ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

வாஸ்து தோஷம் நீக்கும் கோமதி சக்கரா கல்

சிவப்பு வண்ண பை ஒன்று அதில் பதிமூன்று கோமதி சக்கராகல்லை அந்த பையினுள் வைத்து அதை அப்படியே முடிந்து தலைவாயிற்படியின் உள்பக்கமாக கைபடாத உயரத்தில் மேலே ஒரு ஆணி அடித்து மாட்டி விடவும் .

கோமதி சக்கரத்தை தலைவாயிற்படியின் மேல் மாட்டி வைத்தால் அந்த வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்கள் விலகிவிடும், வாஸ்து தோஷங்கள் பாதிக்காது ,மேலும் வாஸ்து தோஷங்கள் அந்த வீட்டில் இருந்தால் அதை நமக்கு காட்டிக் கொடுக்கும், நாம் விரைந்து சரி செய்து கொள்ள நமக்கு உதவி செய்யும் . பொதுவாக தீய சக்திகள் வீட்டினுள் வராது .

தலைவாயிற்படியின் மேல் ஏன் மாட்டி வைக்கிறோம் என்றால் கோமதி சக்கரா ஒரு புனிதமான ஆத்ம தெய்வீகக்கல் ஆகும் . இந்தக் கல்லை வாயிற்படியின் மேலே மாட்டி வைத்து விட்டாள் அதை கடந்து நமக்கு துன்பம் தரக்கூடிய தீயே பாவங்களும் தோஷங்களும் தீய சக்திகளையும் உள்ளே வர அனுமதிக்காது . நமக்கு உதவி செய்யக்கூடிய நம்முடைய முன்னோர்களுடைய ஆத்மாக்களும், நமக்கு உதவி செய்யக்கூடிய நண்பர்களின் ஆத்மாக்களும், ஞானியரின் ஆத்மாக்கள் மட்டுமே உள்ளே வர அனுமதிக்கும் . தெய்வங்களில் நமக்கு நன்மையை செய்ய வரும் தெய்வங்களுக்கு அந்த கோமதி சக்கரங்கள் அனுமதி கொடுக்கும் .

நவகிரகங்களாக இருந்தாலும் நமக்கு சங்கடம் தரும் அமைப்பில் ஒலிகள் நம் மீது பட அனுமதிக்காது . துன்பம் தரும் கிரகங்களின் தாக்குதலில் இருந்து நம்மை காத்து இரட்சிக்கும் . இந்த கோமதி சக்கரம் இருக்கும் இடத்தில் பொதுவாக விஷ ஜந்துக்கள் உள்ளே வராது . அதேபோல சாதாரணமாக மனிதராக இருக்க கூடியவர்கள் கூட நம் வீட்டினுல் வந்து நாம் வாங்கி வைத்துள்ள பொருட்களை பார்த்து கண் திருஷ்டி வைப்பார்கள் அதுபோல் உள்ளே வரக்கூடியவர்களின் கண் திருஷ்டியாக பட்டது நம்மை பாதிக்க செய்யாது . வெளியில் இருந்து ஒருவர் நமக்கு கண் திருஷ்டி வைத்தாலும் அந்த கண் திருஷ்டியும் நம்மையும் நம் குடும்பத்தையும் பாதிக்க செய்யாது .

இவ்வளவு அற்புதம் வாய்ந்த கோமதி சக்கரா சிவப்பு வண்ண பையில்தான் வைக்க வேண்டும் . சிவப்பு என்பது வசியம் நிறைந்ததாகும் . இந்த சிவப்பு நிறம் நமக்கு நிறைய நன்மைகளை வழங்கக் கூடியதாகவும் தெய்வீக ஆற்றல் சக்திகளை மட்டும் உள்ளே இழுத்து தரக்கூடிய வல்லமை இந்த நிறத்திற்கு உண்டு இதை அனைவரும் பெற்று பயன் பெறுங்கள் நன்றி .

செல் - 9790193903

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .