ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

மருதாணி வசியம்

  ஆணோ. பெண்ணோ யாராக இருந்தாலும் ஒரு விரலிலாவது மருதாணி வைக்க வேண்டும், மருதாணியில் மஹாலக்ஷ்மி வாசம் இருக்கும், இதை பயன்படுத்தும்போது செல்வம் பெருகும், இந்த யுகத்தில் பொருளுக்காகத்தான் பெரும்பாலும் மக்கள் முயற்சி செய்கிறார்கள், அந்த பொருளை அடைய சிறு உபாயம்தான் இந்த மருதாணி, மேல்குடிக்காரர்கள் இதை ரகசியமாக பயன்படுத்துவார்கள், அதனால்தான் செல்வம் அவர்களிடம் நிலை கொள்கிறது, முக்கிய பண்டிகையின் போதெல்லாம் இந்த மருதாணியை பயன்படுத்தவும் .

 மேலும் இன்னொரு ரகசியமும் இதில் உள்ளது, தாம்பத்யம் சிறப்பாகவும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும் இந்த மருதாணி பயன்படுகிறது, கடையில் விற்கும் கோனை பயன்படுத்தக் கூடாது . மருதாணி இலையை நாமே அரைத்து பயன்படுத்த வேண்டும், திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மருதாணி வைப்பது அழகுக்காக மட்டும் அல்ல செல்லும் இடத்தில் குடும்பம் விருத்தி அடையவும். செல்வம். தாம்பத்யம் சிறக்கவும். சுபநிகழ்வு இந்த பெண் சென்ற நேரம் அடுத்தடுத்து நடக்கவும் அந்த காலத்தில் மருதாணி பயன்படுத்தினார்கள் இதன் ரகசியம் இதுவே .

 ஆண்கள் பயன்படுத்தும்போது பகை அவர்களை நெருங்காது, கோபமுள்ள மனிதருக்கும் சாந்தம் உருவாகும், நட்பு வட்டம் உருவாகும், நல்ல சிந்தனை உண்டாகும், இத்தனை ரகசியம் அடங்கிய அபூர்வ மூலிகை மருதாணி, இந்த மருதாணி செடியை மிகமிக சுத்தமாக உள்ள தோட்டங்களில் மட்டுமே வைக்க வேண்டும் . இந்த மருதாணியை அவரவரே வைத்துக் கொள்வதைவிட பெண்ணுக்கு ஆணும். ஆணுக்கு பெண்ணும் வைத்துவிடுவதே சிறந்த யோக பலனை கொடுக்கும் . உள்ளங்கையில் அவசியம் வைக்கவும் . தன வசியம் உண்டாகும் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .