ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

 

 

         ஆலயத்திற்க்கு நிகரான விருட்சம்

ஒரு ஆலயம் கட்டி ஆயிரமாயிரம் பேர் வழிபட நாம் காரணமானால் நம் பரம்பரை என்றுமே லட்சுமி கடாட்சாரம் பெற்று வாழ்வர் . இது சாமான்யருக்கு சாத்தியமில்லாத ஒன்று ஆனால் பரம்பரை நன்கு வாழ ஆசை இருக்கிறது ஆனால் ஆலயம் கட்டும் அளவு செல்வ கொடுப்பனை இல்லையே என வருந்துபவர்கள் பலரும் உண்டு அவ்வாறு வருந்த வேண்டிய அவசியமே இல்லை . ஏனெனில் ஒரு ஆலயத்திற்கு நிகரானதும் , ஒரு அன்ன சத்திரத்திற்கு நிகரானதும். ஒரு மருத்துவ சேவைக்கு நிகரானதும் கல்வி சேவைக்கு நிகரானதும் விருட்சம் (மரம்) மட்டுமே.

 ஒரு மரம் நட்டு வளர்த்தாலும் அது அளிக்கும் பலன் அனைவரையும் கேட்காமலேய சென்றடையும், அதுவும் அம் மரம் அரசமரமாகவும். வேப்பை மரமாகவும். வன்னிமரமாகவும். எருக்கன் செடியாகவும் இருந்தால் அளவற்ற பலன்களை கொடுக்கும், எனவே பரம்பரை லட்சுமி கடாட்சரம் வேண்டுவோர் ஆலயம் கட்டித்தான் அருளை பெற வேண்டும் என்ற அவசியமில்லை, முடிந்தவர்கள் செய்யலாம், முடியாதவர்கள் ஊர் ஆலயங்களிலோ. நீர்நிலை ஓரங்களிலோ அரச மரம். வேப்பை மரம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நடவேண்டும், இதை திருமணம் ஆன தம்பதிகள் இருவரும் சேர்ந்து நடவேண்டும், நடுவதற்கான நாள் ஒன்றுசெவ்வாய்க்கிழமையாக இருக்க வேண்டும் , அல்லது அமாவாசை கழித்த வளர்பிறையில் மூன்றாம் பிறை வரும் நாளில் இம்மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும், நட்டு வைத்துவிட்டு விடாமல் மரத்தை வைத்தவரே தண்ணீர் ஊற்ற வேண்டும், அல்லது தண்ணீர் ஊற்ற ஆளையாவது நிர்ணயிக்க வேண்டும், இவ்வாறு வளர்க்கப்படும் மரத்தை நன்கு வளரும்போது சக்தி கணபதியாக பாவித்து பூஜை வருடத்திற்கு ஒருமுறையாவது செய்ய வேண்டும், பிறகு அதன் அற்புத பலன்கள் நம் பரம்பரைக்கு வந்து சேரும் .

 அதே போல குடும்பத்தில் உள்ளவருக்கு சச்சரவு. கண்டம் இல்லாமலும் செல்வ நிலையில் உயரவும் நிருதி மூலையில் (தென்மேற்கு) ஒரு வெள்ளருக்கன் செடியும் . ஒரு வேப்பை கன்றும் சேர்தது நட்டு வளர்த்து வந்தால் அந்த குடும்பத்தில் வந்த பெண்ணும் சரி, வாழ போன பெண்ணும் சரி  நிம்மதியாக வாழ்வார்கள், மேற்கண்ட பலன்களும் கிடைக்கும், இடவசதி இல்லாதவர்கள். தொட்டியிலும் வைத்து வளர்க்கலாம், இந்த இரு செடியையும். திருமணம் ஆகாதவர்களும் நடலாம், திருமணம் ஆனவர்களும் நடலாம், மிக அற்புதமான செல்வ நிலை முன்னேற்றத்தை கொடுக்கும், இந்த விருட்சங்களுக்கு சுத்த நீரே இரு கைகளாலும் ஊற்ற வேண்டும், அதே போல் அவரவர் அந்த மரத்தின் ஆயுள் உள்ளவரை உங்கள் புகழ் செல்வம் வாழும், ஆலய ஸ்தல விருட்சம் உள்ளவரை அதை காக்கும் வரை அந்த ஆலய சக்தியும் புகழும் குறையாது அதேபோல் தான் மனித விருட்சங்களும் தன் நட்சத்திரம் உள்ள நாளில் தன் லக்கின கிரக ஓரையில் நடவேண்டும் இவ்வாறு செய்வதை மன்னர்கள் வழக்கமாக கொண்டார்கள், அதனால் தான் ஆளுகையோடு இருந்தார்கள், சாமான்யரும் உயரக்கூடாது என்ற  நோக்கில் விருட்ச சாஸ்திரம் மறைக்கப்பட்டே இருந்தது , மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தவில்லை காரணம் விருட்சம் வைத்து வளர வளரத்தான் அதன் பலன் நமக்கு கிடைக்கும் உடனே அதன் மாற்றம் தெரியாது , மக்களுக்கு அந்த பொறுமையில்லை உடனே தலைவலி மாத்திரை போட்டால் தலைவலி நிற்பது போல் உடனே பலன் கிட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளால் பயனை பெற முடியாமல் போய்விட்டது , இதை அறிந்தவர்கள் இன்றும் ரகசியமாக விருட்சம் நட்டு தன் உயர்வை பெருக்கிக் கொள்கிறார்கள், நம் நட்சத்திர மரம் வளர்வது போல் சந்தோஷமும் செல்வமும் சேர்த்து வளர்ந்து கொண்டே இருக்கும், இது அனுபவ உண்மை, அன்று முதல் இன்று வரை யாராலும் மறுக்க முடியாத சத்திய உண்மை, நீங்களும் முயன்று லட்சுமி கடாட்சாரம் பெற்று வாழுங்கள் .

 தங்கள் ஜாதகத்தில் எவ்வளவு பெரிய தரித்திரம் இருந்தாலும். லட்சுமி அம்சமான செவ்வாய் விரையமானாலும். நாராயணர் அம்சமான சனிஷ்வரர் விரையமானாலும் இந்த விருட்சங்களை நட்டால் இழந்ததை எல்லாம் பெறலாம், தரித்திரம் விலகும், மகாலட்சுமி நாராயணராக அருள் கொடுப்பார்கள், சுத்த தர்ம நீதி கிரகங்களான செவ்வாய் . சனி அருள் பெற்று மங்கள பெருவாழ்வு வாழலாம் இது உறுதி .

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .