ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

 

கோமதி சக்கரத்தால் செல்வம் தொடர்ந்து கிட்ட எளிய முறையை கவனிக்க


( ஆரம்பத்தை தெறிந்துகொள்ள முந்தையகட்டுரைகளை படிக்கவும் )


கோமதி சுழியை வலது கை மோதிர விரலாலும், கட்டை விரலாலும் மட்டும் பிடித்து தங்களுக்கு நிறைந்த செல்வம் வேண்டும்.என மனதளவில் பிரார்த்தித்து விரல்களால் பிடித்த கோமதி சக்கரத்தை தொப்புளில் வைத்து "ஓம் ஸ்ரீம் துண்டி கணபதயே நமக" என மூன்றுமுறை கூறவும். பிறகு தொப்புளில் இருந்து கோமதி சக்கரத்தை மார்பு குழியில் வைத்து ஓம் ஹ்ரீம் நமக என உள்ளுக்குள்ளேயே அழுத்தமாக வேகமாக தொடர்ந்து கூறவும். இந்த மந்திரத்தை எவ்வளவு நேரம் அசதியில்லாமல் செல்வத்தை நினைத்து கூற முடியுமோ கூறலாம். பூஜை அறையிலோ, வெளியிடங்களிலோ இருந்தும் இந்த தியானத்தை செய்யலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மன அமைதியோடு இப்பயிற்சியை செய்யுங்கள் போதும்.


பயிற்சி செய்ய கோமதி சக்கரத்தின் பிரயோஜனம் என்ன? என வினா தங்களுக்கு எழும்பலாம் அல்லவா? அறிவீராக. கோமதி சக்கரம் ஒரு ஆத்மா போன்றது. அதை சரியான இடத்தில் சரியான விரல்களால் பிடித்து தியானிக்கும்போது அந்த ஆத்ம கல் பிரபஞ்ச சக்தியை உறிஞ்சி செல்வ பாகமான மார்புக்குழியில் இறக்கும். ஏற்கனவே நீங்கள் உள்ளேயே செல்வத்தையும் தேவையை பூர்த்தி செய்யும் மந்திரமான ஓம் ஹ்ரீம் என ஒலித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இவை இரண்டும் ஒன்று சேரும்போது செல்வ வளம் சேரும் சூழலை உருவாக்கிவிடும்.


கோமதி சக்கரம் துவாரகா கிருஷ்ணரால் அஷ்ட லட்சுமிக்கு இணையாக படைக்கப்பட்ட ஒன்றாகும். எனவே அதிஷ்டங்களை ஈர்த்துக் கொடுப்பதில் இதற்கு நிகர் இதுதான். இந்த செல்வபூஜையை முதன் முதலில் செவ்வாய்க்கிழமை ராகு கால வேளையில் ஆரம்பிப்பது சிறப்பு, அல்லது வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பிப்பது சிறப்பு. இந்த செல்வ வளத்திற்கான பயிற்சி செய்ய எத்தனிக்கும்போது தொப்புளிலும், மார்பு குழியிலும் சிறிது ஜவ்வாது குழைத்து தடவிக்கொண்டால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.

மனவெறுப்பு விரக்தியோடு இந்த பயிற்சியை செய்யக்கூடாது. மன சந்தோஷ பூரிப்போடு மனதை வைத்துக்கொண்டு படபடப்பின்றி செய்ய வேண்டும். இந்த பயிற்சி முடிவிற்குப் பின் மெல்ல எழுந்து மனதில் செல்வங்கள் நிறைந்த மகாலட்சுமியை கற்பனையிலோ அல்லது போட்டோவிலோ பார்த்து வணங்கவும். பயன்படுத்திய கோமதி சக்கரத்தை தண்ணீரில் கழுவக்கூடாது. தோஷம் மற்றும் நோய் விலக பயன்படுத்தும்போது மட்டும் கழுவி வைக்க வேண்டும். மற்ற வேண்டுதலுக்கும் அடிப்படையில் சொல்லப்பட்ட பெயர் மந்திரம், ராசி நாம மந்திரம், லக்கண நாம மந்திரம், நட்சத்திர உடல் பாகத்தை தொட்டு வணங்கும் முறை யாவும் முடித்து வலது உள்ளங்கையில் உங்களுடைய கோமதி சக்கரத்தை வைத்து இடது கையை வலது கையின் கீழ் வைத்து (புத்தபிரான் கை வைத்திருப்பது போல) உங்கள் கோரிக்கையை மனதில் நினைத்து விருப்பத்தை பூர்த்தி செய்யும் மந்திரமான ஓம் ஹ்ரீம் எனக் கூறி அடுத்து உங்கள் கோரிக்கையை சுருக்கமாகக் கூறி இறுதியில் நமக என கூறி முடிக்கவும். உதாரணமாக உங்களுக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாக வேண்டுமானால் "ஓம் ஹ்ரீம் சர்வ ஜெயமே நமக" என 21 முறை முடிந்தால் 108 முறை கூட கூறலாம். அனைத்து பிரார்த்தனைக்கும் இது பொருந்தும்.

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .