ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

   லட்சுமி கடாச்சாரம் விலகாமல் இருக்க

 

தர்மத்திற்கான கூலியை அன்னை மகாலட்சுமி உடனடியாக கொடுப்பார்கள்,  எனவே சிறுதர்மம் செய்தோ. பிராப்தம் இருந்தோ. முன் ஜென்ம பலம் இருந்து செல்வத்தை நிறைய சேர்ப்பவர்கள் அதை நிலையான தர்மத்தால்  காத்துக்கொள்ள வேண்டும்,  செல்வம் என்னும் மகாலட்சுமி தவறான செயல்களுக்கு பயன்படுத்தினால் பெரும் பாவம் உடனே வந்து சேரும் .

  அன்னை மகாலட்சுமிக்கு பயந்து முறையாக வாழ்க்கை செல்வங்களை சேகரிக்க முற்பட்டாலே அன்னை மகிழ்ந்து அனைத்தையும் கொடுப்பாள், அன்னை மகாலட்சுமி உள்ள இடத்தில் மங்களவன் என்னும் செவ்வாய் பகவான் எப்பொழுதும் நல்வரங்களை கொடுத்து காப்பார், பூமி யோகங்களையும் தெய்வ அனுகிரகத்தையும் நல் உறவையும் கொடுத்து காப்பார், அன்னை மகாலட்சுமி சந்தோஷமாக உள்ள இடத்தில் விஷ்ணு எப்பொழுதும் நித்திரை தியானத்திலேயே இருப்பார் . கர்ம தண்டனையில் இருந்து காத்தருள்வார் .

 லட்சுமி கடாட்சாரம் எங்கெல்லாம் இல்லையோ அங்கு துக்கமும். வறுமையும். அழுகையும் இருக்கும், இதுபோன்று தண்டனை பெறுபவர்களை பார்த்து மனிதாபிமானம் என்று உதவிக்கு சென்றால்  நமக்கும் சேர்த்து சில நேரம் தண்டனை கிடைப்பதுண்டு, எல்லாம் இறைவன் சித்தம் அவரவர் தண்டனையை அவரவர் அனுபவிக்கிறார்கள் என்று பொறுமை காப்பது நன்று, அதற்காக பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யக்கூடாது என்று அர்த்தமில்லை  இதுபோன்ற பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவும்போது தர்ம பலனை பெரும் நோக்கில் உதவிக்கு இறங்கக்கூடாது , எல்லாம் இறைவன் சித்தம் இறைவன் அவர்களுக்கு உதவிட என்னை படைத்திருக்கிறார் அவர் கட்டளைப்படி நான் இந்த சேவையை செய்கிறேன் என்று மனதளவில் நினைத்து உதவி செய்யலாம், அப்போதுதான் மகாலட்சுமி அன்னையின் கோபத்திற்கு ஆளாகாமல் நாம் தப்பிப்போம், இல்லையேல் பாவபங்கு நம்மையும் சாரும், இதை நமக்கு உணர்த்தத்தான் புராணங்கள் எதையும் நமக்கு மட்டுமே சொந்தம் எனவும் தர்மத்தை கூட தனது எனவும் தனக்கே சேர வேண்டும் எனவும் கருதக்கூடாது  அதை இறைவனுக்கே உரியது என சமர்ப்பணம் செய்துவிட வேண்டும் என கூறுகிறது . இந்த எண்ணத்தோடு உதவி செய்கிறவர்கள் மட்டுமே லட்சுமி கடாட்சரத்தோடு வாழ்கிறார்கள், தர்மம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் சேரும் என தர்மம் செய்பவர்கள் லட்சுமி அருளை பெறமுடியாமல் இருக்கிறார்கள், எதையும் தனது என்று நினைத்தால் நாம் செய்த பாவமும் நாமேதான் பரிபூரணமாய் அனுபவித்தாக வேண்டும் .எல்லாம் இறைவனுடையது நான் அவர் சேவகன் என நினைத்து செய்தால் எதுவும் நம்மை தீயதாக அண்டாது சுபமான மகாலட்சுமியே அண்டி நம்மை வளம் காண வைப்பார் இதுவே சூழ்ச்சுமம் .

இன்றும் குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்த சூழ்ச்சுமத்தை கடைபிடித்து பெரும் செல்வந்தினர்களாக உள்ளனர், அவர்கள் மற்றவரை பற்றி கவலைப்பட மாட்டார்கள் என் தொழிலில் நான் தூய்மையாக பணியாற்றுகிறேன், இறைவன் கொடுத்த வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன், மற்றவர் வினையையோ. வலியையோ என்னால் பெற்றுக் கொள்ளமுடியாது, அதனால் யாரை பற்றியும் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை எல்லாம் அவன் செயல் என நிதானமாக கூறுவார்கள், இது உண்மையே எனவே நாம் செயல் தர்மம் உள்ளதாக பார்த்துக் கொண்டால் போதும், மகாலட்சுமி கடாட்சரத்தோடு அனைவரும் வாழலாம்,

ஒருவரை பார்த்து மற்றவர் துக்கப்படுவதும் பொறாமைபடுவதும் நமக்கு நாமே போட்டுக் கொண்ட வறுமை வேலியாகும் .

பாதிக்கப்பட்டவருக்கு மனிதாபிமானமாக நடந்துகோள்ளலாம் வழி காட்டலாம் உதவலாம் இரக்கப்படலாம் தவறில்லை ஆனால் அதையும் கடந்து சரியான புரிதல் இல்லாமல் பாதிக்கப்பட்டவரின் கர்மாவில் பங்குகொண்டு உங்கள் பலத்தை இழக்காதீர்கள் .இதை தாங்களே ஆய்வு செய்துபார்த்தால் உண்மை தங்களுக்கு தெறியவரும் .சிந்தித்து செயல்படுங்கள் .

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .