ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
ஜாதகம் - எண்கணிதம் - பஞ்சபட்சி - வாஸ்து - மாந்திரீக பயிற்ச்சி - அதிஷ்ட வழிகள் யாவும் அறியலாம் .
HOME CONTACT US ABOUT US Privacy Palicy Disclaimer policy Youtube Astrology Consult
 
     
 

 

அனைவருக்கும் அடியேனின் பணிவான ஆத்ம வணக்கங்கள்

 

இனிய இறைதர்மத்தை அனைவரும் பெறவும் அறியவும சூரிய ஜோதியின் சிறு துளியாக யானும் மக்கள் வாழ்வில் நல்விளக்கேற்ற உதவவேண்டும் மக்களுக்காக அணையாதீபமாக என் எழுத்துக்களையும் வார்த்தைகளில் கொடுத்து மெழுகுவர்த்தியாய் என்பணி இருந்துகொண்டே இருக்கும் .

எமக்குத் தொழில் எம்மால் இயன்ற அளவு அனைவருக்கும் ஆன்மீகம் தர்மம் ஞானம் இனிய இல்லறம் ஆகிய வாழ்வியல் முறைகளை ஆராய்ந்து வழிகாட்டுவதாகும் . விதியின் பாதையிலிருந்து மதியால் நம் மனபாதைக்கு மாற்றும் இறை கலையை உலகுக்கு கொடுப்பதில் சித்தர்களுக்கு நான் செய்யும் பணி விடையாக கருதுகிறேன். இதில் எனக்கு ஆத்ம சந்தோசமும் அடங்கியுள்ளது .

என் பிறப்பும் குறிப்பிட்ட சில மகான்களின் ஆசியும்

சென்னையில் திருவெற்றியூரில் வடிவுடை அம்மன் ஆலயத்தினுள் நான் பிறந்தேன் தெய்வ வழிபாட்டிற்காக எங்கள் அன்னை சென்றிருந்தபோது அங்கேயே நான் பிறந்தேன் . எனக்கு பெயர் சூட்டியவர் தெய்வத்திரு தவத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆவார் . என் பாட்டனாரின் நண்பராக இருந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தான் எனக்கு பெயரைச் சூட்டியவர் .

நான் சிறுவயதிலேயே அவருடைய சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டேன் . வாழ்க்கையில் இது போல் ஆன்மீக சேவை செய்யவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவர் அவர் தான் . அவருடன் இருந்த காலம் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும் . ஆன்மீகத்தைப் பற்றி நிறைய தகவலை எனக்கு சொல்லிக் கொண்டே இருப்பார் . அரக்கோணம் அருகில் வளர்புரம் என்னும் கிராமத்தில் அவரை அடிக்கடி நானும் என் தாத்தாவும் சந்திக்கச் செல்வோம் எனக்கு பலமுறை ஆசீர்வாதம் செய்த மகான் இவரேயாகும்.

திருவண்ணாமலையில் விசிரி சாமியார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கபட்ட மகான் ஸ்ரீராம்சுரத்குமார் ஐயா அவர்களின் அன்புசீடனாக அவர் உடலோடுவாழ்ந்த காலத்திலே சிலகாலம் தொண்டுசெய்யும் பாக்கியம் பெற்றேன் . அப்போது அவர் உணர்த்தியதின் பேரில் இந்தியாவின் பல புன்னியஷேத்ரங்களுக்கு சென்று தரிசித்து அங்குள்ள மகான்களின் ஆசியையும் பெற்றேன் . தலைப்பாகையின் சூழ்ச்சுமத்தை எமக்கு போதித்தவரும் எளிய வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்தியவரும் இவரேயாவார் . இவர் அருளாளும் இன்று நான் வாழ்கிறேன் .

உத்திரபிரதேசத்தில் உள்ள வாரனாசி எனும் ஸ்ரீகாசியில் தங்கியிருந்தபோது காசிஸ்தல ஞானி மகான் ஸ்ரீ யத்திஜீ மகராஜ் அவர்களின் அருளாசியோடு கோமதிசக்கர வழிபாட்டு ரகசியங்களையும் அதன் அற்புதத்தையும் அறியப்பெற்று உலகிற்க்கு முதன் முதலாக முழுமையாக வெளிப்படுத்தும் அரியவாய்ப்பை பெற்றேன் . எம்மிடம் கோமதி சக்கர வழிபாட்டைப்பெற்று பலரும் பயன்பெற இவரே காரணமாவார் .

என் தெய்வ குருக்கள்

என்னுடைய முதல் குருவாக என் தாயே எனக்கு பிள்ளையார்சுழியாவார். அவர்கள் காட்டிய ஆன்மீக பாதைதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி வருகிறது . முதன் முதலாக நான் மந்திர தீட்சை பெற்றது என் தாயிடம் தான் . ஆன்மீகம் என்ற ஒரு சொல்லை எனக்கு முதன் முதலாக எனக்கு போதித்தவர் என் தாய்தான் அவரே எனக்கு முதல் குரு ஆவார் .
-
காயத்ரி மந்திர பயிற்சி முறையாக முதல் முதலில் தெய்வத்திரு வைத்யநாத ஐயர் அவர்களிடம் பயின்றேன் .
ஓலைச்சுவடிகள் மூலம் நாடி ஜோதிட மூல நுணுக்கங்களை அறிந்தது தெய்வத்திரு பூசமுத்து ஐயா அவர்களிடமும் , மாந்திரீக கலையை கேரளா மாநிலம் திருச்சூரில் மதிப்பிற்குரிய தெய்வத்திரு உன்னி கிருஷ்ணன் பணிக்கர் அவர்களிடமும் , தவத்திரு மகாதேவ ஐயர் அவர்களிடமும் முறையாக பயின்றவன் .


ஜோதிட கலையை ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளாசியோடு அவரின் வழிகாட்டுதலோடு மதிப்புக்குரிய தெய்வத்திரு பரமசிவம் ஐயா அவர்களிடமும் பயின்றிருக்கிறேன் . பல நூல்களின் வாயிலாகவும் என் அறிவை இறையருளால் விருத்தி செய்து கொண்டிருக்கிறேன் . தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் என் ஆன்மீக பணிக்கு பெறிதும் உதவிய ஒரு அற்புத களஞ்சியமாகும் . பஞ்சபட்சி , என் கணிதம், வாஸ்து , அஷ்ட மங்கள பிரசன்னம் ,சோழி பிரசன்னம் , வாசியோகம் , குண்டலினி பயிற்சி ஆகிய தெய்வீக கலைகளையும் முறையாக பயின்றவன் .

பெற்ற விருதுகள்

யுனிவர்சல் ரிசர்ச் அகாடமியில் ( உலகலாவிய ஜோதிட ஆய்வு மையத்தில் ) ஜோதிட திலகம், ஜோதிட சாம்ராட் , எண்கணித வித்தகர் போன்ற விருதுகளை இறையருளால் பெற்றிருக்கிறேன் . முனைவர் பட்டத்திற்க்கும் பரிந்துரை செய்யப்பட்டு அப்பட்டத்தை பெருவதற்க்கான நாளும் குறிக்கப்பட்டது இதனிடையே என்னை இந்தளவிற்க்கு உயர்த்திய மகாகுரு தெய்வத்திரு P.S . பரமசிவம் ஐயா அவர்கள் தெய்வப்பதவி அடைந்ததால் அந்த விருதை பெறவிருப்பமில்லாமல் தவிர்த்துவிட்டேன் . அதன்பின்பு எந்த ஒரு விருதையும் பெற நிராகரித்துவிட்டேன் .


இன்று மக்கள் அளிக்கும் நன்மதிப்பை என் குருமார்களின் திருவடிகளுக்கு காணிக்கையாக்கி அவர்கள் அருளால் அனைவரும் நலம் பெறவேண்டும் இறையருளால் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று என்றென்றும் உங்களுக்காக பிராத்தனை செய்யும் சிறுதொண்டனாக உங்கள் முன் வாழ்கிறேன் .

அன்புடன்
திருஆதித்யா

 

 

 

 

 

 

 

 

ஆன்மிகம் - வளம்பெற வழிகள் - aanmegam - issai tv
*அதிஷ்ட வசியங்கள்
*கோமதி சக்ரா மகிமைகள்
*கிரக பெயர்ச்சி பலன்கள் .