ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

  திசைகளின் மகத்துவம்

ஆலயத்தில் திசைகளை உணர்ந்து அத்திசை நோக்கி நின்று பூஜிக்க வேண்டும். சம்பாதிக்கும் திசையான வடக்கு திசைநோக்கி ஆண்கள் நின்று வணங்க வேண்டும். சேமிக்கும் திசையான தெற்கு நோக்கி நின்று பெண்கள் வணங்க வேண்டும். கிழக்கு, மேற்கு நோக்கி இருக்கும் தெய்வ ஆலயங்கள் சென்று வணங்கும்போது பெண் தெற்காகவும், ஆண் வடக்காகவும் வணங்கவும். அதேபோல் வடக்கு தெற்கு நோக்கி இருக்கும் தெய்வ ஆலயத்தில் பெண் மேற்காகவும், ஆண் கிழக்காகவும் நின்று வணங்க வேண்டும்.


அப்போதுதான் சக்தி கிடைக்கும். உயிர்ப்புள்ள திசைகளான வடக்கு, கிழக்கு திசைகளே ஆண்களுக்கு சக்தியை எளிதில் பெற முடியும் . மேற்கு , தெற்கு சக்தியானது அவ்வளவு எளிதாக ஆண்கள் பெறமுடியாது . ஆனால் பெண்கள் எளிதில் பெறுவர். மேலும் பெண்கள் அத்திசை பார்த்து நின்று வணங்கும்போது ஆளுகை சக்தி அவர்களை வந்தடையும். ஆணுக்கு அவர்கள் திசையில் நின்று வணங்கும்போது ஆளுகை சக்தி கிடைக்கும். நல்லெண்ணங்களும் நிறைந்திருக்கும் . எனவே இதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். இதில்கூட வெற்றியின் ரகசியம் இருக்கிறது . அக்காலமுதலே சூழ்ச்சுமமாக சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கம் கிழக்கு நோக்கி வழிபடுவது ஆண்களுக்கும், தெற்கு நோக்கி அன்னை தெய்வங்களை நின்று வழிபடும் பழக்கம் பெண்களுக்கும் உண்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .