ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

கோமதி சக்ரா ஜென்ம பூஜை அறிக

ஜென்ம பூஜை அறிக. முழு பலன் தரக்கூடியதாகும் .

கல்வி செல்வம் தோஷம் என எதை நீங்கள் செய்ய எத்தனிக்க துவங்கும்முன்னும் முதன் முதல் ஒருமுறை மட்டுமாவது முழு ஜென்ம பூஜையை செய்து வைக்க வேண்டும். இந்த பூஜையை பிறவி எடுத்த மனிதர்கள் யாவரும் செய்ய வேண்டியது முக்கியமாகும். இது தேவையை பெற மட்டுமல்ல. நம் கடமை இதில் அடங்கியிருக்கிறது.

இந்த கோமதி சக்கரத்தை வைத்து நாம் கூறும் முறைப்படி ஒருமுறை மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் கூட பூஜையை கடைப்பிடித்து பாருங்கள். அதில் ஏற்படும் மாற்றம் உங்களை பூஜை செய்வதை நிறுத்த விடாது. அத்தனை லோகங்களையும் வழிபட்டால் என்னவெல்லாம் பலன் கிட்டுமோ அவையெல்லாம் இந்த பூஜை ஒன்றிலேயே கிட்டும். ஆலயம் தேடி ஓடத் தேவையில்லை. உங்களிடமே அத்தனை யோகமும் நிறைந்திருக்கும். இந்த வார்த்தையை யாம் கூறவில்லை. ஆதி சங்கரர் கூறியது.

ஜென்ம பிறவி எடுத்த மனிதன் அவன்தேவை பூர்த்தியாக தவம் செய்ய தேவையில்லை. இந்த 12 கட்ட பூஜையோடு அவன் ஜென்ம நாமத்தையும் தெய்வ அவயம் (கோமதி சக்கரம்) கொண்டு தொழுதால் வேண்டிய பலன் யாவும் கிட்டும் . எனவே முதற்கண் இந்த பூஜையை செய்துகொள்ளுங்கள். பூஜை செய்ய அபிஷேக பொருளோ, புஷ்பமோ, சூடமோ தேவையில்லை. மனதில் நாமத்தை நிலை நிறுத்துங்கள் போதும். இந்த பிரார்த்தனை செய்தால் தர்மமோ, பூஜையோ முழு பலன் தரும். மந்திரங்களும் சித்தியாகும் . ஆலயமும் பரிகாரமும் ஆதரவு தரும் .

இந்த பூஜைகளை வம்சத்தினராவது செய்திருக்க வேண்டும். இந்த பூஜை இல்லாததால்தான் பல குடும்பம் சிரமப்படுகிறது. ஏதோ இந்த பூஜையில் ஒன்றையாவது தெரிந்தோ தெரியாமலோ செய்வதால்தான் ஓரளவிற்கு நிம்மதி பெறுகிறார்கள். எனவே எளிமையான இந்த பூஜையை ஒருமுறை உங்கள் பிறந்த கிழமை அன்று அல்லது பௌர்ணமி அன்று அல்லது வாராவாரம் செய்யுங்கள் பிறவி எடுத்த கடமையை முழுமையாக பூர்த்தி செய்த பலன் கிட்டும். இதை செய்ய பிராப்தம் வேண்டும்.அந்த பிராப்தம் உங்களுக்கு இருப்பதால்தான் இதை பற்றிய விஷயம் அறியவாவது முடிந்தது.

12 கட்டங்களில் மனிதன் வாழ்க்கை தேவையாவும் பூர்த்தியாகி மீண்டும் உதிக்கிறது. பிறந்த மனிதன் இந்த உலகில் ஆத்மாவை தாங்க உடல்கொடுத்த வர்கத்திற்கும், வர்கத்தின் தெய்வத்திற்கும், தெய்வத்தின் தெய்வங்களுக்கும், திதிகளுக்கும், எதிர் துருவங்களுக்கும், ஜெனனத்திற்கும் மரணத்திற்கும் நாம் மரியாதை செய்வதோ நினைவுகூர்வதோ மிக அவசியமாகிறது. ஏனெனில் மேற்கண்ட வழிகளால் தான் உடல் தாங்கிய நம்ஆத்மாவால் சந்தோஷமாக இருக்க முடியும். எனவே ஜென்ம பூஜையான இந்த முறையை எவரொருவர் கோமதி சக்கரம் கொண்டு பூஜிக்கிறார்களோ அவர்கள் பரந்தாமனால் காக்கப்பட்டு சிவபெருமானால் துன்பம் அழிக்கப்பட்டு பிரம்மனால் உருவாக்கப்படுவார்கள். இந்த நிகழ்வு ஒரு குடும்பத்தில் தொடர்ந்து நிகழும் போதுதான் செல்வ செழிப்பான சந்தோஷமும் பெறமுடியும்.

எனவே சர்வ லோகத்திற்கு இணையானதும் ஆன இந்த பூஜையை நினைவுபடுத்தி வணங்கி வேண்டிய பலனைப் பெறவும். உங்களால் ஆசாரமாக இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. இந்த பூஜை உங்களை சிறப்புற வைக்கும். பூஜையை அடுத்து பார்க்கலாம்.

ஜென்ம பூஜை முறை.( முழுமையான பூஜை முறை )

முதல் பூஜை முறை : -

விநாயக பெருமானை மனதில் வணங்கி ஒரு வெள்ளை விரிப்பை போட்டு கிழக்கு திசை பார்த்து அமர்ந்து கொள்ளவும். அடுத்து உங்கள் முன் கொடுத்துள்ள சிவப்பு துணியை விரித்து அதன் மேல் கொடுத்துள்ள பெட்டியை வைக்கவும் . இதனருகில் காசி தீர்த்த பாத்திரத்தை அப்படியே வைக்கவும் .பிறகு பெட்டியுள் கோமதி சக்கரங்களை எண் பார்த்து அதனதன் இடத்தில் வைக்கவும் . மனதை அமைதி படுத்தி முழு கவனமும் பூஜையில் செலுத்தி தொடங்கவும் . ( நாம் எவ்வளவோ பூஜை மந்திரங்கள் சொல்லியிருப்போம் ஆனால் ஆத்ம பூஜைதான் எல்லா சக்தியையும் பெற்றுத் தரும். ஆத்மா என்பது நீங்கள் மட்டும் இல்லை உங்களை ஆளக்கூடியவர்களும் உங்கள் ஆத்மாதான் அவர்களுக்குத்தான் கீழே பூஜை செய்யப்போதிறீர்கள் .


1 . அன்னை பூஜைமுதல் சுழியை எடுத்து வலதுகை ஐந்து முனை விரல்களால் தொப்புளில் வைத்து ஓம் ஹ்ரீம் மாதாவே நமக; என தங்கள் தாயார் முதல் அவர்களின் வழிவந்த அத்தனை மாதாவையும் நான் வணங்குகிறேன் என நினைத்துக்கொள்ளவும். எவ்வாறெனில் என் தாயையும் வணங்கி என் தாய்வழி வந்த அத்தனை தாயாரையும் நான் இக்கணம் வணங்குகிறேன். என்றும் என்னிடம் நீங்காமல் பலனை தாருங்கள் என வேண்டி பிறகு ஓம் ஹ்ரீம் மாதாவே நமக; என 21 முறை கூறவும். பிறகு தொப்புளில் வைத்து ஜெபித்த சுழியை எடுத்த இடத்திலேயே வைத்துவிடவும்.


( உங்களுக்கு இவ்விடத்தில் ஒரு சந்தேகம் உண்டாகலாம் பெற்றோர் இருக்கும் போது அவர்களை நினைத்து வணங்கலாமா என கேள்வி உண்டாகும் . அறிவிராக பெற்றோர் இருந்தாலும் மறைந்தாலும் பகையாகிபோனாலும் அவர்கள் வணங்கத்தக்கவர்களே . நீங்கள் வணங்க போவது அவர்கள் சரீரத்தை அல்ல உங்களோடு கலந்திருக்கும் அவர்கள் ஆத்மாவை என்பதை அறிக . )

2 . தந்தை பூஜைஅடுத்து இரண்டாவது சுழி கல்லை முன்பு கூறியதுபோல எடுத்து மார்பு குழியில் வைத்து என் பிதாவையும் பிதாவழி வந்த அத்தனை பிதாக்களையும் நான் இக்கணம் வணங்குகிறேன். என்றும் என்னிடம் நீங்காமல் பலனைத் தாருங்கள் என வேண்டி பிறகு ஓம் ஹ்ரீம் பிதாவே நமக; என 21 முறை கூறவும். பிறகு மார்பு குழியில் வைத்து செபித்த சுழியை எடுத்த இடத்திலேயே வைத்துவிடவும்.

3 . குரு பூஜைஅடுத்து மூன்றாவதான குரு சுழி சக்கரத்தை எடுத்து தொண்டைக் குழியில் வைத்து என் குருவையும், குரு வழி வந்த அத்தனை குருவையும் நான் இக்கணம் வணங்குகிறேன். என்றும் என்னிடம் நீங்காமல் பலனைத் தாருங்கள் என வேண்டி பிறகு ஓம் ஹ்ரீம் குருவே நமக; என 21 முறை கூறவும். பிறகு தொண்டை குழியில் வைத்து செபித்த சக்கரத்தை எடுத்த இடத்திலேயே வைக்கவும்.

4 . பித்ரு பூஜைஅடுத்து நான்காவது கோமதி சக்கரத்தை எடுத்து நெற்றிக்கண்ணில் வைத்து என் பித்ருக்களையும் பித்ரு வழிவந்த அத்தனை பித்ருக்களையும் நான் இக்கணம் வணங்குகிறேன். என்றும் என்னிடம் நீங்காமல் பலனைத் தாருங்கள் என வேண்டி பிறகு ஓம் ஹ்ரீம் பித்ரு தேவதாய நமக; என 21 முறை கூறவும். பிறகு நெற்றிக்கண்ணில் வைத்து செபித்த சக்கரத்தை எடுத்த இடத்திலேயே வைக்கவும்.


5 . குல தெய்வ பூஜைஅடுத்த ஐந்தாவது திருவல சுழியை எடுத்து உச்சி தலையில் வைத்து (கையை திருவல சுழியில் இருந்து எடுக்கக்கூடாது. பிடித்தவண்ணமே அனைத்து முறைக்கும் இருக்க வேண்டும்) என் குலதெய்வத்தையும், குலவழி வந்த அத்தனை தெய்வங்களையும் நான் இக்கணம் வணங்குகிறேன். என்றும் என்னிடம் நீங்காமல் பலனைத் தாருங்கள் என வேண்டி பிறகு ஓம் ஹ்ரீம் குலதேவதாய நமக; என 21 முறை கூறவும். பிறகு உச்சிதலையில் வைத்த சக்கரத்தை எடுத்த இடத்திலேயே வைக்கவும் .

கடந்த 5 பிராத்தனை செய்த பலனாக பிரம்மலோகத்தை வழிபட்ட பலனைப் பெறுவீர்கள். மேலும் பஞ்சபூதங்களையும் வழிபட்ட பலனைப் பெறுவீர்கள். அம்மாவை வழிபடும்போது நிலத்தை வழிபட்ட பலனும், அப்பாவை வழிபட்டடபோது நீரை வழிபட்ட பலனும், குருவை வழிபட்டபோது காற்றை வழிபட்ட பலனும், பித்ருக்களை வழிபட்டபோது ஆகாயத்தையும், மழைநீரையும் வழிபட்ட பலனும், குலதெய்வத்தை வழிபட்டபோது அக்னியை வழிபட்ட பலுனும் பஞ்ச பூதங்களுக்கு மரியாதை செய்த பலனோடு உடலில் தங்கியுள்ள சக்கராக்களையும் எழுப்பி பிரபஞ்ச ஆற்றல் சக்தி நமக்கு கிடைக்கும்.

6 . பிரம்மா சரஸ்வதி (கல்வி) பூஜைஅடுத்து ஆறாவது சுழி சக்கரத்தை கட்டைவிரல், சுண்டுவிரல் இவ்விரு விரல்களால் மட்டும் எடுத்து (மற்ற மூன்று விரல்களை நீக்கியே வைக்கவும்) தொப்புளில் வைத்து ஓம் நமோ பிரம்ம தேவாய நமக என ஏழு முறை கூறவும். அடுத்து ஓம் ஐம் சரஸ்வத்யை நமக என ஏழுமுறை கூறவும். இதை கூறும்போது வெள்ளை தாமரையில் பிரம்மா சரஸ்வதி அமர்ந்திருப்பதுபோல கற்பனை செய்துகொள்ளவும் அல்லது வெறும் வெள்ளை தாமரையை மனக்கண்ணில் கண்டவாறே மேற்சொன்ன மந்திரங்களைக் கூறவும். பிறகு எடுத்த இடத்திலேயே சுழி சக்கரத்தை அதே இருவிரல்களால் வைத்துவிடவும்.

7 . லட்சுமி நாராயனர் (செல்வம்) பூஜைஅடுத்து 7-வது திருவலசுழி சக்கரத்தை வலது கை ஐந்து விரல்களாலும் பிடித்து மார்பு குழியில் வைத்து செந்தாமரையை மனக்கண்ணில் நினைத்து ஓம் நமோ நாராயணாய நமக என எட்டு முறை கூறி பின்பு ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமக என எட்டு முறை கூறி வணங்கவும். பின்பு எடுத்த இடத்திலேயே திருவல சுழியை அதே ஐந்து விரல்களால் வைக்கவும்.

8 . சக்தி சிவன் (வீரம்) பூஜைஅடுத்து எட்டாவது கட்டைவிரல் மோதிரவிரல் இவ்விரு விரல்களை மட்டும் பயன்படுத்தி (மற்ற விரல்களை நீக்கியே வைக்க வேண்டும்) கோமதி சக்கரத்தை எடுத்து தொண்டைகுழியில் வைத்து நெற்றிக்கண்ணில் ஒரு நெருப்பு எரிவதாக கற்பனை செய்து ஓம் சிவசிவ ஓம் என ஒன்பது முறை கூறி பிறகு ஓம் ஹ்ரீம் பராசக்தியே நமக என 9 முறை கூறி வணங்கவும். பிறகு அதே இருவிரலால் எடுத்த இடத்திலேயே வைத்துவிடவும்.இப்போது தாங்கள் பூஜித்த 6, 7, 8-வது சக்கர வழிபாடு விஷ்ணு லோகத்தை வழிபட்ட பலன் கிடைக்க செய்யும். விஷ்ணு லோக வழிபாடு மனிதனின் தேவைகள் யாவும் பூர்த்தியாக உதவும். கல்வி, செல்வம், வீரம் இவர்களின் பலன்கள் சிறப்பாக அமையும்.

9 . பௌர்ணமி (ஆகாயம்) பூஜைஅடுத்து வருவது சிவலோக வழிபாடாகும். பாக்சில் உள்ள 9-வது திருவல சுழி கோதண்ட தனுசு கல் ஆகும். இது நம் இழப்பை திரும்ப பெற்றுத்தருவதாகும். அதாவது நாம் ஒருவருக்கு தர்மம் செய்வது, பரிதாபப்பட்டு உதவி செய்வது, தானங்கள் நம்மால் ஆனதைக் கொடுப்பது, ஒருவரை மன்னிப்பது, விட்டுக்கொடுப்பது, இறைவனை நம்பி பிரார்த்திப்பது, இறக்கப்படுவது, சவத்தில் கலந்துகொள்வது, சுபநிகழ்வில் ஆசிர்வதிப்பது, இன்னொருவர் பிழைக்க வாய்ப்பு தருவது, விட்டுக்கொடுப்பது ஆக நம்மால் பிறருக்கு உபகாரமாக அமையும் செயல்கள் யாவும் நம் இழப்பாகும். இந்த இழப்பை ஆகாயத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய ஆதி கடவுளர்கள்தான் திருப்பி கைமாறாக நமக்கு உதவி செய்தாக வேண்டும். நாம் இரவையும் அனுபவிக்கிறோம், பகலையும் அனுபவிக்கிறோம். ஆக இந்த லோகத்திற்கு கடன்படுவதால் இந்த உடலை இந்த லோகத்திலேயே அழித்துவிடுகிறோம்.

அதேநேரத்தில் நம் ஆத்மாவால் இன்னொருவரை சந்தோஷப்படுத்தும்போது இறைவனும் பிரபஞ்சமும் நமக்கு கடன்படுகிறது. அவை கைமாறாக நமக்கு உதவி தேவையான நேரத்தில் கேட்கும்போது நமக்கு உதவி செய்யும் (நாம் ஆலயம் சென்று உதவி இறைவனை கேட்கும் பழக்கம் இந்த சூழ்ச்சுமத்தை கொண்டு கையாளப்படுவதேயாகும்) அந்த நேரத்தில் நம் ஆத்மா பிற ஆத்மா ஒன்றையாவது சந்தோஷப்படுத்தியிருந்தால் உதவி கிடைக்கும். பல நேரங்களில் நாம் செய்த உதவி நமக்கு வேண்டினால் கூட கைமாறாக திரும்ப கிடைக்க முடியாமல் போகக் காரணம் நாம் செய்த பிற ஆத்ம இம்சைகள் (பாவம்) தடுப்பதேயாகும். இதை பெற்றே தீரவேண்டுமாகின் கோமதி சக்கரம் போன்ற புண்ணிய ஆத்மா உதவியோடு வணங்கினால் பலனை தட்டாமல் பெறலாம். இந்த பலனை பெறத்தான் பௌர்ணமி எனும் ஆகாய பூஜையாகும். இதை கேது என்கிற வெளிச்சம் சூழ்ந்து ஆட்சி செய்கிறது . இதற்கு அதிபதி சிவன் அவார். மீண்டும் பூஜைக்கு வருவோம். 9-வது கோமதி சக்கர கல்லை கட்டைவிரல் மற்றும் நடுவிரலால் மட்டும் எடுத்து மார்பு குழியில் வைத்து (ஆடை அணிந்திருந்தால் ஆடைக்கு மேலேயே வைக்கலாம்) பிரார்த்திக்கவும். எவ்வாறெனில் நான் செய்த நன்மைகள் பொருட்டு என் விருப்பம் நிறைவேற உதவிகள் கேட்கிறேன். எனக்கு உதவுங்கள் என கூறி முழுநிலவு உங்கள் மார்பு முழுவதும் பிரகாசிப்பதாக கற்பனை செய்து ஓம் ஹ்ரீம் என அடிவயிற்றில் இருந்து ஒரு காற்று மேல்நோக்கி செல்வதுபோல் அழுத்தமாக இந்த மந்திரத்தை எவ்வளவு முடியுமோ (எண்ணிக்கை இல்லாமல்) அவ்வளவு மனதிற்குள்ளேயே சொல்லவும். மந்திரம் சொல்வது வெளியில் சத்தம் வரக்கூடாது. ஆனால் உள்ளுக்குள் மந்திரம் செபிப்பது காற்றால்தான். அந்த சத்தம் நீங்கள் உணர வேண்டும். அந்த அளவு அழுத்தமாக உள்ளுக்குள்ளேயே கூறவும். உடலில் நல்ல மாற்றம் உண்டாகும். சிலருக்கு மருள் வருவதுபோல தோன்றும். நல்லதே நடக்கும். மந்திரத்தின் இறுதியில் நமக இதற்கு மட்டும் சேர்க்க வேண்டாம். அடுத்து எடுத்த இடத்திலேயே 9-வது கல்லை வைத்துவிடவும்.

10 . அமாவாசை (பாதாளம்) பூஜைஅடுத்து 10-வது திருவல சுழியை வலது கை ஐந்து முனை விரல்களாலும் எடுத்து பூஜிக்க வேண்டும். அதற்கு முன் இந்த பூஜை எதற்காக என்று அறிந்துகொள்ளுங்கள்.


நாமும் நம் பரம்பரையும் அறிந்தும் அறியாமலும் பல பாபசாபங்கள் பெற்றிருப்போம். இதற்கு தண்டனையாக இருள் உலகம் எனும் (பாதாளம்) அமாவாசையை ஆளும் அதிதேவதை காளிகாம்பாள் அன்னையின் சேவகன் ராகுபகவான் ஆட்சி செய்கிறார். அவர் அதற்கான தண்டனைகளை மனதையும் உடலையும் பாதிக்கும்படி கொடுப்பார் (இவரிடம் இருந்து தப்பிக்கத்தான் அம்பாள் ஆலயம் தேடி அமாவாசையில் அலைகிறோம். வேண்டுதலைக் கேட்க செல்லக்கூடாது துன்பத்திலிருந்து தப்பிக்க மட்டுமே செல்ல வேண்டும்). இவ்வாறான இருள் உலகத்தின் நீதிபதியும் பிரதிநிதியும் ஸ்ரீ சனி பகவானும் ஆவார். இவர் மனம் வைத்தால்தான் காலபைரவன் வாயில் திறந்து அன்னையை தரிசித்து அருள்பெற முடியும். இல்லாதபோது ராகுபகவானின் ஆட்சியை தடுக்க முடியாது . அப்படி சனி பகவானின் அருளை பெறவே முதல் பூஜை (அம்மா) முதல் 9-வது பூஜை வரை ஒரு மனிதன் ஸ்ரீமன் நாராயணனால் உருவாக்கப்பட்ட கோமதி சக்கரத்தை வைத்து கூறிய முறைகளை நினைவு கூர்ந்தாலே போதும். சனிபகவானின் கருணையால் மன்னிக்கப்பட்டு கால பைரவரால் ஆசிர்வதிக்கப்பட்டு அன்னை பராசக்தியின் ரூபமான ஸ்ரீ காளிகாம்பாள் அருளை பெறமுடியும். ராகு பகவான் அப்போதுதான் மங்கள ராகுவாக மாறி நமக்கு தேய்பிறை நாட்களில் வளங்களை தருவார். அதேபோல் கடந்த 9-வது பூஜையின் அருளால் வளர்பிறையில், இருளுக்கு எதிர்திசையான வெளிச்சத்தை ஆளும் கேது பகவான் நன்மைகளை கொடுப்பார்.


இனி பிராத்தனைக்கு வருவோம். இந்த 10-வது அமாவாசை பூஜைக்கு நான்கு தெய்வங்கள் சம்மந்தம் இருந்ததை அறிந்தீர்கள் (சனி, ராகு, சனி, பைரவர்) இதில் மூல தெய்வமே எல்லா தெய்வங்களையும் சாந்தபடுத்தும். மூல தெய்வம் ஸ்ரீ காலபைரவர் ஆவார். இவரை சரணாகதி அடைந்தாலே அத்தனை தெய்வங்களும் நம்மை மன்னித்துவிடுவார்கள். (இஃது இறைலோகத்தில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சூழ்ச்சுமம் ஆகும். அதனால் தான் எல்லா தெய்வங்களும் சூழ்ந்த சிவாலயத்தில் முகப்பிலேயே கால பைரவர் இருப்பார்).எனவே கால பைரவரை மனதில் நினைத்து வலது கை ஐந்து விரல்களாலும் 10-வது சுழி கல்லை எடுத்து நெற்றிக்கண்ணில் வைக்கவும். அங்கு திரிசூலம் ஒன்று இருப்பதாக கற்பனை செய்துகொள்ளவும். (சூலத்தில் உடுக்கை இருப்பதாக நினைக்கக்கூடாது. எலுமிச்சைக் கனி சொருகி இருப்பதாகவும் நினைக்கக்கூடாது. வெறுமனே மூன்று முனை உள்ள சூலாயுதம் மட்டுமே மனக்கண்ணால் பார்க்கவும்). பிறகு என் பரம்பரையில் வந்த நானும் என்னைச் சார்ந்தவர்களும், சேர்ந்தவர்களும் செய்த, செய்துகொண்டிருக்கும் சகல பாவங்களையும் பெற்ற சாபங்களையும் மன்னித்து அவைகள் மீண்டும் எங்களைத் தாக்காமல் இருக்க சிவ காலபைரவா உன் சூலாயுதத்தால் எப்பொழுதும் எங்களை காத்தருளுங்கள் என மனதில் பிராரத்தித்து ஓம் ஹரீம் மகா காலபைரவாய நமக என்னும் மந்திரத்தை 21 முறை கூறவும். பிறகு எடுத்த இடத்திலேயே சுழி சக்கரத்தை வைத்துவிடவும்.
அறிவீராக :- 9-வது பூஜை சூரியநாராயணனை வழிபட்ட பலனையும் 10-வது பூஜை சிவசூரியனை வழிபட்ட பலனையும் கொடுக்கும். (சூரிய நாராயணன் தட்சினாயன காலத்திற்கு உரியவர். சிவ சூரியன் உத்திராயன காலத்திற்கு உரியவர் என்பதை அறிக).

11 . ஏகாதசி (லாபம்) பூஜைஅடுத்து 11-வது சுழியை இடது கையால் எடுத்து வலது கை உள்ளங்கையில் சுழி மேல் பக்கம் வருமாறு வைத்துக்கொள்ளவும். இந்த சுழியை விழாமல் உள்ளங்கûயால் அழுத்திப்பிடித்து அதே கையால் 12-வது கட்டத்தில் உள்ள திருவலசுழி சக்கரத்தை எடுத்து இடது கை உள்ளங்கையில் வைக்கவும். இப்போது உங்கள் இரு கை உள்ளங்ûயிலும் கோமதி சக்கரம் இருக்கும். இப்போது உங்கள் மார்பு உயரத்திற்கு நேராக கையை நீட்டவும். அதாவது இரு கையையும் நீட்டி இடது உள்ளங்கை மேல் வலது கையின் பின்புறம் தொடும்படி ஒன்றாக கையை நீட்டி பிடித்து வைக்கவும்.

இப்போது வலது உள்ளங்கை ஆகாயத்தைப் பார்த்தார்போல் இருக்கும். அடுத்து நெற்றிக்கண்ணில் யானை வெள்ளை நிறமாக நிற்பதாக கற்பனையில் நினைத்துக்கொள்ளவும். அந்த யானையை இந்திரதேவனாக பாவித்து வணங்கிக்கொண்டு,உங்கள் திசையிலிருந்து உதிக்கும் சூரியன் பாரபட்சமின்றி உலகிற்கு ஒளியை கொடுப்பது போல் உங்கள் கட்டளைப்படி வான் மழையும் பாரபட்சமின்றி பொழிவதுபோல் உங்கள் கட்டளைப்படி வாயுவும் பாரபட்சமின்றி வீசுவதுபோல் தாங்கள் திசை பார்த்து கையேந்தும் யாவரின் குறையையும் பாராமல் கேட்டதை இல்ûயெனாது தட்டாமல் கொடுக்கும் இந்திர தேவரே தங்களை என்னுடன் என் வம்சமும் அடிபணிகிறது. நான் நேசிக்கும் அத்தனை லாபங்களையும் தட்டாமல் தயவுடன் தாருங்கள் .என தயவுடன் வேண்டுதலாக கேட்கவும். இதையே மந்திரமாக பாவித்து 9 முறை திரும்ப திரும்ப கூறவும்.

12 . சிவராத்திரி (சுகம்) பூஜைஅடுத்து 11 பூஜை முடித்து சக்கரத்தை கீழே வைக்காமல் அந்த இரு கையும் அப்படியே தொப்புளுக்குக்கீழ் கொண்டுவந்து வைக்கவும் (புத்தபிரான் கை வைத்திருப்பது போல) கைகள் மாறக்கூடாது வலது கை மேல்புறமேதான் இருக்க வேண்டும். இப்போது மனக்கண்ணில் திருவலசுழியை நினைத்து கீழே உள்ளவாறு பிரார்த்தனை செய்யவும்.

கணங்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் சிவ சக்தியே தங்கள் சக்தியை திருவல சக்கரத்தில் பதித்து சுழியாக்கி கணநாதன் முகமாக்கி அத்திருசுழி கொண்ட கணபதியை முதல் தெய்வமாக வணங்கி கேட்கிறேன். அத்தனை சுகங்களையும் இப்பிறவியிலேயே வேண்டி கேட்கிறேன் தாருங்கள். சங்கு சக்கரமும், உலக சுழியும் தங்கள் வசம் உள்ளதுபோல் நான் பெற நினைக்கும் நியாயமான சந்தோஷங்களைத் தாருங்கள் என இதையே மந்திரமாக பாவித்து 9 முறை கூறவும். பிறகு வலது கையில் உள்ள சக்கரத்தை 11-வது கட்டத்திலும் இடது கையில் உள்ள சக்கரத்தை 12-வது கட்டத்திலும் வைத்துவிடவும். இப்போது 12 கட்ட பூஜையை முடித்துவிட்டீர்கள். இதில் 9, 10, 11, 12 இவை சிவலோகபதவியாகும். இந்த பூஜையில்தான் மனித சாபங்கள் விலகி புன்னியமும் விருப்பமும் பூர்த்தியாகிறது .

13 . ஜென்ம பூஜைஇறுதியாக 13-வது கல்லை வலது கை உள்ளங்கையில் வைத்து மூடிக்கொள்ளவும். மூடிய கையை முகத்திற்கு நேராக வைத்துக்கொண்டு என்னை ஈன்றவர்கள், காத்தவர்கள், வழி நடத்தியவர்கள் அனைவரையும் வணங்கினேன். என்னையும் என்னைச் சார்ந்த பிரபஞ்சத்தையும் வணங்குகிறேன். இனி நான் நினைத்தவையெல்லாம் ஜெயமாகும். எல்லாம் என் வசியமே நம
என 3 முறை கூறவும்.

பிறகு உங்கள் லக்கணம் தெரிந்தால் ஓம் ஐம் (இவ்விடம் லக்கனபெயர் சொல்லவும்) உயிராய நம
உதாரனமாக உங்கள் லக்கணம் மேஷம் என்றால் ஓம் ஐம் மேஷம் உயிராய நம என 9 முறை கூறவும்.

அடுத்து ராசி தெரிந்தால் ஓம் ஸ்ரீம் ராசிபெயர் உடலாய நம என 9 முறை கூறவும். அடுத்து உங்கள் பெயர் மந்திரம் 21 முறை கூறவும்.

ஓம் ஹ்ரீம் தங்கள் பெயர் ஆத்மாவே நம (மேற்க்கண்டதுதான் பெயர் மந்திரம் யாருடைய பெயரையும் மந்திரத்தின் நடுவில் சேர்த்து சொல்லலாம் .இது யாவருக்கும் பொதுவானதாகும்) .

இவ்வாராக பெயர் மந்திரம் 21 முறை கூறவும் பிறது எடுத்த இடத்திலேயே திருவலசுழி சக்கரத்தை வைத்துவிடவும். பிறகு காசி செம்பைத் தொட்டு வணங்கி, பூமியை தொட்டு வணங்கி, நட்சத்திர பாகத்தை உடலில் தொட்டு வணங்கி பூஜையை நிறைவு செய்யவும். இதுதான் ஜென்ம பூஜை..

இந்த முறையை ஒரு சிவராத்திரி அன்று விரதம் இருந்து கண் விழித்து செய்து மறுநாள் அமாவாசை அரிசி மாவில் வெல்லம் கலந்து எறும்புகளுக்கு உணவு தர்மம் செய்து சிவாலயம் சென்று தங்கள் பெயர் நட்சத்திரம் ராசி இவைகளுக்கு அர்ச்சனை செய்துகொள்ளவும். இதை வாழ்வில் என்று உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போது ஒருமுறையாவது செய்யுங்கள். இதைவிட வாழ்வில் சிறந்த பிரார்த்தனைகளோ, தெய்வங்களோ கிடையாது. ஒவ்வொரு உயிரும் இந்த வழிபாட்டை பகுதி பகுதியாக பிரித்து வழிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். தவறில்லை என்றாலும் ஒரு முறையாவது இந்த பூஜையை செய்யவேண்டும். இதுதான் சிவராத்திரியின் உண்மையான பூஜை. இதுதான் பிறவா நிலையும் பிறந்த பயனும் அடைய உதவும்.

எந்த மந்திர சாஸ்திரம் கற்கும் துவக்கத்திலும் தோஷம் போக்கும் துவக்கத்திலும் இந்த முறை பூஜையை கோமதி சக்கரத்தை வைத்து ஒருமுறை செய்தாலே போதும். சக்கரங்கள் உயிர்பெற்று வேண்டிய பலனைத் தரும் பெறலாம். விருப்பப்பட்டால் இதே பெட்டியில் சக்கரங்களை வைத்து பூஜை அறையில் வைத்துவிடலாம். விருப்பப்படும் போது எடுத்து மேற்கூறிய முறை பிரகாரம் பூஜிக்கலாம். ஒருமுறை மட்டும் சிவராத்திரியில் பூஜித்துவிட்டு பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் எந்த கிழமை திதியிலும் எவ்வேளையும் வைத்து பூஜிக்கலாம்.

ஒருமுறைகூட பூஜிக்க நேரமில்லாதவர்கள் கவலைப்பட தேவையில்லை. ஒவ்வொரு கல்லிலும் வலது கை மோதிர விரலை வைத்து அந்தந்த கல்லின் இடத்தில் உள்ள பெயர் முன் ஓம் ஹ்ரீம் என சொல்லி பின்பு அதில் குறிப்பிட்டுள்ள பெயரை சொல்லி இறுதியில் நமக என ஒரு முறை கூறினால் போதும் சக்கரம் உயிர் பெறும். பின்பு 12 சுழியை மட்டும் கொடுத்துள்ள சிவப்பு துணியில் கட்டி எங்காவது மாட்டி வைக்கலாம் அல்லது கல்லாபெட்டி பீரோவில் வைத்துவிட்டால் போதும். பலன் கொடுக்கும்.

13-வது கல்லை பாக்கெட்டிலேயே உங்கள் மந்திரம் கூறி வைத்துக்கொள்ளலாம். பரிபூரண பலன் கொடுக்கும். இந்த எளிய முறை வேற்று மதத்தினருக்கு வசதியாக இருக்கும். இந்த பூஜையை ஒரு முறை முடித்து கங்கை நீர் ஒரு கவரில் வைத்துள்ளோம் அதை பிரித்து கொடுத்துள்ள பாத்திரத்தில் ஊற்றி வீட்டில் உள்ள எல்லோருக்கும் தலையில் தெளித்துக் கொள்ளவும். ஒரு முறை வாங்கிய இந்த கோமதி சக்கரங்களை குடும்பத்தில் உள்ளோர் யார் வேண்டுமானாலும் பூஜை செய்து கொள்ளலாம். யார் பூஜிக்கிறாரோ அவர் லக்கண, ராசி, பெயர் மந்திரம் தான் கூறவேண்டும். அவர் நட்சத்திர பாகத்தை தான் இறுதியில் தொட்டு வணங்கவும், ஒருவேளை ராசி லக்கணம் தெரியவில்லை என்றால் பெயர் மந்திரம் மட்டும் சொன்னால் போதும்.

13-வது சுழியை எடுத்து நெற்றிக்கண்ணில் வைத்து எந்த எந்த பிரச்சனை தீர வேண்டும் என நினைத்தாலும், ஒருவரை வசியத்திற்கு நினைத்து தொடர்ந்து முயன்றாலும் அவ்வாறே நடக்கும்.

இருதியாக அறிக - பன்னிரு ஜோதிர் லிங்கத்தையும், 108 திவ்ய தேசத்தையும் , 51 சக்தி பீடத்தையும் வழிபட்ட முழுமையான பலன் இதில் கிடைக்கும் . விரும்புவோர் தொடர்புகொண்டு பெற்று மகிழலாம் .

 

அனைத்திற்க்கும் தட்சனை ரூபாய் 900 மட்டுமேயாகும்

 

CELL NO - 9790193903

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .