ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

கோமதி சக்ரா ஆறின் பிறப்பிடம் அதன் சிறப்பு

லக்னோ நகரத்தில் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் கோமதி ஆறு ஓடுகிறது. இது கங்கை நதியின் கிளை ஆறு ஆகும். சுல்தான்பூர் நகரம் இங்குதான் பிரிகிறது. இது பைசாபாத் பிரிவின்கீழ் அமைந்துள்ளது. பைஜ்யனாத் என்னும் இடத்தில் கோமதி சரயு ஆறு சங்கமிக்கிறது. இங்கு பாண்டவர்கள் அம்பிகையை வழிபட்டு பராசக்தியின் கையால் கோமதி சக்கரத்தை பெற்ற ஐதீகம் உண்டு. கோமதி சக்கர கல் அபூர்வமாக இங்கும் கிடைக்கிறது.

கோமதி ஆறு, சரயு நதி இரு நதிகளும் கலந்து சேரும் இடம் கூடிய இரு பாம்புகள் என சொல்லப்படுகிறது. இவ்விரு நதியும் கூடி வெளிவரும் நதி புனிதமான கௌசிகை என்னும் நதியாகும். இதில் தோன்றி வரக்கூடிய கல்லே கோமதி சக்கர கல்லாகும். இந்த கோமதி சக்கரம் கல்லை பயன்படுத்துவதால் பிறப்பு இறப்பால் உண்டாகக்கூடிய பாவங்கள் விலகுகின்றன. சரயு நதி கோமதி நதி இவை இரண்டும் ஒரே சக்தி வாய்ந்தது என்று கூறுவர். இவ்விரண்டிற்கும் அக்னி நதி என்றும் கூறுவர். லக்னோவில் கோமதி நதியும், அயோத்யாவில் சரயு நதியும் (ராமஜென்ம பூமி) உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் கூட அபூர்வமாக கோமதி சக்கரம் கிடைக்கிறது.

அறிக :- கங்கை நதிக்கு யமுனா, கோமதி, ராப்தி, காந்தக், கோசி ஆகிய கிளை நதிகள் வடக்கிலிருந்தும், சாம்பல், சிந்த், பெட்வா, கென், சோன் ஆகிய கிளை நதிகள் தெற்கிலிருந்தும் கங்கை நதியில் கலக்கின்றன. இதில் வடக்கு நதிகள் சொர்க்கமாகவும், தெற்கு நதிகள் மோட்சமாகவும் கருதப்படுகிறது. இவ்விடத்தில் உள்ள அத்தனை நதிகளின் நீர் துளியில் உருவானதே கோமதி திருவல சுழி சக்கரமாகும். இது இறைவனால் உற்பத்தி செய்யக்கூடியதாகும். சாலிகிராமம் எப்படியோ அதைப்போல பன்மடங்கு சக்தி பெற்றது கோமதி சக்கரமாகும்.

அதிஷ்டக் கற்கள் அனைத்திற்கும் முன்னோடியாகவும், தோஷம் நோய் தீர்க்கும் வைத்திய கற்களாகவும், அதிஷ்டங்களை ஈர்த்து கொடுக்கும் வசிய கற்களாகவும் கோமதி சக்கர கல் பயன்படுகிறது. இதை பூஜித்துதான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன்னோடு கோமதி சக்கரத்தை வைத்துக்கொண்டிருந்தாலே போதும். அதிஷ்டம் தன்னால் வரும்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான நைமி சாரண்யம் (லக்னோவில் உள்ளது) இங்கு பெருமாளின் சக்ராயுதம் உருண்டு ஓடி தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டி கொடுத்த இடம் என்று கூறுகிறார்கள். இந்த இடத்தில் சக்ர தீர்த்தம் இன்றும் உள்ளது. அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது கூடவே கோமதி ஆறு நீர்துளிகளில் பட்ட சக்ராயுதம் பட்ட நீர்துளிகள் கோமதி சக்கரமாக மாறியது என்றும் ஐதீகம் உண்டு.

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .