ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

        உப்பு அதிசயம் +அதிஷ்டம்  

       
உப்பு ரகசியங்கள் - 1


நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு மரியாதை நிமித்தமாக வாழை இலையில் உணவு படைத்து , அறுசுவை உணவு சமைத்து வைத்து அவர் சந்தோஷப்படும்படி கிட்டவே இருந்து மரியாதையாக அண்ணம் படைக்கிறோம் அல்லவா? வந்தவர் நற்குணம் கொண்டு நம்மை வாழ்த்தினால் பாதகமில்லை . அதுவே அவர் கடுமையான பாவம் உள்ளவராக இருந்து, நம்மிடம் உள்ள வசதி வாய்ப்பைக் கண்டு பொறாமை படுபவராக, திருஷ்டி வைப்பவராக இருந்தால் நாம் உபசரித்த உபசரிப்பே நமக்கு பாதகமாக வந்துவிடும். (எப்பொழுதுமே நம் தலைவாயிற்படி கடந்து வீட்டிற்குள் வந்தவர் குண கர்மா எப்படி செயல்படுகிறதோ அது நம்மை ஆட்கொள்ளும். வாயிற்படி வெளியில் ஒருவர் உள்ளவரை அவர் தீய சக்தியோ, திருஷ்டியோ நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது . அதுவே உள்ளே வந்துவிட்டால் அவர் சக்தி நம்மை தாக்க பார்க்கும். அதுவும் நம் விருப்பத்தோடு வந்த விருந்தாளியின் குணம் கடுமையாகவே நம்மை தாக்கும்.) எனவே, இதை தடுக்க ஒரு உபாயம் உண்டு. வந்தவர் நல்லவரோ, கெட்டவரோ அவரின் மனமகிழ்ச்சிக்கு நாம் விருந்து படைத்து விட்டாலே வலிய அவரின் திருஷ்டியை நாம் பெற அனுமதித்துவிட்டோம் என்று அர்த்தமாகும். எனவே அந்த திருஷ்டி நம்மை தாக்காமல் இருக்க இலைபோடும் இடத்தில் முதலிலேயே உப்பை கரைத்து தெளித்து பிறகு அதன்மேல் இலை வைத்து பறிமாறலாம். அல்லது வந்தவர் இதை கண்டு சங்கடப்படக்கூடாது என நினைத்தால் இலையின் ஓரம் சற்று உப்பை அவர் பார்வை படும்படி வைக்கவும். வந்தவர் அதை சம்பிரதாயமாக நினைப்பாரே தவிர சங்கடமாக நினைக்கமாட்டார்.


அதே வேளையில் உப்பை வந்தவர் பார்த்து விட்டதால் அவர் தீய திருஷ்டிகளை உப்பு ஈர்த்துவிடும், நம்மை தாக்காது . இது சிறந்த பரிகாரமாகும்.


வந்த உறவுகளாலும், விருந்தாளிகளின் கண் திருஷ்டியாலும் கொஞ்ச கொஞ்சமாக அழிந்த குடும்பம் நிறையவே உண்டு . இதை ஒருவர் கூறாத வரை தானாக அறிவது கடினம். எனவே இம்முறை அக்காலத்தில் இருந்தே இருக்கிறது . அன்றைக்கு இருந்தவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள், இன்றைக்கு உள்ளவர்கள் அதை வேறு மாதிரியாக கடைபிடிக்கிறார்கள். வந்தவர் உப்பு கூட குறைச்சலாக சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். எனவே வேண்டுமானால் சேர்த்துக் கொள்ள வைப்பதாகவே இன்றைக்கு நினைக்கிறார்கள். உண்மையில் இது பாரிகார முறையாகும்.

                      
உப்பு ரகசியங்கள் - 2


உப்பை கடன் காசில் வாங்க கூடாது . இன்னொருவரிடம் இரவலாக வாங்கிய பணத்தில் உப்பை வாங்கி வந்தால் மேலும் மேலும் கடன்பட நேரும். உழைத்த சம்பாத்தியத்தில் மட்டுமே உப்பை வாங்க வேண்டும். அதேபோல் கடைக்காரர் தெரிந்தவராக இருந்தாலும் நீங்கள் பணம் கொண்டு செல்ல மறந்திருந்தாலும் கடைக்காரர் வந்து பணம் கொடுங்கள் உப்பை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினாலும்  இதுவும் ஒருவகையில் கடனே . எனவே இதுபோலும் உப்பை வாங்கி வீட்டிற்கு வரக்கூடாது .

 உப்பை ஒருவருக்கு இரவலாக கொடுக்கவும் கூடாது , வாங்கவும் கூடாது , உப்பை தெரியாத்தனமாக மிதித்தால் தோஷமில்லை, பரிகாரத்திற்காக மிதித்தாலும் தோஷமில்லை. ஆனால் பின்கால் பாதங்களால் அறக்கி மிதிக்கக்கூடாது . கண்டிப்பாக வறுமையும், துன்பமும் ஆட்கொள்ளும். ஞாயிற்றுக்கிழமை மாலை அந்திவேளையில் மட்டுமே உப்பை நெருப்பில் இட்டால் தோஷமில்லை . மற்ற எந்த நாளில் எந்த நேரத்தில் நெருப்பில் போட்டாலும் தோஷம் தாக்கும் . அதனால் துன்பம் தொடரும் .  உப்பில்லா சாப்பாட்டை தானம் செய்யக்கூடாது . ஒரு துளி உப்பாகிலும் சேர்ந்திருக்க வேண்டும். தொழிலுக்கு செல்லும்முன் உப்பு நிறைந்த பானையை பார்த்துச் செல்வது யோகத்தைக் கொடுக்கும். எக்காரணத்தைக் கொண்டும், எச்சூழலிலும் உப்பை வைத்து சத்தியம் செய்யக்கூடாது. அக்குடும்பமே கெட்டுவிடும் கவனம்.  உப்பை திருடவும் கூடாது . மீறினால் பரம தரித்திரனாக மாறிவிடுவர். கடை நடத்துபவர் உப்பை எடை தட்டில் வைத்து அளந்து கொடுக்கக்கூடாது . படியில் கொடுத்தாலும் படி கோபுரமாக நிரம்பியே உப்பைக் கொடுக்க வேண்டும் . நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று வீடு திரும்பும் போது மறக்காமல் ஒரு பாக்கெட் உப்பு வாங்கி வாருங்கள். அதேபோல் ஒவ்வொரு மாதம் சம்பளம் வாங்கி வரும்போதே உப்பு பாக்கெட் ஒன்று வாங்கி வாருங்கள். உங்கள் வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும். இது அனுபவ உண்மை.


ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் உப்பு வாங்கி வரலாம். வாங்கி வந்த உப்பை பூஜை அறையில் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு பயன்படுத்தலாம். செல்வம் பெருகும். பண்டிகையில் ஜவுளி வாங்க போகிறீர்கள் என்றால் முதலில் பிள்ளையாருக்கு ஒரு துண்டாவது வாங்கிய பின்தான் மற்ற துணிகளே வாங்க வேண்டும். அதேபோல மளிகை பொருட்கள் வாங்க சென்றாலும் முதலில் உப்பைத் தான் வாங்க வேண்டும். உப்பை கடைக்காரர் கொடுக்கும்போது இரு கையும் சேர்த்து வாங்கலாம்  அல்லது வலது கையால் வாங்கலாம். கண்டிப்பாக இடது கையால்  தனித்து வாங்கக்கூடாது. ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் உப்பை சிறிதாவது வாங்கி வையுங்கள், வளம் கொழிக்கும். அவசியம் உப்பை குளிக்காமல் தொடக்கூடாது . தீட்டு பட்டவரும் உப்பை தொடக்கூடாது. உப்பை இரவில் பெயர் இட்டு சொல்லக்கூடாது . மறைபொருளாக சாப்பாட்டிற்கு போடுவது என கூறலாம் .


தெய்வத்திற்கு பயன்படுத்தும் மலர்கள் மேல் உப்பு படக்கூடாது . உப்பால் அர்ச்சனை செய்யக்கூடாது . எரியும் திருவிளக்கில் உப்பு விழக்கூடாது . ஆலயத்தில் இருந்து ஒரு கல் உப்பைக்கூட தெரியாமல் காலில் மிதித்துக் கூட வந்துவிடக்கூடாது  கவனம். பரிகாரத்திற்கு பயன்படுத்திய உப்பை எக்காரணம் கொண்டும் காலில் மிதிபடக்கூடாது . இவ்வாறாக உப்பை பராமரித்தால் செல்வமும், சந்தோஷமும் சேரும் .


உப்பைக் கொட்டி சத்தியம் செய்து தாண்டக்கூடாது . வீட்டைச் சுற்றி உப்பை தெளித்துவிட்டால் பாம்பும், சாபமும், தீய சக்திகளும் நம்மையோ நம் குடும்பத்தையோ நெருங்காது . எப்படியாப்பட்ட சூன்யமும் உப்பு விரட்டிவிடும். உப்பு உயிர்ப்புள்ள தெய்வ வஸ்த்து அதை பெரும்பாலும் மூடி வைக்கக்கூடாது . உப்பை எவ்வளவுக்கு எவ்வளவு நாம் மதிக்கிறோமோ அந்தளவு வாழ்க்கை உயரும் .  மேலும் உப்பை உயிர்ப்புள்ளதாக நாம் மதித்தால் நமக்கு பிறர் செய்யும் தீவினையை உப்பு வாங்கிக்கொண்டு நம்மை காப்பாற்றும்.


உப்பு பானை நிரப்பி மதிப்புடன் வைத்திருந்தால் தெய்வ அனுகூலம் பெருகும். ஒரு துன்பம் வரும் முன்னே நமக்கு கனவில் வந்து எச்சரிக்கை செய்யும் சக்தி பெற்றதாகும். உப்பு பானை நிரம்பி இருந்தால் பெண்களும் சந்தோஷமாக இருப்பார்கள். ஆண்களுக்கும் வருமானம் பஞ்சமிருக்காது . குழந்தைகளும் நன்றாக பயில்வார்கள். எப்படியாப்பட்ட தோஷமும் விலகி வழிவிடும். அல்லது தோஷம் தீர அறியாமலேயே வாய்ப்பு கிடைக்கும். இவ்வளவு மகத்துவம் நிறைந்த உப்பை திருமகளாக போற்றி பேணிக்காத்து நிறைந்த வற்றாத செல்வம் பெருக.

 

 

       உப்பு ரகசியங்கள் - 3

 

 உங்கள் வீட்டில் தீயசக்தி இருப்பதாகவோ செய்வினை கோளாறு இருப்பதாகவோ நீங்கள் சந்தேகப்பட்டாலும் அல்லது இருப்பதை விரட்ட வேண்டும் என நினைத்தாலும் உப்பு பரிகாரத்தை கடைபிடிக்கவும் . அதாவது சம அளவுள்ள அரைகிலோ உப்பு பிடிக்கும் அளவுள்ள எட்டு பிளாஸ்டிக் டப்பாவை வாங்கி வந்து அதில் உப்பை நிரப்பி எட்டு திசைக்கு ஒன்றாக வீட்டின் உட்புறம் வைத்துவிடுங்கள். அதை எடுக்கக்கூடாது . அசைக்கக் கூடாது . ஒருவேளை உங்கள் வீட்டில் தீய சக்தி இருந்தால் அது எத்திசையில் உள்ளதோ அத்திசையில் உள்ள உப்பு அத் தீய சக்தியை தாங்கி உருகிவிடும். தீயசக்தி எதுவும் இல்லையேல் வைத்த உப்பு கரையாமல் அப்படியே இருக்கும். உப்பு கரைந்து போனால் அதை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது . வெளியில் உள்ள நீர்நிலையில் கொண்டுபோய் சேர்த்துவிடவும். பிறகு புதிதாக உப்பை வாங்கி நிரப்பி வைக்கவும். நீங்கள் எந்த மந்திர தந்திரக்காரரிடமும் சென்று பணம் செலவழிக்கத் தேவையில்லை . இது ஒன்றே சிறந்த பரிகாரமாகும். எந்த தீயதையும் உப்பு தாங்கும் சக்தி கொண்டது . எனவே வாய்ப்புள்ளவர் இப்பரிகாரத்தை கடைபிடித்து கஷ்ட நஷ்டமில்லா பெருவாழ்வு வாழுங்கள்.

 

  உப்பு ரகசியங்கள் - 4

 உப்பிற்கு ஒரு சக்தி உண்டு. உப்பு சற்று தொலைவில் இருந்தாலும் செயல்படும். காந்தகம் அருகில் இரும்பு இருந்தால் எப்படி காந்தகம் அதை ஈர்த்துக் கொள்கிறதோ அதேபோல் உப்பு மனிதர்களின் பாவத்தை ஈர்த்துக் கொள்ளும். இந்த உப்பை பயன்படுத்தக்கூடியவர்கள் சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டவர்களாக இருப்பது அவசியம் .
உடலில் உப்பை வைத்துக் கொண்டு பாவம் செய்தால் உடலிலேயே பாவம் பெருகும். உப்பின் தன்மை என்னவெனில் நாம் எதை தொலைக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை தொலைக்கும் . எதை உப்புடன் சேர்த்து ஆவலாக உண்கிறோமோ அது பற்றும் . இதில் சுப உணவை விரும்பி சாப்பிட்டால் அதன் சக்தி நம்மை பற்றும் . அதேபோல் அசுப உணவான தீட்டு சாப்பாடு, அசைவ உணவு இவைகளைச் சாப்பிட்டாலும் அதில் உள்ள கர்ம பாவங்களும் நம்மை பற்றிக்கொள்ளும். உப்பின் தன்மை இதுதான்.


அதனால்தான் விரத நாட்களில் உப்பில்லாமல் சாப்பிட முயல்வர். சித்தர்கள் கூட சிலவற்றை உப்பில்லாமலேயே சாப்பிட்டார்கள். பாவமற்ற சுப கனிகளையும், கீரைகளையும் மட்டுமே சாப்பிட்டனர். இன்றைக்கு உப்பில்லாமல் எவரும் எப்பண்டமும் சாப்பிடுவதில்லை . உப்புக்கு அடிமையாகிவிட்டார்கள் என்றும் சொல்லலாம். உணவில் அளவாக உப்பை சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்யம் மிளிர்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இதே உப்பு அளவு மீறினால் உடலை விஷமாகவும் மாற்றிவிடும் என்பதும் உண்மையே. இந்த கருத்தை மனதில் பதித்து அடுத்த தகவலை காணுங்கள். என்றோ ஒருநாள் உப்பு நீரில் குளிப்பவர்கள் பாவத்தை தொலைத்து நன்றாகவே இருக்கிறார்கள். தினசரி கடலில் குளிக்கும் மீனவர்கள் வாழ்வு அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை . மேற்கண்ட தகவல்களை  உங்களுக்கு நினைவுபடுத்த காரணமே அடுத்து வருவதை கவனிக்கத்தான். கடல்நீர் உப்புநீர் என்பதால் அதில் குளித்தால் நம் பாவங்களை அது ஈர்த்துக்கொள்ளும்.  இந்த உப்புக்குளியல் மாதம் ஒருமுறை இருக்கலாம். தினம் இருக்கக்கூடாது . யாவருமே வருடத்திற்கு ஒரு முறையாவது உப்பு நீரில் குளித்தால் திருஷ்டி மற்றும் பாவம் தீரும் என்பது உண்மையே . அக்காலத்தில் கடலை விட்டு வெகு தொலைவில் இருந்தவர்கள் கடலில் குளிக்க வசதியில்லாமல் போனது. போக்குவரத்து வசதியும் அக்காலத்தில் இல்லை . எனவே நம் முன்னோர்கள் ஒரு உபாயத்தைக் கடைபிடித்தார்கள். பாவம் தீர்க்க மக்கள் கூடும் இடம் கோயில் தான். அவ்விடத்தில் குளம் வெட்டி நிர் நிரப்பி வைத்தனர். பெரும்பாலும் கடல், பல நதி, ஆறுகள், கிணறுகளில் இருந்து அவை ஆவியாக உறிஞ்சி நமக்கு மீண்டும் சுத்த நீராக அளிக்கும் மழை நீரையே குளத்தில் நிறுத்தி வைத்தார்கள். இந்தக் குளநீரில் குளித்தால் பாவம் விலகும் என்பது உண்மையானாலும், மழை பொழியும்போது நீரில் இருக்கும் வானசக்தி பூமியில் விழுந்த சில மணி நேரத்தில் அதன் சக்தியை பூமி இழுத்துவிடும். எனவே முழுப்பலன் குளநீரில் இல்லாமல் போனது. அதனால் மேலும் ஒரு தந்திரத்தை முன்னோர்கள் கையாண்டனர். பாவம் தீர்க்க குளத்தில் குளிக்க வருவோரும், ஆலயம் வருவோரும் ஒரு பிடி உப்பைக் கொண்டு வந்து தலையை மூன்று முறை சுற்றி குளத்தில் உப்பை போட்டு பின்பு தலையில் அந்த நீரை தெளித்து கொண்டால் பாவம், திருஷ்டி தீரும் என்ற உண்மையான தந்திர முறையை கையாண்டு  குளநீரை கடல்நீர் போல் மாற்றினார்கள்.


இன்னொரு உபாயமாக தலையில் உப்பை வைத்து குளத்தில் மூன்று முறை முழுகி எழுந்திருந்தாலும் சாபம், பாவம், திருஷ்டி தீரும் என்ற உபாயத்தையும் கடைபிடிக்கச்  செய்தார்கள். இதனால் நாளடைவில் மக்கள் மத்தியில் பரவலாக இந்த முறை பரவியது. (உப்பு குளத்தில் போடும் முறை பாவம் தீர்க்கவே வந்தது, புண்ணியம் சேர்க்க அல்ல).

குளங்களை உள்ளூர்வாசிகள் தினசரி பயன்படுத்தினார்கள். உப்பு இல்லாத தண்ணீரில் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் உப்பு உள்ள நீரில் தினசரியோ, அடிக்கடியோ குளிக்கும்போது சங்கடம் உண்டாகும் . எனவே அனைத்து ஊர் குளங்களிலும் உப்பைக் கொட்டுவதை தவிர்த்து ஒரு சில ஆலயங்களில் உள்ள குளத்தில் உப்பை போடும் முறையை கொண்டு வந்து அந்த ஊர் திருக்குளம் பாவம் போக்கும் ஸ்தலமாக பெயரிட்டனர். (கடல் சார்ந்த ஆலயங்கள், உப்பு கொட்டும் பழக்கம் உள்ள குளம் இவைகள் யாவும் பாவம் போக்கும் ஸ்தலமாகவே இன்றும் உள்ளதை அறியலாம்). பாவம் தீர்க்கும் தன்மை உள்ள குளம் உப்பு நீராகும்.


அடுத்து புண்ணிய குளம் என்று உப்பு போடாத குளத்தை குறிப்பிட்டனர். புண்ணிய ஸ்தலம் என்றும் பெயரிட்டனர். புண்ணிய ஸ்தல குளத்தில் உப்பைக் கொட்டக்கூடாது . மாறாக புண்ணியம் கிடைக்க அந்த திருக்குளத்தில் மீன் வளர்த்து மீனுக்கு உணவாக பொறி வாங்கி வந்து உணவு கொடுக்கலாம் என்று பழக்கத்தை உண்டாக்கினார்கள். மீனுக்கு உணவு படைப்பதன் மூலம் புண்ணியம் பெருக கிடைப்பதால் புண்ணிய ஸ்தலம் என்றும் கருதலானார்கள். இந்த நிகழ்வுகளால் வேறொரு சிக்கலும் உருவாகின. அன்றைக்கு மருத்துவ வசதி இல்லாததால் சில நோய்களை மருத்துவத்தால் குணமாக்க முடியவில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்ட பெருநோய் உள்ளவர்களும் பாவம், நோய் தீரவும், புண்ணியம் கிடைக்கவும் ஆலய திருக்குளங்களையே நாடினார்கள். இந்தக் குளத்தில் குளித்தால் தன் நோய் தீரும் என நம்பினர். அவ்வாறே நிகழ்ந்தது . இதனால் நோயஸ்தர்கள் திருக்குளங்களை நாடியதால் நோய் தொற்று பரவியது . இதைக் கண்ட மக்கள் குளத்தில் குளிப்பதற்கு அஞ்சினர். இதை அறிந்த முன்னோர்கள் இதற்கான வைத்திய பரிகாரத்தை கண்டறிந்தனர். அந்த வகையில் வந்ததுதான் மிளகு பரிகாரம். மிளகு ஊறிய குளத்தில் யார் குளித்தாலும் மரு, அம்மை, தீராபுண், பெருநோய்கள் குணமாகும் என்பதை உணர்ந்த முன்னோர்கள் மிளகை குளத்தில் கொட்டும் பழக்கமும் உண்டானது .

தீரா பிரச்சினையையும் தீர்க்கும் வல்லமை மஹா கால பைரவருக்கும், மகா சக்தி துர்கைக்கும், மஹா சக்ரத்தாழ்வாருக்கும், மகா வீரபத்ரருக்கும், மஹா கந்த வேலருக்கும் உண்டு. இவர்களுக்கு உகந்தது மிளகு. இவர்களை வேண்டி கர்ம பாவத்தால் நோய் தாக்கியிருப்பின் தலையை சுற்றி குளத்தில் மிளகு போட்டால் குணமாகும் என்பதை மக்களுக்கு தெரிவித்தனர் . இந்த மிளகை மட்டும் போடுவதற்கென ஒரு குளத்தையும் நிறுவினர் . பழமையான ஐதீகமான ஆலயங்களில் மூன்று குளங்கள் இருக்கும். ஒன்றின் பெயர் சூரியதீர்த்தம் இந்தக் குளத்தில் உப்பைத் தலையை சுற்றிப் போட்டு குளித்தால் கர்ம பாவங்கள் விலகும் , அடுத்து அக்னி தீர்த்தம் இதில் மிளகை போட்டு குளித்தால் கர்ம நோய்கள் தீரும் , அடுத்த சந்திர தீர்த்தம் அல்லது பிரம்ம தீர்த்தம், இதில் எதையும் போட தேவையில்லை  வெறுமனே குளித்தாலே புண்ணியம் சேரும் என்பது ஐதீகம் . இவ்வாறு குளங்களில் மகிமை நிறைந்திருந்தது .  திருவண்ணாமலை , திருவெண்காடு இன்னும் சில தலங்களில் மூன்று குளங்கள் இருப்பதை காணலாம். அவைகள் இந்த முறையில் உருவானது தான்.


வசதியில்லா ஊரில் வேறு வழியின்றி ஒரு குளம் மட்டுமாவது உருவாக்கி வைத்திருந்தனர். அதில் உப்பு, மிளகு இரண்டையும் சேர்த்துப் போட்டார்கள். இது ஒரு வகையில் தவறுதான் என உணர்ந்த நம் முன்னோர்கள் ஒரு வரைமுறையை கொண்டு வந்தார்கள். ஆலய கர்த்தாக்களை ஒன்று திரட்டி தீர்த்தங்கள் மூலமாக ஆலய மகிமையும் சேர்த்து மக்கள் அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி மூன்று குளம் வெட்ட வசதி வாய்ப்பு இல்லாத ஊரில் ஒரு குளமாவது வெட்டி அதில் ஏதாவது ஒரு வஸ்த்துவை மட்டும் (உப்பு (அ) மிளகு) போட்டு அதற்குரிய மகிமையை போற்றும்படி ஏற்படுத்தினர். அதன்படி வந்ததுதான் பரிகார ஸ்தலங்கள். உப்பை மட்டும் போடும் குளம் பாவம் போக்கும் ஸ்தலமாகவும், மிளகை மட்டும் போடும்  குளம் நோயை போக்கும் ஸ்தலமாகவும், பாவங்களை கழித்த பின்னர் புண்ணியம் பெற எதுவும் போடாமல் குளித்து (அக்குளத்தில் மட்டும் மீன் வளர்த்தனர் அதற்கு பொறி போட்டு தர்மம் செய்து பின் வழிபட வேண்டும்). இயன்றளவு தர்மம் மீன்களுக்கு கொடுத்து வழிபட ஒரு ஆலயம் என வழக்கத்தில் வந்தது . பாவம், நோய், புண்ணியம் என மூன்று பிரிவு உள்ள பரிகார ஆலயம் இன்றும் நடைமுறையில் உள்ளதை அறிந்திருப்பீர்கள். அது இவ்வாறு வந்ததே. இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்ட பின் வசதி படைத்த ஆலயமே ஆனாலும் ஒரு குளம் மட்டும் வெட்டி ஒரு செயலுக்கு மட்டுமே பயன்படுத்தினர் என்பது  குறிப்பிடத்தக்கது .


மேலும் அறிக :- செல்வம் தரும் திருப்பதியில் இந்த மூன்றும் கடைபிடிக்கப்படுகிறது. ஆகாச கங்கை (பாபநாசம்) அருவியில் குளித்தால் பாவம் தீரும். அனுமன் தீர்த்தத்தில் குளித்தால் நோய் தீரும், ஆலயத்தில் உள்ள சக்கர குளத்தில் குளித்தால் புண்ணியம் கிட்டும். இவ்வாறாக திருப்பதியில் இன்றுவரை ஐதீகம் கடைபிடிக்கப்படுகிறது என்பதை அறியவும். புண்ணியம் தரும் குளத்தில் மனதளவில் பாவத்தை விட்டு விட்டதாக உணர வேண்டும். அறிக :- பாவத்தை மனதளவில் இருந்து விடுதலை செய்வதற்கு பதிலாக அணிந்துள்ள பழைய துணியை விடுவது உங்களை ஏமாற்றிக் கொள்வதாகும். புண்ணியக் குளத்தில் அழுக்குப்போக குளித்துதான் ஆக வேண்டும் என்ற அவசியமில்லை . ஜலம் தலையில் பட்டாலே போதும், பாதம் தண்ணீரில் நனைந்தாலே போதும். எவராக இருந்தாலும் புண்ணிய குளங்களை அசுத்தம் செய்யக்கூடாது, மீறினால் பாவமே பெருகும்.


குளம் ஒருவர் உழைப்பில் உருவானது இல்லை. ஊர்மக்கள் அனைவரும் அயராது உழைத்து உருவானது . எனவே அதை பேணிக்காக்க வேண்டும். தண்ணீரில் சிறுநீர் கழித்தால் கால் பங்கு பிறவி பாவம் சேரும். புண்ணியக் குளத்தில் மலம் கழுவினால் நம் ஆயுளில் பாதி பாவத்தை அனுபவித்தே வீணாகக் கழியும் . புண்ணிய குளநீரை கொண்டு சோறு செய்து இறைவனுக்கு படைத்து அதை வருவோருக்கு அன்னதானம் செய்தால் பல பாவங்கள் விலகும். எனவே திருக்குளங்களில் வீண் அசுத்தம் சேராமல் இருக்க முதலில் ஒரு இடத்தில் குளித்து பின்பு திருக்குளத்தில் குளிப்பது விசேஷம். இம்முறைகளை கடைபிடித்தும் செல்வ வளம் பெறுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .