ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

கோமதி சக்கர மகிமைகளும் அற்புத பலனும்

மெய்யன்பர்களே
பாவம் செய்யா மனிதன் உலகிலும் வேறு எந்த லோகத்திலும் இல்லை. எனவே இதுவரை செய்த பாவத்தைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை. அதற்காக பாவத்தை தொடரவும் கூடாது .அவரவர் மன தேவை பூர்த்தியாகவும், கடமைகளை செய்யவும் எத்தனிக்கும்போது பாவமேற்ப்படுவது சகஜமாகிறது .( இந்த பாவமேற்ப்பட ஆசையே காரணமாகிறது ஆசையால் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் பாவத்தை நாம்தான் அனுபவித்து தீர்த்தாகவேண்டும் . )

புலியின் உணவு அசைவமாகத்தான் இருக்கும். பசுவின் உணவு சைவமாகத்தான் இருக்கும். இது படைப்பின் நியதி. அவரவர் கடமையை ஒழுங்காக செய்யவேண்டும். ஆசை பூர்த்தியாக ஜென்ம பந்த தெய்வங்களை நினைத்து பார்த்தால் கூட போதுமானது.

தேவைகள் பூர்த்தியாக தெய்வ சக்தி கொண்ட ஒரு பொருளை குறிப்பிட்ட இடத்தில் வைத்து பயன்படுத்தி வேண்டியதை பெறலாம் . இதன் மூலம் நம் ஆசையை தேவையை பூர்த்திசெய்துகொள்ளும் போது நமக்கு பாவம் ஏற்ப்படாது .ஏற்ப்பட்டுள்ள முன்னோர் வழி பாவங்களும் விலகிவிடும் .

பல வகையிலும் முன்னேற்ற பாதையை இறைவன் நமக்கு காண்பித்தும் கொடுத்தும் இருக்கிறார். அதைக் கடைப்பிடித்தால் போதும் நம் பிராணன் நிம்மதி பெறும். அந்த எளிய வழிமுறையை காண்க .

இந்த உலகமும், அண்ட சராசரமும் சுழியால் உருவானது . இதில் வாழும் உயிர்களும் சுழியால் காக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் என தொடர்ந்து செயல் நடந்துகொண்டிருக்கிறது . இந்த மகத்துவமான சுழிக்கு திருவல சுழி அல்லது கோமதி சுழி அல்லது சுதர்சன சுழி எனவும் பெயர்கொள்ளலாம். இந்த சுழிக்கு உரியவர் ஸ்ரீவிஷ்னுபகவான் ஆவார் .

இந்த சுழிகொண்ட கல் நம் தேவை என்னவோ அதை மட்டும் உயிர் கொடுத்தால் செய்யக்கூடியது . நாம் பாவியா, புன்னியனா என்ற பாகுபாடும் அதற்கில்லை. இது ஒரு அஸ்த்திரமாகும். கத்தியை யார் எடுத்து வெட்டினாலும் வெட்டும். அதை போலத்தான் இந்த திருவல சுழி சக்கரமும் . இதன் பயன் இன்னார் தான் பெறமுடியும் என்ற பாகுபாடு அற்றதாகும். பயன்படுத்துபவர் எத்தகையவரானாலும் அவர்க்கு பணிபுரியும். ஆனால் பணிபுரிய வைக்க வேண்டிய சிறு கடமை அவரவரிடம் தான் உள்ளது .

ஏனெனில் கோமதி கல் உடல் போன்றது நம்மிடம் ஆத்மா உள்ளது . அந்த கோமதி சுழி உடலோடு நம் ஆத்மாவை இணைத்து கோரிக்கை என்னவோ அதற்கு செயல்படுத்தினால் போதும். அக்கோரிக்கை நிகழும். இதுதான் இந்த கோமதி சக்கரத்தின் செயலாகும்.

மேலும் கங்கை நீரை அருகில் வைத்துக்கொண்டு 13 ஜென்ம கட்டங்களை நினைவு கூர்பவனுக்கு பலன்கள் எளிதில் கிட்டும். இதன் செயல்கள் பல வகையான தேவைகளை பெற வைக்கும்.

இதன் உள்ளடங்கிய சக்திகள் :


வலம்புரி சங்கிலும் மேல்புறத்தில் திருவல சுழி இருக்கும். இதற்க்கினையான இந்த கோமதி சக்கரத்தை வைத்து பூஜிக்கும் போது வலம்புரி சங்கின் பலனும் சேர்ந்து கிடைத்துவிடும். ஆதலால் வலம்புரி சங்கை பலஆயிரம் கொடுத்து ஒரிஜினல் எதுவென தேடி கண்டுபிடித்து வாங்க வேண்டிய கட்டாயமில்லை.

அடுத்து கோமாதா (பசு) வின் சக்தி இந்த கோமதி சக்கரத்தில் உள்ளதால் பசுவை வளர்த்து புன்னியம் பெற முடியவில்லையே என வருந்த வேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில் கோமதி சுழி பசுவிடமே நிறைந்துள்ளது . கண்களில், முதுகில், கால் குளம்பில், முதுகில், வால் மேல்பகுதியில், நெற்றியில், கழுத்தில், அடிவயிற்றில், குதத்தில் என பல சுழிகளை பசு மட்டுமே அதிகம் பெற்றிருக்கும். இது ஸ்ரீ ஹரியால் உருவாக்கப்பட்டது . அதனால் தான் பசுவிற்கு தனிஇடம் கொடுக்கப்படுகிறது . இந்த கோமதி சுழிகல் ஒட்டுமொத்த பலனும் ஸ்ரீ ஹரிஹரனால் முக்தி பெற்ற ஆத்மா மூலம் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.


கோமதி சக்கரத்தை வலம்புரி சங்காக நினைத்தால் வலம்புரி சங்கின் பலனைத் தரும். பசு மாதாவாக நினைத்தால் பசுவின் பலனைத் தரும். உங்களுக்குப் பிடித்த தெய்வங்களாக நினைத்தும் வழிபாடுகள் செய்தால் அதனதன் பலனைக் கொடுக்கும். இதுதான் இக்கல்லின் அதிசயம். இதுதான் ஆதியில் தோன்றிய சக்கரமாகும்.

சாலி கிராமத்தை வைத்து பூஜிப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த சாலி கிராமத்தின் உள் ரகசியமே இந்த திருவல சுழி சக்கரம் தான். இதை வைத்து பூஜிக்கும்போது பிரமிடு, மகாமேரு ஸ்ரீ சக்கரம் தனியாக வைத்து பூஜித்து அடையும் சக்தியை இந்த கோமதி சக்கரம் ஒன்றிலேயே பெறலாம்.

இந்த உலகின் யந்திர வடிவமே சுழிதான். அந்த சுழியே கோமதி சுழியாகும். 12,000 ஆண்டுகளுக்கு மேலான மிக பழமை வாய்ந்த சக்கர முறையாகும் இது . பயண தொலைவும், போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தால் இச்சுழி சக்கரம் நாட்டில் பரவ முடியாமலும், அருமை, பெருமை மறைந்தும் போயின. இது காலத்தின் கோலமாகும். ஸ்ரீ வாரகி அன்னையை இனம் கண்டு இப்போது மக்கள் எப்படி பல ஆண்டுகளுக்கு பின் வழிபட ஆரம்பித்திருக்கிறார்களோ அதைப்போல் இனி வருங்காலத்தில் கோமதி சக்கரத்தையும் வழிபாடு செய்வார்கள்.

இந்த கோமதி சக்கரத்தை வழிபாடு செய்தால் மூன்று லோகத்தையும் வழிபட்ட பலன் கிட்டும். சிவபெருமான் சிரசு முடியின் உச்சி கங்கை சுழியும் நம் தலையில் விழும் சுழியும் இதே திருவல சுழிதான். இது தலைவிதி சக்கரமாகும். பசுவின் பார்வை வீட்டில் பட்டால் பல பாவங்கள் விலகும். பசுவின் திருஷ்டி சக்தியே இந்த கோமதி சக்கரமாகும். இஃது வீட்டின் எந்த பாகத்தில் வைத்தாலும் திருஷ்டி விலகும். நாகத்தின் சுழியும் இதுவேயாகும். இந்த சுழியில் நாகலட்சுமி குடிகொண்டுள்ளாள். எனவே நாகதோஷங்கள் விலகிவிடும். சிவப்பு வண்ண துணியின் மேல் வைத்து பயன்படுத்தினால் இந்த கோமதி சக்கரம் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

ஒருவருடைய சகல தோஷமும் விலக இறைவனால் உண்டாக்கப்பட்ட கோமதி சக்கரத்தைக் கொண்டு 13 கடமைகளை சங்கல்பம் அவரவரே செய்தால் எத்தோஷமும் அதன்பின் அவர்களிடம் இருப்பதாக கருத தேவையில்லை. எல்லாம் மறைந்துவிடும்.


சகல தோஷமும் விலக ஆலயம் அலைய வேண்டியதில்லை. பகவான் நினைத்தால்தான் தோஷமும் விலகும். பகவான் ஸ்ரீமன் நாராயணர் அளித்த திருவல சுழி சக்கரம் நம்மிடம் உள்ளவரை எத்தோஷமும் நெருங்குவதில்லை.

தெறிந்து கொள்ளவேண்டியவை – பயன்கள்

1. லிங்க வடிவமுள்ள சாலிகிராமத்தையும், ஸ்ரீ சக்கரத்தையும், வலம்புரி சங்கையும் சுத்தமற்றவர் பூஜித்தால் தரித்திரத்தில் தள்ளிவிடும். ஆனால் திருவல சுழி கொண்ட கோமதி சக்கரம் யார் வேண்டுமானாலும் பூஜிக்கலாம். ஆசாரம் ஒரு முக்கியமில்லை. மனமே முக்கியம்.

2. கோமதி சக்கர வழிபாட்டை காசி ஸ்தல ஆன்மிக ஞானிகளிடம் முறையாக உபாசனை பெற்று உங்களிடம் மறைவின்றி ஒப்படைக்கப்படுகிறது. இப்பிறவி தவத்தின் பயனாக பூஜை ரகசியம் பெற்றது இறை செயலாகும். அதை நீங்களும் அறிவதால் பாக்கியவனாவீர்.

உலகில் முதன் முதலாக விரிவாக இதன் ரகசியத்தை வெளிப்படுத்த இறைவன் எமக்களித்த கட்டளையாகும் . இறையருளால் நீங்களும் பார்த்து அறிந்து பயன்பெருங்கள் .

3. கோமதி சக்கரம் பயன்படுத்தும் போது நிமிர்த்தியே வைக்க வேண்டும். அதாவது சுழி ஆகாயத்தை பார்த்தார் போல் வைக்க வேண்டும். பூஜைக்கு பின் எப்படி வேண்டுமானாலும் வைக்கலாம்.

4. பி(வி)ல்வம் 6 மாதம் வரை பலனளிக்கும். கோமதி சக்கரம் ஆண்டாண்டு காலமாக பலனளிக்கும். கோமதி சக்கரத்தை யார் தலையில் வைத்தும் ஆசிர்வாதம் செய்யலாம். உங்களிடம் நாங்கள் அளிக்க இருக்கும் கோமதி சக்கரம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அவர் சிரசில் வைத்து அபிஷேகத்ததையே உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த சேவைக்கு பெரிதும் உதவிய காசியில் உள்ள நகரத்தார் சத்திரம் - வாரணாசி அவர்களுக்கு நன்றி உரித்தாகும்.

5. இந்த கோமதி சக்கரத்தை பெருவோர் அளிக்கும் தட்சணை விலையோ லாபமோ இல்லை. பாவத்தை போக்க புண்ணியத்தை பெறுகிறீர்கள். புண்ணியமே அதிஷ்டத்தை பெருக்கும்.


6. விதியின் தொடர்பில்லாமல் ஒருவரோடு ஒருவர் யாருமே தொடர்புகொள்ள முடிவதில்லை. எல்லா சந்திப்பும் விதியே. அந்த வகையில் பார்க்கின்றபோது திரு சாஸ்த்திர வித்யா பீடத்தில் உண்டாகக்கூடிய அறிமுகமும் இறைவனின் நிர்பந்தமேயாகும். இஃது தெய்வீக தொடர்பும், தர்ம தொடர்புமாகும். இந்த தொடர்பு விதியை வெல்லவோ அல்லது வாழ்வை நன்கு அமைத்துக்கொள்ளவோ உதவுகிறது .இந்த தெய்வீக தொடர்பை உண்டாக்க திருவலசுழி எனும் கோமதி சக்கரமே காரணமாகும் .

7. தன்னால் தீர்த்துக்கொள்ள முடியாத பாவத்தையும், தன்னால் பெறமுடியாத அதிஷ்டத்தையும் இன்னொரு புண்ணிய ஆத்மாவால் பெறமுடியும். இதனால்தான் முன்னோர்கள் ஞானிகள், சித்தர்களை மானசீகமாகவாவது வழிபடச் சொன்னார்கள். இந்த வகையில் நம் குருஜி அவர்களும் மௌனயோக தவம் கொண்டு அன்றாடம் காசி கங்கை தீர்த்தமாடி அரிச்சந்திரா கட்ட தீர்த்தம், மனிகர்னிகா தீர்த்தம், தசஸ்வமேதா தீர்த்தம், பஞ்சதீர்த்தம் போன்று 64 தீர்த்த கட்டங்களை தொட்டு ஸ்நானமும் தவமும் சங்கல்பமும் செய்து தினசரி மாலை 6 மணிக்கு கங்கா ஆரத்தி செய்து எம்மிடம் பலன் பெறும் மக்களின் பாவங்கள் சகல சாபங்களும் தீரவேண்டும் என்று தினசரி பிரார்த்தனை செய்கிறார். எனவே இதை பெறுகிறவர்கள் நிச்சயமாக அதிஷ்டங்களை பெறுவீர்கள்.

8. காசியில் இருந்து சிறுகல்லையாவது கொண்டுவந்து வணங்கவேண்டும் என்று பழமொழியே உண்டு. (ராமேஸ்வர லிங்கமூர்த்தியும் காசியில் இருந்து ஆஞ்சநேய சுவாமியால் கொண்டுவரப்பட்டதே). எனவே இந்த காசியில் இருந்து கோண்டுவரப்பட்ட இறைவனால் படைக்கப்பட்ட புண்ணிய ஆத்ம கோமதி கற்கள் அறிய சக்திகள் அனைத்தையும் உங்கள் குடும்பத்திற்கே கொடுக்கும்.

ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் மூலம் சீதா தேவிக்கு அடையாளம் காட்ட கொடுத்த ரகுவம்ச கணையாழி (மோதிரம்) இந்த கோமதி சக்கரம் பதித்தது தான் .

மனதில் தெய்வத்திற்கு இடமில்லாதபோத வெளியில் ஆயிரம் தெய்வத்தை வணங்கியும் எப்பயனும் இல்லை. அதேபோல மனதளவில் தன் தோஷம் பாவம் விலக வேண்டும் என்ற எண்ணமில்லாமல் எத்தனை கோடி கொடுத்து வெளியில் பரிகாரம் செய்தாலும் தோஷம் விலகுவதில்லை. ஆனால் கோமதி சக்கர வழிபாட்டை இருக்கும் இடத்தில் இருந்து ஒருமுறை செய்தாலோ அல்லது நினைவு கூர்ந்தாலோ சகல பாவமும் விலகுகிறது.

கங்கையில் சகல மனிதரும் பாவம் தீர்க்க தீர்த்தமாடுவதால் கங்கைக்கு பாவம் அதிகம் சேர்ந்ததாகவும் அதன் பாரம் தாங்காத கங்கை சிவபெருமானிடம் வேண்ட இறைவன் மனமிறங்கி இந்த உபாயத்தை கங்கைக்கு உபதேசித்ததாக ஐதீகம் உண்டு. அதாவது எந்த ஒரு மனிதரும் விதிகட்டம் கர்ம கட்டம் ஜென்ம கட்டம் ஆகிய 12 கட்ட பிரிவுகளையும் தன்னையும் மதித்து கோமதி சக்கரம் கொண்டு வணங்கி கங்கையான உன் தீர்த்தத்தை எவரொருவர் தன் உச்சியில் (தலையில்) தெளித்து கொள்கிறாரோ அவரின் ஜென்ம குடும்ப பாவம் அன்றே விலகும். உன்னுடைய பரிபூரண ஆசியை அவர்களுக்கு வழங்கு உன்பாரம் அப்போதுதான் கூடாது என வழி கூறி மறைந்தார்.

இன்றும் தினந்தோறும் பலஆயிரம் மக்கள் வந்து கங்கையில் நீராடினாலும் அனைவரின் பாவமும் தீர்ந்துவிடுவதில்லை. தந்திரமாக இந்த கோமதி சக்கரத்தை வைத்து வழிபட்டாலே போதும். காசிக்கு செல்ல வேண்டிய கட்டாயமே இல்லை. பாவமும் சாபமும் தொடர்ந்து வந்து உங்கள் குடும்ப நிம்மதியை கெடுக்காது . அக்கினியால் எல்லா பிரச்சனையும் தீர்க்க முடியாது. ஆனால் கங்கையாலும் கங்கையில் படைக்கப்பட்ட பொருளாலும் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கலாம்.

அன்னை கங்கா மாத கோமதி சுழி பூஜை செய்து நாடி வருவோர் துன்பத்தை போக்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம் உண்டு. புண்ணியம் செய்யும் மனிதருக்கே கோமதி சக்கரம் கையில் கிடைக்கும் எனவும் ஐதீகம் உண்டு.

புண்ணியம் செய்தவருக்கு தன்னால் சேர வேண்டும் என்ற காரணத்தினாலேயே இதை பற்றிய விமர்சனம் வெளியில் பிரபலமில்லாமல் போனது . பரத்வாஜ் மகரிஷிகள் இதற்கு விமோசனம் தந்தார் எவ்வாறெனில் கங்கை தீர்த்தம் உடன் கொண்டு எவர் பூஜித்தாலும் அவர்களின் குடும்பத்திலுள்ள பாவ சாபங்களை கங்கை நீர் ஈர்த்துக்கொள்ளும் என வழி கூறினார். இதை அடிப்படையாக வைத்தே குருஜி அவர்கள் கோமதி சக்கரத்தோடு கங்கை தீர்த்தமும் அளிக்கிறார். உங்களிடம் அளிக்கும் கங்கை தீர்த்தம் பாவங்களை ஈர்த்துக்கொள்ளும் கோமதி சக்கரம் செல்வ பெருக்கத்தை தொழில் பெருக்கத்தை உண்டாக்கும். நிம்மதியைக் கொடுக்கும்.

9. மனிதன் மனதளவிலும் உடல் அளவிலும் நற்பண்பு பெறவேண்டும். அதன்மூலம் தெய்வ அருள் கிட்டி சகல வளமும் பெற வேண்டும் எனவும் முறையாக புண்ணிய மாமனிதர்கள் பல செய்தியை முறையுடன் கொடுத்து சென்றுள்ளனர். ஆனால் சிலரால் கால சூழலில் மனிதனால் தவறு செய்யாமலோ, சாபம் பெறாமலோ, பாவம் சேர்க்காமலோ இருக்க முடியவில்லை. கால சுற்றுச்சூழல் தன்னால் பாவங்களை செய்ய தூண்டுகிறது . இப்படி அடிக்கடி பாவத்தில் அகப்படும் மனிதருக்கும் வேற்று மதத்தினருக்கும் பலன் நிரந்தரமாக பெரும் உபாயமே திருவல சுழி பரிகாரமாகும்.

இதை எவரும் ஆராதிக்கலாம். இதை வைத்திருந்தாலே நாகதோஷம் தன்னால் விலகுகிறது . பரிகார ஷேத்ரம் எங்கும் போக வேண்டியதில்லை. கோமதி சக்கரம் ஒரு உயிர்கல் வகையாகும். வளரக்கூடியதாகும். இது எல்லா அதிஷ்ட கற்களுக்கும் மேலானதாகும். இதன் சுழியை சற்று நேரம் உற்று பார்த்து கொண்டிருந்தாலே சில மாறுதல் மனத்திரையில் தெரிவதை உணர்வீர்கள்.

10. உங்கள் பெயர் மந்திரத்தை உயிர் பெறாமல் வைத்திருக்கிறீர்கள். இனி இந்த கோமதி சக்கர உதவியால் அந்த குறை அகன்று புகழுடனும் நிம்மதியுடனும் வாழ்வீர். (ரகுவம்சம் தழைத்தது இதனாலும் தான்) கோமதி சக்கரத்தில் பெயரை ஓதி செம்பு சொம்பில் போட்டு தண்ணீர் ஊற்றி அந்த நீரை விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் உங்கள் சக்தி பன்மடங்காக உயர்வதைக் காண்பீர். இந்த முறையில் தொழில் முன்னேற்றமும் குடும்ப மேன்மையும் அடையலாம். இந்த கோமதி சக்கரம் முறைகள் உங்களுக்கு மட்டுமன்று குடும்பத்தாரும் சுற்றத்தாரும் கூட பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தக்கூடியதை உங்கள் குடும்பத்தாருக்கு கொடுங்கள். வெளிநபருக்கு அதை கொடுக்காதீர்கள். வேண்டுமானால் வேறொன்றை வாங்கிக்கொண்டு அதன்மூலம் பலன்பெற சொல்லுங்கள். ஏனெனில் அவர்கள் என்னஅலைகள் உங்கள் என்ன அலைகளோடு ஒத்து போகாமல் இருக்கலாம். அதனால் உங்களின் சக்தி தடைபடலாம் கவனம். மேலும் நீங்கள் கூறும் நிவாரண மந்திரங்களை வேறொருவருக்கு கூறக்கூடாது . ரகசியத்திற்கு ஒரு மன பலம் உருவாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

11 .கோமதி சக்கரம் உள்ள இடத்தில் சிவகோபம் சக்தி கோபம் உண்டாவதில்லை. இல்லத்தில் மூதேவி வணக்கத்திற்குரியவளாக மாறுவாள். விரட்டக்கூடியவளாக இருக்கமாட்டாள். கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் சின்னம் (பிரதீக்) உள்ளதால் அவ்விடம் குபேர வாசம் உண்டாகி தரித்திரம் விலகும். இந்த கற்களை வைத்து பூஜிக்கிறவர்கள் மோட்சத்தை அடைகிறார்கள்.
அதிஷ்ட தேவதை தேடிவர காரணம் இக்கோமதி சக்கரம் சுதர்சன சக்கரத்தால் உருவானதால் இது இருக்கும் இடம் தீயசக்தி விலகுவதால் அதிஷ்ட தேவதை தேடிவந்து குடிகொள்கிறாள். இச்சுழி இருக்கும் இடத்தில் குழப்பம் இருப்பதில்லை. தன்னால் ஒரு வழி பிறக்கிறது. பல ஆயிரம் கொடுத்து அதிஷ்டக் கல்லோ, பெயர் மாற்றமோ செய்யத் தேவையில்லை. நீத்தாருக்கு திதி கொடுக்காத தோஷம் முதல் நாம் கண்ட கடின தோஷங்கள் இக்கோமதி திருவல சுழியை பயன்படுத்துவதன் மூலம் விலகுகிறது.

கோமதி சக்கரம் உள்ள இடத்தில் கூடுதல் எனர்ஜி பெறுகிறது. அதனால் வாஸ்து குறைகள் யாவும் பாதிப்பதில்லை . தொழில் செய்யும் இடத்தில் ஒரு சிவப்பு துணியில் கோமதி சக்கரம் 13 ஐ கட்டி ஈசான்ய பாகத்தில் வைத்தால் அல்லது கல்லா பெட்டியில் வைத்தால் பணம் பெருகும். தொழில் பெருகும். ஒரிஜினல் வலம்புரி சங்கு தற்போது ஆயிரக்கணக்கில் கொடுத்து வாங்க வேண்டியதாகிறது. அவ்வாறே வாங்கினாலும் வீட்டில் எப்பொழுதும் பரிசுத்தம் கடைபிடிக்க வேண்டியதாகிறது. ஆனால் இந்த கோமதி சக்கரம் உள்ள இடத்தில் வலம்புரி சங்கை சிரமப்பட்டு வாங்க வேண்டிய அவசியமில்லை. கடின சுத்தமும் அவசியமில்லை. அசுரகுலம், தேவகுலம் இரண்டிற்கும் பொதுவானவள் அன்னை மகாலட்சுமி. அதைப்போல சுத்தத்திற்கும், அசுத்தத்திற்கும் பொதுவானது கோமதி சக்கரம். எனவே இதை வைத்திருந்தாலே போதும். நற்பலன் விளையும் . அசுத்த தீட்டு பாதிக்காது .

12 .கோமதி சக்கரம் ஆத்மாக்கள் ஆகும். அது யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யும். அந்த ஆத்மா கற்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். 13 கட்டங்களில் உள்ள நாமாக்களை சொல்லி அதனதன் இடத்தில் வைத்துவிட்டால் அது உயிர்ப்புடன் அதனதனுடன் தொடர்புகொண்டு அது உயிர் பெறும்.
படைக்கப்பட்ட உயிர்கள் அத்தனையும் சுழியுடனே படைக்கப்பட்டது. காய்கறிகளை நறுக்கினாலும், மரங்களை அறுத்தாலும் கூட உள்ளே வல சுழி இருக்கும். உருண்டையான பூமியை இரண்டாக பங்கிட்டு அதன் மையத்தில் உயிர்களும் கீழே பாதாளமும் மேலே ஆகாயமும் உள்ளது. இதில் பாதாள சுழியும் ஆகாய சுழியும் உயிர்களின் சுழியும் ஒன்றாகவே இருக்கிறது. அதனால்தான் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்கிறது. சம்மந்தமும் ஏற்ப்படுகிறது . உற்பத்தி ஆவதும் அழிவதும் மாறி மாறி நடக்க இந்த சம்மந்தமும் ஒரு காரணமாகும். இதில் சுதர்சன சக்கரம்போல் காக்கக்கூடிய சுழி கோமதி சக்கரமாகும. புராண கதையில்கூட ஒரு அசுரன் கோமதி சக்கரம் வைத்து வழிபாடு செய்து தன் கையிலேயே வெற்றி சக்கரமாக வைத்திருந்ததால் அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. பகவான் மகாவிஷ்ணு சூழ்ச்சியாக அந்த கோமதி சக்கரத்தை அசுரனிடம் இருந்து அப்புறப்படுத்திய பின்புதான் அவரால் வெற்றிகொள்ள முடிந்தது .

மகிமைகள்

கோமதி சக்கரம் ஸ்ரீவிநாயக பெருமானோடு தொடர்புள்ளதாகும்.சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு என்று கூறுவார்கள். எச்செயலை செய்ய துவங்கும் முன்னரும் பிள்ளையார் சுழி போட்டு செயல்களை செய்ய துவங்கினால் லாபகரமாக முடிவு இருக்கும் என்பர். பிள்ளையார் சுழிக்கு இன்னொரு பெயர்தான் கோமதி திருவல சுழியாகும். இதன் உட்பொருள் சுபம் லாபம் என்பதாகும். இந்த சுழியை ஒருவர் கண்டாலே அவர் மூலாதாரத்தை தொட்டதாகவும் முதற்கடவுளை வணங்கியதாகவும் அர்த்தமாகும். ஆதியில் எல்லா சுழிக்கும் முதல் சுழி கோமதி சுழியாகும். பிள்ளையாரின் துதிகை சுழியை பார்த்தால் வெற்றியாகும். அதே போல் கோமதி சுழியை பார்த்தாலே வெற்றியாகும் என ரகு (சூரியவம்சம்) வம்சத்தினர் கையாண்டு வெற்றிபெற்று நிரூபித்துள்ளனர். சுதர்சன சக்கரத்திற்கு ஆதிசக்கரம் இந்த கோமதி சக்கரமாகும். இந்த சுழியை இன்று வரை நாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் நம்மோடு கலந்த விதி சுழி இது என பலரும் நினைத்து பார்க்கவில்லை.
அறிவீராக :- அவன் சுழி சரியில்லப்பா என வழக்கத்தில் கூற கேட்டிருக்கலாம். இந்தசுழி விதி எனவும் வைத்துக்கொள்ளலாம். இந்த சுழி சக்கரத்தை இறைவன் பல உயிர்களுக்கும் படைத்திருக்கிறார். அறிவீராக சங்கிலும் சுழி, சக்கரத்திலும் சுழி, கைகளிலும் காலிலும் சுழி இருக்கும், உச்சி தலையிலும், முன் நெற்றியிலும் இந்த சுழி இருக்கும். உள்ளங்கை சந்திர மேட்டிலும், விரல்மேல் விரல் அங்குலாஸ்தியிலும், நம் தொப்புளிலும், மார்பு குழியிலும், தொண்டைக் குழியிலும், ஆசன வாயிலிலும், முதுகின் பின்புறமும், மச்சங்களிலும், கண் கருவிழியிலும், நடுநெற்றி கண்ணிலும் இந்த சுழி இருக்கும். உள்ளங்கையிலும், கை கால் முட்டியிலும் இந்த சுழி இருக்கும். மூக்கின் நுனி பகுதியிலும், உள் நாக்கிலும் இந்த சுழி இருக்கும். நம் காதுகளும் திருவல சுழிதான். நாம் சுவாசிக்கும் காற்றும் திருவல சுழியாகத்தான் இயங்குகிறது. வீசுகின்ற சுழல் காற்றானாலும், கடல் அலையானலும் கோமதி சுழியாகத்தான் சுற்றும். தெய்வத்தை மூன்றுமுறை சுற்றி வலம் வந்தால் அது கோமதி சுற்றாகும். அதுவே செல்வ வளம் தரும். கிரிவலமாக இருந்தாலும் தொடர்ந்து மூன்று பௌர்ணமி தலா ஒரு சுற்று வீதம் மூன்று பௌர்ணமி சுற்றினால்தான் கோமதி வல பலன் கிட்டும். எலுமிச்சை கனி உட்பிரகாரமும், மரங்களின் உட்பிரகாரமும், பூமியின் உட்பிரகாரமும் கோமதி சுழி கொண்டதாகும். அசையும், ஆடும், சுற்றும் பொருளெல்லாம் பெரும்பாலும் வலது புறமாகவே சுற்றும். பூமி கூட கோமதிச் சுற்றாகவே உழல்கிறது. வலசுழி பொருள் எல்லாம் சுபமானது. சக்தி வாய்ந்தது என்பதால் தான் வலம்புரி சங்கு, வலம்புரி விநாயகர் என வலபக்க சக்தி அதிகமாக நேசிக்கப்படுகிறது. தெய்வவலமும் வலபக்கமே சுற்றக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் உயிர் எழுத்துக்களிலும் பிற மொழி எழுத்துக்களிலும் சுழியில்லாமல் இருக்காது. விலங்குகளின் உடலிலும், முகத்திலும், பாதங்களிலும் கோமதி வல சுழி உண்டு. கோள்கள் உழல்வதும் பிரிவதும் சேர்வதும் வலச்சுழியோடு தான். இடச்சுழியும் உண்டு. இது ஒரு சில கோள்களேயாகும் எனினும் வலச்சுழி இதிலிருந்து பாதுகாப்பு தரும்.


கோமதி எனும் விதிச்சுழியை நினைவில் பதிய வைத்தால் நினைவாற்றல் பெருகும். சுழியை நெற்றிக்கண்ணில் பதித்து வலபக்க மூளையில் வேண்டுதலை பதிக்க விரைவில் நிறைவேறும். ஹிப்னாடிசம், ஆழ்நிலை மன பயிற்சி, மாந்திரீக சித்து பயிற்சிகளுக்கு இந்த சுழி வடிவமே பெரிதும் உதவும்.


ஜென்மநிலை தன்னோடு சேர்த்து 13 கோடுகளாகும். சாதாரண நிலை மனிதர்கள் (செல்வத்தையும் சுகத்தையும் தேடுவோர்) 13 கட்டங்களின் பெயர்களை தெய்வமாக பாவித்து கோமதி சக்கரத்தை கொண்டு மனதில் வாரம் ஒருமுறையோ முடிந்தால் தினமோ நினைவுகூர்ந்தாலும் போதும். வேண்டுதல் பூர்த்தியாகும். அருள்வாக்கு சொல்ல விரும்புவோர்க்கு 13 ஜென்ம கட்டங்களையும் ஜென்ம கோடுகளாக பாவித்து முறைப்படி பூஜிக்க வேண்டும். செல்வ சந்தோஷத்திற்கும் தோஷம் போவதற்கும் எத்தனிப்போர் முறைப்படி பூஜிக்கவேண்டிய கட்டாயம் இல்லை.

இதை பயன்படுத்தும்போது புல்லரிக்கும் அற்புத பலன்களை பெறமுடியும். அதாவது நாம் என்றால் நம்மோடு மட்டுமோ நம் பெயரோடு மட்டுமோ முடிந்து போவது இல்லை. நம்மை அண்ட சராசரங்களில் இருக்கின்ற கிரகங்களும் நட்சத்திரங்களும், நம் உடலில் ஆட்சி செய்கின்றன. எனவே அவைதான் நாம், நாம் தான் அவை என்ற உணர்வு எப்பொழுதும் இருக்க வேண்டும். நீங்கள் என்றால் எல்லாமே நீங்கள் இல்லை. உங்கள் நாமம் (பெயர்), நட்சத்திரம், லக்கணம், ராசி இவைகளெல்லாம் நீங்களாவீர். உங்கள் நட்சத்திரம் உங்கள் உடல் பாகத்தில் ஒரு இடத்தில் தங்கியுள்ளது. அந்த பாகத்தை நினைவுகூர்ந்தோ அல்லது தொட்டு வணங்குவதோ மிக அவசியமாகும். அப்போதுதான் எந்த மந்திரமும் சக்கரமும் பலன் கிட்டும். மந்திர உரு ஏற்றினாலும் பிரபஞ்சத்தில் கலந்து நமக்கு நன்மை பெற உதவும். திருவல சுழியை நினைத்து ஏவிவிட்டால் தொடுத்தகனை நினைத்த பலனை பெற்றுத்தரும். நம் பூமியில் 27 நட்சத்திரங்கள் ஆளுகின்றன. அது ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு நட்சத்திரத்தை ஒதுக்கி ஆளுகைக்கு உட்படுத்தப்படுகிறது. அது மனிதனின் குறிப்பிட்ட பாகத்தில் நட்சத்திர சக்கரம் மறைந்து செயல்படுகிறது. அவ்விடத்தை கண்டு உணராத வரை ஒரு பரிகாரமும் பலன் தருவதில்லை. நம் நட்சத்திரம் மறைந்துள்ள இடத்தை நம்மை அறியாமலேயே தொட்டு வணங்கி உணர்வை கொடுத்து இருந்தால்கூட பலன் கிடைக்கும். ஏதேச்சையாக தொடுவதைவிட உணர்ந்து தொட்டால்தான் பலன் பெருகும். எனவே அவரவர் நட்சத்திரம் எங்குள்ளது என்பதையும் கோமதி சக்கர புத்தகத்தில் உள்ளது.

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .