள் செய்து வழிபட்டால்  அதற்கான நற்பலனை தாமதிக்காமல் கொடுத்து விடுவார்கள்.

அதனால்தான் அக்காலத்திலேயே முன்னோர்கள் மக்களால் தீர்க்க முடியாத பிரச்சனையை தீர்க்க கிரஹ வழிபாட்டை  ஆராய்ந்து வைத்தார்கள். மக்களும் வழிபட்டு நற்பலன் பெற்றார்கள். நாளடைவில் இக்கிரஹங்களை தோஷம் இருந்தால் தான் வழிபட அவசியமாகிறது என்று அர்த்தம் கொள்ளப்பட்டுவிட்டது . இது காலத்தின் தவறாகும்.
ஸ்ரீ செவ்வாய் கிரஹம் மங்களங்களை அருள்வார் செல்வ செழிப்பை அருள்வார். எல்லா வெற்றிக்கும் வழிகாட்டுவார் அதனால் தான் மங்களவன் என்ற பெயரும் அவருக்குண்டு . ஸ்ரீ  ராகு கிரஹம் குலதெய்வத்தின் அருளையும் முன்னோர்களின் அருளையும் குவித்து நமக்கு வழங்கி எத்தடையையும் தாண்டி வெற்றி கொள்ளச் செய்வார் அதனால்தான் பித்ருகிரகம் என்று அழைப்பார்கள் .  ஸ்ரீகேது கிரஹம் நாம் செய்த தர்மங்களின் பலனையும், வலது மூளை குறிக்கோளையும், ஆழ்மன வேண்டுதலையும், பூர்த்தி செய்து கொடுப்பார் அதனால்தான் ஞானகிரகம் என்று அழைப்பார்கள் . ஸ்ரீ சனிஷ்வரர் கிரஹம் எல்லாமே தீர்க்கமாக நமக்கு தங்க வைக்கக் கூடியவர். தவறுகளை மன்னிக்கும் பொறுப்பு இவரிடமே உள்ளது . தர்மத்தை செயல்படுத்தக்கூடியவரும் இவரே. ஆயுள் அதிகரிப்பதோடு ஜீவனத்தை அளிப்பதும் இவரே  இவ்வளவு அதி அற்புதமான கிரஹங்கள் மகாலட்சுமி சுத்தம் இருந்தால் தான் அனுகிரஹம் செய்வார்கள்.

இந்த நால்வர் எப்பொழுதும் ஒருவருக்கு தோஷத்தை தானாக  தருவதில்லை . இவர்களின் அருளை பெற தகுதியற்ற தோஷனாக நாம் உருமாறும் போது மட்டுமே தோஷத்தை தருவார்கள்  என்பதே உண்மை. இன்னொரு ரகசியத்தையும் அறியுங்கள். இந்த நான்கு கிரஹங்களின் அருளை பெரும் தகுதி யாருக்கு இல்லையோ வேறு எந்த தெய்வமாகட்டும் கிரஹமாகட்டும்  மற்ற உயிரினமாகட்டும் யாருடைய அனுகிரஹமும் பெற தகுதி அற்றவர்களாகி விடுகிறார்கள். இந்த நால்வரின்  அருள் உள்ள மனிதனை மகாலட்சுமி அனுகிரஹம் செய்ய ஒரு போதும் தயங்குவதில்லை .

அதனால்தான் முன்னோர்கள் கட்டாய வழிபாடாக அனுகிரஹம் பெற வழிகாட்டினர். மக்கள் நன்மையை நன்மையாக சொன்னால் மதிப்பதில்லை எனவே வேறு வழியின்றி தோஷமாக உருவகபடுத்தினர் . அவ்வாறாக வழிபாடு செய்து பலனை பெற வைத்தனர் .

மேலும் கிராமம் நகரம் என எல்லா இடங்களிலும் பரவலாக உள்ள தெய்வங்களை கண்டால் இந்த நான்கு கிரஹங்களின் அதிதேவதையையே வழிபட வழி செய்தனர். ஸ்ரீ செவ்வாய் பகவான் அதிதேவதை ஸ்ரீ முருகர் , ஸ்ரீராகு பகவான் அதி  தேவதை சக்தி அம்மன், ஸ்ரீ கேது பகவான் அதி தேவதை ஸ்ரீ விநாயக பெருமான், இந்த மூன்று ஆலயங்களும் நிச்சயம் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பதை காணலாம். ஸ்ரீசனீஷ்வரரின் அதிதேவதை ஸ்ரீகாலபைரவரும் ஸ்ரீமன் நாராயனரும் ஸ்ரீஆஞ்சனேயரும் ஆவார்கள் . நாடு முழுக்க இவர்களின் ஆலயமே நிறைந்திருப்பதை காணலாம் . இப்போது சூழ்ச்சுமம் புரியும் என்று நினைக்கிறேன். எனவே மெய்யன்பர்களே இனியாவது இவர்களை அசுபகிரகம் என்று கூறி தவறுசெய்யாமல் இவர்களை தர்மத்தோடு அனுகி அனுகிரகம் பெருங்கள் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .