ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

தீப மகிமை - தீப கலப்படம்

 திருவிளக்கு ஏற்றுவதை பற்றி பல தகவல்கள் ஏற்கனவே வந்துள்ளன. அவற்றின் பலன்களையும் தெரிவித்துள்ளனர். எத்தகவலும் தவறில்லை தான். எனினும் சில விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள். தீபங்களை ஏற்றும்போது நாம் பொதுவாக நினைப்பது இருளை விரட்டி ஒளியை உண்டாக்க என்றுதான் நினைக்கிறோம். இது தவறு. ஒரு மனிதன் இருளையும் விரட்ட முடியாது , வெளிச்சத்தையும் விரட்ட முடியாது . இவை இரண்டும் மிக அத்தியாவசியமாக மனிதனுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் அவசியம் என்பதால் இறைவனால் உண்டாக்கப்பட்ட இரட்டை ராஜ்ஜியங்களில் இதுவும் ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


சூரியன் என்கிற ஜோதி இல்லையேல் எதுவும் வளராது . சூரியனின் ஒளிபட்டாலே போதும் தன்னம்பிக்கை , தைரியம் , ஆரோக்கியம் தன்னால் வளரும். அதைப்போல நம் ஆத்ம ஜோதியை ஏற்றினால் மட்டுமே நம் கோரிக்கைகள் நடக்கும் . உதாரணமாக அறிக :- என்னால் வெற்றி கொள்ள முடியும், அது எனக்கு கிடைக்கும், நான் சாதிப்பேன் என்கிற மனதிடமான வார்த்தைகள் ஒரு மனிதனை ஓரளவாவது உயர்த்தும். ஆனால் இதையெல்லாம் கடந்து இறைவனால் நிகழக்கூடிய காரியங்களே நிறைய மனிதனுக்கு அவசியமாகிறது . எனவே ஜோதி வடிவான இறைவனை வணங்க ஆத்ம எண்ணங்களே மிக முக்கியமாகும்.


எண்ணங்கள் எங்கேயோ இருந்து தீக்குச்சி மட்டும் விளக்கு திரியை ஏற்றி பலன் இல்லை . ஆத்மாவில் நம் வேண்டுதலை  குவித்தால்தான் வலது ஞான மூளையில் அது பதியும். அது பிரபஞ்சத்தோடு  கலக்கும். அப்போதுதான் ஜோதி வடிவானவர் நம கோரிக்கையை பூர்த்தி செய்து பிரபஞ்ச வழியாகவே நம் தேவையை நிறைவேற்றுவார் . எனவே தீபத்தின் மூலம் இறைவனை காணவே தீப வழிபாடு இம்முறைக்கு எவ்வித உருவ வழிபாடும் புகுத்திக் கொள்ளலாம்.
நம் ஆத்ம ஜோதியோடு இறை ஜோதியை இணைக்க ஒரு எளிய வழி தீப வழிபாடாகும். இதில் ஞானம் வேண்டுவோர் ஒரு நூல் திரியும், ஒற்றுமை செல்வம் வேண்டுவோர் இரண்டு நூல் திரியும், தோஷம் கழிய மூன்று நூல் திரியும், குழந்தை வரம் கிடைக்க, குலதெய்வ அருள் கிடைக்க 5 நூல் திரியும் போட்டு தீபம் ஏற்றினால் வேண்டியது வேண்டாமலேயே கிடைக்கும் என்றாலும் வேண்டுதலோடு இவ்வெண்ணிக்கை திரிகளை ஏற்றுவதே சிறந்த முறையாகும் .


தீபத்தின் நோக்கமே யாதெனில் நம் ஆத்ம தீபத்தை அதாவது எண்ணங்களின் கோரிக்கையை இறைவனிடம் வெளிப்படுத்தி தவம் இருந்து வரங்களைப் பெற நாம் ஏற்றும் தீபம் உதவும். அதுபோல் இன்னொருவர் ஏற்றிய தீபத்தில் எண்ணெய் குறைந்தோ, திரியில் சிட்டம் கட்டியோ ஒளி குறைந்தால் அதை கண்டு குறைகளை சரிசெய்து நன்கு சுடர்விட்டு ஒளி கொடுக்கும்படி செய்தால் நமக்கு புண்ணியமாகும் . இதன்மூலம் இன்னொருவர் ஏற்றிய ஆத்ம கோரிக்கையை வலிமையாக்கி நிகழ நாம் காரணமாக இருப்பதால் அந்த ஆத்மா சாந்தம் நம் கோரிக்கையையும் பூர்த்தி செய்யும் .


நீங்கள் ஆயிரம் தீபம் கூட ஏற்றலாம், தவறில்லை . ஆனால் தீபம் காற்றில் அலையக்கூடாது. திடீரென நிற்கவும் கூடாது கவனம் . இன்றைக்கு ஒப்புக்காக தீபம் பல இடங்களில் ஏற்றப்படுகிறது. ஆலய கர்த்தாக்களும் ஊக்குவிக்கிறார்கள். ஆனால் தகுதியில்லா இடங்களையே தேர்ந்தெடுத்து தீபம் ஏற்ற இடம் ஒதுக்கப்படுகிறது . இது தவறு . எனவே கருவறையில் தீபம் ஏற்ற வாய்ப்பு கிடைத்தால் நல்லது . அடுத்து வீட்டில் தீபம் ஏற்றினால் நல்லது . காற்றால் தீபச்சுடர் அதிகம் அல்லல்படாத இடமாக இருந்தாலும் நல்லது.. இதை தவிர்த்து மற்ற இடங்களில் தீபம் ஏற்றி காற்றில் அலைந்து பாதியில் அணைந்து போனால் இது பெரும் தவறாகும். சிலருக்கு வாழ்வும் அதுபோலவே ஆகும் கவனம். நான் இத்தனை தீபம் ஏற்றினேன் என்பதைவிட தீபத்தை ஒழுங்கான மனதுடன், ஒழுங்கான இடத்தில் ஏற்றி முழுமையாக பராமரித்தீர்களா என்பதையே கவனிக்க வேண்டும். ஏனெனில் தீபத்தின் சுடரில் அன்னை மகாலட்சுமி வாழ்கிறாள். அவள் சுத்தமான இடத்தில் சுத்த மனதோடு இருப்பவர். ஏற்றிய தீபத்தில் மட்டுமே வந்தமர்ந்து ஆசி வழங்குவார். அந்த தீபச்சுடர் அலைந்தால் மகாலட்சுமி கோபித்து நம்மைக் கண்டு விலகி விடுவாள்.  எனவே தீபம் எரியும் எண்ணெய் முதற்கொண்டு திரி மற்றும் இடம் இவையாவும் கவனிப்பது அவசியமாகும் . தீபத்திற்கென்று தனி பெரும் மரியாதை இடம் உண்டு. ஆனால் இன்று அது ஒரு எண்ணிக்கை கடமையாகிவிட்டது . இதனால் பலன் பெறுபவர்கள் யாரெனில் உண்மையிலேயே வழிமுறை தெரியாவிட்டாலும் உள்ளன்போடு ஏற்றியவர்கள் மட்டுமே பலன் பெற்றார்கள். பலரும் ஏனோ தானோ என ஏற்றி அவர்கள் அறியாமலேயே அல்லல்பட்டவர்கள் தான் அதிகம் என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம் . எனவே மகாலட்சுமி கருணையினால் உங்கள் கோரிக்கை நடைபெற தீபங்கள் ஏற்றுங்கள் அது முறையான இடத்தில் மட்டும் இருக்கட்டும்.


தீபம் அலைந்தாலும் பாதிப்பில்லாமல் பலன் கொடுக்கும் மாதம் மூன்றாகும். அவை ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களாகும் . இந்நாளில் தீப வேண்டுதலை வைத்தால் கூடுதல் நன்மையாகும். மெய்யன்போடு வணங்கி ஏற்றும் தீபம் காற்றில் ஆடினாலும் அன்னை மகாலட்சுமி பொறுமையுடன் ஏற்றுக்கொள்வார் கவலை வேண்டாம் . அன்பில்லா தீபம் எங்கு தோன்றினாலும் அது அழிவிற்குரிய அக்கினியே அன்றி மகாலட்சுமியாக இருக்க முடியாது. எனவே அன்போடு அக்னியை மிதித்தாலும் நம்மை சுடுவதில்லை. மாறாக மகிழ்ந்து நம் கோரிக்கையை நிகழ்த்திக் கொடுப்பார்கள். அழுக்கு ஆயிலில் தீபம் ஏற்றுவது, ஒருவர் ஏற்றிய தீபத்தில் இன்னொருவர் தீபம் ஏற்றுவது தவராகும் .
இன்றைக்கு தீபத்திற்க்கென்றே ஸபெஷல் ஆயில் கடைகளில் கிடைக்கிறது அது உண்மையில் கழித்து எடுக்கப்பட்ட அழுக்கு எண்ணெயாகும் . கடைக்காரர்கள் தீப எண்ணெயா , சமையல் எண்ணெயா என கேட்டு ரகம் பிரித்து விற்க்கிறார்கள் . நம்மவர்களும் விலை கம்மி என தீப எண்ணெய்யை வாங்குகிறார்களே தவிர அது தெய்வத்திற்க்கு ஏற்ப்புடைய சுத்தம் உள்ளதா என பார்பது இல்லை இது தவறாகும் . நம் மன சுத்தம் போல் படையல் சுத்தமும் காக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .