ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

    துளசி செடி மகிமை

 துளசி செடிமேல் வேறு எந்த மரத்தின் நிழல்பட்டாலும் குடும்பம் கலையும். வேறு ஒரு செடியின் நிழல்கூட படக்கூடாது . துளசி செடிக்கு வேலியும் இடக்கூடாது . வீட்டில் வளர்க்கும் துளசிக்கே இது பொருந்தும். சுத்தமான மனிதரின் சுத்தமான நீரே செடிக்கு ஊற்ற வேண்டும். துளசி செடியின் அடியில் தொட்டால்சிணுங்கி செடியை வளர்த்தால் தம்பதியர் ஒற்றுமைகூடும். பிரிந்தவர் ஒன்றுகூடுவர். வீட்டில் வளர்க்கப்படும் துளசி வழிபாட்டிற்குரியதாகவே இருக்க வேண்டும். எனவே பூமியைவிட சற்று உயரத்தில்தான் செடியை வளர்க்க வேண்டும் (அக்கால முதலே துளசிமாடம் வைத்தது இதற்கும்தான்) துளசி ஒரு கோயில் மரியாதைக் கொண்டதாகும்.
எனவே ஒருமாடம்கட்டி அதில் செடியை நடவேண்டும். கண்டிப்பாக துளசிச்செடியின் அடியில் ஒற்றை தீபம் ஏற்றக்கூடாது . நான்கு திக்கிலும் தீபம் எரியவேண்டும். அல்லது நான்கு திசையிலும் தீபம் ஏற்ற வேண்டும் . அதன்பின்னரே கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். கண்டிப்பாக பூஜையின் இறுதியில் ஜலம்விட வேண்டும். ஒற்றை தீபம்மட்டும் துளசிக்கு யார் குடும்பம் தீபம் ஏற்றினாலும் கஷ்டத்தின்மேல் கஷ்டம் கொடுக்கும் கவனம்.


துளசிசெடி முன் பெருமூச்சுவிடுவது ,  அழுவது , தும்புவது , வீண்பேச்சு பேசுவது , உரக்க பேசுவது கூடாது . துளசிச்செடியை வைத்து வழிபட்டுக்கொண்டுள்ள வீட்டில் பெருங்குரல் இட்டு பேசக்கூடாது . ஒருவர் மேல் ஒருவர் கோபத்தை திணிக்கக்கூடாது . அவ்வாறு மீறினால் அக்குடும்பம் பல கஷ்டங்களுக்குள்ளாகும் .


நம் தலைமுடி ஒன்று கூட துளசி மீது படக்கூடாது. உதிர்ந்தமுடி காற்றில் அடித்துச்சென்று கூட துளசிமீது படக்கூடாது .  பிறகு வாழ்க்கைச் சிக்கலாகிவிடும் (எத்தனையோ பிராமிண குடும்பங்கள் கஷ்டப்பட மேற்கண்ட விதிமீறலே காரணம் என்பதை ஆய்வில் கண்டுள்ளேன்). இவ்வளவு சங்கடம் உள்ள துளசியை நாம் ஏன் வளர்க்க வேண்டும் என கருதக்கூடாது . துளசி மகாலட்சுமி அம்சம். துளசி எங்கு செழித்து சுத்தமாக தீட்டுபடாமல் வளர்கிறதோ அங்கு செல்வசெழிப்பும் வளரும். இஃது அனுபவ ரகசியமாகும்.


சந்தோஷமும், குதூகலமும் அக்குடும்பத்தில் துளசிபோல் செழித்து வளரும், வாஸ்து குறையிருந்தால் குலதெய்வ, பித்ருதெய்வ, மந்திரஒலி குறையிருந்தாலும் சரியாகிவிடும். பரம்பரையின் நேர்த்திக்கடன் சுமை துளசி வளர்ப்பதால் சரியாகும் . கவனிக்க : துளசி செடியின் நிழலில் வளரும் அருகம்புல் வைத்தியத்திற்கு பயன்படுத்தலாம். ஆனால் விநாயக பெருமானுக்கு சூட்டக்கூடாது . துளசி செடியின் அடியில் விநாயகர் பிடித்துவைத்து வழிபடக்கூடாது . இதை மீறினால் பிரார்த்தனை எதிர்மறையாக கிடைக்கும் கவனம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .