ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

       உறக்கத்தில் உள்ளவரை எழப்பலாமா?

 ஒருவர் தூக்கத்தை உரியவர் தவிர வேறு யார் கலைத்தாலும் தூக்கத்தை கலைப்பவருக்கு மூதேவி அண்டும். தவிர்க்க முடியாத சூழலில் ஒருவரை எழுப்ப வேண்டுமானால் அவர் கால்களை தொட்டு அல்லது லேசாக ஆட்டி தூக்கத்தில் இருந்து எழுப்பலாம் பாதகமில்ûல். உடலை தொட்டு எழுப்பினால் (பாதங்களை தவிர) மூதேவி பிடிக்கும். ஒருவர் தூங்கும்போது தலை பாகத்தில் அமர்ந்து உரக்க பேசுவது , அழுவது , சாப்பிடுவது கூடாது . ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளவர் தூக்கத்தை யார் கெடுத்தாலும் அவர் நிம்மதியின்றி வேதனைப்படும் சூழல் கண்டிப்பாக அமையும் .

விடியற்காலை வேளை யார் யாரை எழுப்பினாலும் நன்மையே தோஷமில்லை . ஒருவரை எழுப்பும்போது உரியவராக இருந்தாலும் அதட்டி எழுப்பக்கூடாது. உரக்க சத்தம் கொடுத்து எழுப்பக்கூடாது . திட்டிக் கொண்டே எழுப்பக் கூடாது . அலரி அடித்து எழும்படி செய்யக்கூடாது . உலகிலேயே மிகவும் நிம்மதியானதும், சந்தோஷமானதும், பாவமற்றதும், மென்மையானதும், இதமாமனதும், ஆரோக்கியமானதும், உடல் சீதோஷ்ணத்தை சமன் செய்வதும் இரவு உறக்கம் மட்டுமே. அதை நாமும் புனிதமாக அனுபவித்து தூங்க வேண்டும். அதற்கு மனக்கவலை எதுவானாலும் விலக்கி வைத்து சந்தோஷ நினைவுகளை கற்பனை செய்து இறைவனை வணங்கி தூங்கச் செல்ல வேண்டும். மற்றவரும் இன்னொருவர் தூக்கத்தை கெடுக்க முயலக்கூடாது . இறை தண்டனை பெரும் குற்றங்களில் முதன்மையானது உறக்கத்தில் இருப்பவரை எழுப்புவதாகும். ஒருவர் தூங்கிய இடத்தில் நாம் அமர்ந்தாலும் நமக்கு மூதேவி அண்டும் . தூங்குபவர் பக்கத்தில் அமர்ந்தாலும் நமக்கும் மூதேவி அண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .