ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

கோமதி சக்கரமும் துவாரகாவும்

நம் பாரத தேசத்தின் மேற்கு கோடியில் குஜராத் மாநிலத்தில் கடலோரமாக உள்ள திருத்தலம் துவாரகை. இங்கு பஞ்ச துவாரகை உள்ளது. அதில் ஒன்று கோமதி துவாரகை ஒன்றும் உண்டு. இந்த துவாரகையில் தான் கோமதி ஆறு கடலோடு கலக்கிறாள். இதன் கரையில்தான் பகவான் கண்ணபிரான் விஷ்வகர்மா உதவியுடன் அரண்மனை அமைத்து ஆண்ட இடம் என கூறப்படுகிறது. இவ்விடத்தில் கண்ணபிரான் அருளோடு கோமதி சக்கரம் உருவானது என்று கூறப்படுகிறது. இந்த கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல், விஷ்ணு சக்ர கல், பிரதீக் கல், நாராயணக் கல், திருவல சுழி கல் என வேறு பெயர்களும் உண்டு.

இந்த கோமதி சக்கர கல்லை வைத்து வணங்கினால் முக்தி தரும் ஷேத்திரங்கள் 7 ஆகும். அவை அயோத்தியா, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சிபுரம், அவந்திகா எனும் உஜ்ஜயினி, துவாரகை ஆகிய ஏழு ஷேத்திரங்களை வணங்கிய பலன் உடன் கிட்டும்.

சொர்ணக்கல் சக்கரம் என்றும் கோமதி சக்கரத்தைக் கூறுவர். கோமதி ஆறு கங்கையில் உருவாகி பிரிந்து இறுதியாக கடலில் கலந்து முடியும் இடம் துவாரகையாகும்.


துவாரகையின் பரம பவித்ரமான கோமதி நதியில் அஷ்டலட்சுமியும் குடிகொண்டதால் தான் இந்நகரமே ஜொலித்தன என புராணம் கூறுகிறது. அஷ்டலட்சுமிக்கு இணையாக பகவானால் உருவாக்கப்பட்ட மேலான செல்வமே கோமதி சக்கரம் என புகழப்படுகிறது. இந்த கோமதி சக்கரத்தின் சக்தியே இதற்கு சாட்சியாகும். கோமதி சக்கரத்தை வைத்து வழிபட்டதால்தான் துவாரகை மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமுடனும் வாழக் காரணம் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.


கோமதி சக்கர கல்லை வைத்து பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள். சங்கோதரா, ஸ்ரீ தீர்த்தா என்ற பெயரும் துவாரகைக்கு உண்டு. இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த தர்மசபை உள்ளது. அவர் கோமதி கல் சுழியின் மீதமர்ந்தே ஆட்சி செய்ததாக ஐதீகம். மேலும் ஸ்வர்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த கல்லை உருவாக்கியதாக ஐதீகம். இந்த கோமதி சக்கர கல் சொர்க்கம் + மோட்சம் இரண்டிற்கும் உதவுகிறது. விஷ்வ கர்மாவால் உருவாக்கப்பட்ட துவாரகையில் கிருஷ்ணன் மக்கள் சங்கடம் போக்கி கொள்ள கோமதி சுழியை பதித்து கொடுத்துள்ளார் என்ற ஐதீகமும் உண்டு.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .