ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

    தெய்வ மணிமாலை

காரண காரியமின்றி கழுத்தில் மாலை அணியாதீர்கள். ருத்திராட்ச மாலை, துளசி மாலை இவ்விரு மாலைகளைத் தவிர்த்து மற்ற மாலைகளை அணியலாம், தவறில்லை. ருத்திராட்சம், துளசி இவ்விருமாலைகளை பயன்படுத்துகிறீர்கள் என்றாலே விரதமிருந்து உங்கள் தவப்பயனை இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும் . அல்லாத போது விரதமிருந்து அவ்விரதத்தை இறைவனிடம் ஒப்படைத்து வேண்டிய வரம் பெறும்வரை ஆசாரத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எவ்வித விரதமோ, சுத்தமோ, ஒப்படைப்போ இல்லாமல் சுயநலம் மட்டும் வேண்டுதலாக இருந்து இவ்விரு மாலைகளை பயன்படுத்தினால் மகாலட்சுமி கடாட்சாரம் விலகி தரித்திரம் பிடித்துக் கொள்ளும்.
ருத்திராட்சம், துளசி ஒற்றைமணி எடுத்து கயிற்றில் கோர்த்து அணிந்தாலும் இதே பலனே. இவ்விரு மாலைகளை முறையாக பயன்படுத்தக்கூடியவர்கள் அபரிதமான பலன்களைப் பெறுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை . ஆனால் காட்சிக்காக எல்லோரும் அணிகிறார்கள் நானும் அணிகிறேன் என்று அணிந்து அதற்குரிய மரியாதையை கொடுக்காத போதுதான் பிரச்சனையே உண்டாகும் கவனம் . சாமி கும்பிடுவதின் வெளிப்பாடாக மாலை அணிந்துகொள்ளும் தவறான பழக்கம் நடைமுறையில் உள்ளது . இது தவறாகும்.


சிவ அம்சமான ருத்திராட்சம், விஷ்ணு அம்சமான துளசி இவ்விரு தெய்வங்களின் சக்தியை புரிந்துகொண்டு அவர்களுக்கு எவ்விதத்தில் மரியாதை செய்யும் பக்குவம் வேண்டும் என்பதை உணர்ந்தாலே முறையாக மாலைகளை பராமரிக்க ஏதுவாகும். அவர்களை வைத்து பராமரிக்க தகுதியை சிறிதாவது உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இந்த மணிகளின் பயன்களை அறிந்தாலும் சரி, அறியாவிட்டாலும் சரி, அவைகள் சக்தி அற்புதமாக யாவருக்கும் பலன் கொடுக்கும். ஏனெனில், இவைகள் தீட்சை மணிகளாகும். இவைகளை அணிந்தவரிடம் சுத்தகுணம் இருந்தால் வாழ்வாதாரம் யாவும் நலமாக அமைய சூழ்நிலை உருவாகும். மாலைகளை சுத்தப்படுத்தி சக்தியூட்டி அணிந்து கொள்வதே சிறந்தது .


மாலையில் இன்னொருவர் கை படக்கூடாது . அது எந்த உறவானாலும் தான் பயன்படுத்தும் மாலையை தொடவிடக்கூடாது . தொடர்ச்சியாக அணிய முடியாதவர்கள் இரவில் செம்புத்தட்டில் விபூதி பரப்பி அதன்மேல் வைத்து பின்பு அணிய தோனும்போது மீண்டும் அணிந்துகொள்ளலாம். ஒரு ரகசியத்தை கவனிக்க, அதிகாலையில் எப்பொழுது மாலை அணிந்தாலும் வேண்டும் வரம் கிட்டும். அதன் பயனாய் நாமும் நம் குடும்பத்தாரும் பயன்கொள்ளலாம். மாலையில் மாலை அணிவது சிறப்பில்லை பாவக்கழிவுக்கு வேண்டுமானால் உதவும் அல்லது மோட்சப் பாதையைக் காட்டும். அவரவர் விருப்பம் எதுவானாலும் காலை பிரம்ம முகூர்த்தத்தில் மாலை அணிவதால் மகாலட்சுமி ஆசி கிட்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .