ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

         ஸ்ரீ நவ வட்சுமிகளிள் மூத்த தேவி

அஷ்டலட்சுமி என வழக்கத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே. ஒன்பதாவது லட்சுமியும் உண்டு. அவர்களை யாரும் பூஜிக்க விரும்புவதில்லை . இந்த ஒன்பதாவது அன்னை யாரும் வணங்காமலேயே அருள் கொடுப்பார். இவரருளை விலை கொடுத்து வாங்க முடியாது. சோகம், துக்கம், கஷ்டம், நோய், வலி, வேதனை, கற்பனை, வறுமை, பிரிவு, அழுகை, துன்பம், தொல்லைகள், நிராசைகள், கவலை, ஏழ்மை, அவமதிப்பு இவை யாவையும் மறந்து நிம்மதி கொடுக்கும் சக்தி இந்த 9-வது அன்னைக்கு உண்டு . தானாக தேடிவந்து அமைவதை மக்கள் எப்பொழுதும் போற்றுவதில்லை . விலை கொடுத்து வாங்கும் பொருளுக்கு தரும் மரியாதையை விலையில்லாமல் கிடைப்பவனுக்கு மக்கள் மதிப்பளிப்பதில்லை. அதை போலத்தான் இந்த அன்னையின் மகத்துவம் அறிந்தும் அறியாதது போல் இருக்கிறார்கள். கஷ்டம் வந்தால்தான் ஒரு மனிதனுக்கு கஷ்டத்தின் அருமை தெரிகிறது . அதைப்போலத்தான் இந்த அன்னையின் அருளையும் அவமதிக்கிறார்கள் அவர்கள்தான் அன்னை மூதேவி  இவரைப் பற்றி மக்களுக்கு தவறான கருத்தே உள்ளது . இவர் யாருக்கும் தீங்கு செய்ய விரும்புவதில்லை . ஒவ்வொரு நாளும் நன்மை அளிக்கவே விரும்பி அருள் புரிகிறார். இவரை தரித்திர தேவதையாக சொல்வது அதர்மமாகும் . பகவான் ஸ்ரீ சனீஷ்வரர் தர்மத்தை அவமதிப்பவரை தண்டித்துவிடுவார். அன்னை மகாசக்தி முதல் உள்ள அனைத்து தெய்வங்களும், மனிதர்களும் தீமையை அழிப்பார்கள். அதைப்போல லட்சுமி சுத்தத்தையும், ஆத்ம சுத்தத்தையும் பராமரிக்காதவர்களை அன்னை மூதேவி தண்டிப்பாள் . இந்த உண்மையை அறியாத மக்கள் இவர்களை வேண்டா வெறுப்பாக ஒதுக்குகிறார்கள். இது பெரும் தவறு . இவர்களின் அனுக்கிரகமாக கிடைக்கும் தூக்கத்தை மனிதன் ஏற்காமல் இருக்க முடியாது , மீறி வெறுத்தால் துக்கமாக போய்விடுவர். எனவே அருமையை புரிந்து நடந்து கொள்ளுங்கள். நிம்மதிக்காக பல ஆலயம் ஏறி இறங்கி வரம் கேட்கிறோம். ஆனால் கேட்காமலேயே நிம்மதி தூக்கத்தை தரக்கூடியவர்கள் இந்த மூதேவி தாயார்தான். எங்கோ ஒரு ஆலயத்தில் தான் இவர் உருவ சிலை இருக்கும். அவரையும் நன்றி உணர்வோடு வணங்குங்கள்.


நாம் செய்யும் தவருகளால் தான் சோகம், துக்கம், கஷ்டம், நோய், வலி, வேதனை, கற்பனை, வறுமை, பிரிவு, அழுகை, துன்பம், தொல்லைகள், நிராசைகள், கவலை, ஏழ்மை, அவமதிப்பு போன்ற எல்லா துன்பத்தையும் மூதேவி தாயார் கொடுக்கிறார்கள் .மகாலட்சுமி சுத்தத்தை பராமரிக்க கூடியவர்களை மூதேவி தாயார் ஒரு போதும் தண்டிப்பதில்லை .மாறாக நிம்மதியான தூக்கத்தை தக்க நேரத்தில் தந்துதவுவார் .எவ்வளவு கோடி செல்வம் இருந்தாலும் நிம்மதியான தூக்கம் இல்லையெனில் வீனே . எனவே ஒருவரை இகழ மூதேவி என திட்ட பயன்படுத்தக் கூடாது .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .